விண்டோஸ் 10 முதல் ஆண்டு வெளியீடு
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

18 ஜூலை
2016
00:00

விண்டோஸ் 10 இயக்க முறைமைக்கான முதல் ஆண்டு மேம்படுத்தல் வரும் ஆகஸ்ட் 2 அன்று வெளியிடப்படும் என்று மைக்ரோசாப்ட் அறிவித்துள்ளது. தற்போது விண்டோஸ் 10 பயன்படுத்தப்பட்டு வரும் 35 கோடி சாதனங்களில், இது இலவசமாக மேம்படுத்தப்படும். இதில் பல புதிய வசதிகள் தரப்படும். குறிப்பாக Windows Ink, மைக்ரோசாப்ட் எட்ஜ் பிரவுசருக்கான எக்ஸ்டன்ஷன் புரோகிராம்கள் மற்றும் கார்டனா செயல்பாடுகள் விரிவாக்கம் எனப் பல வசதிகள் தரப்பட இருக்கின்றன.
2015 ஜூலை 29 அன்று விண்டோஸ் 10, பொது பயனாளர்களுக்கு வெளியானது. விண்டோஸ் 7, விண்டோஸ் 8 மற்றும் 8.1 சிஸ்டம் கொண்ட கம்ப்யூட்டர்களுக்கு, இது இலவசமாகத் தரப்பட்டது. மிகவும் எளிய முறையில் தானாகவே விண்டோஸ் 10 கம்ப்யூட்டர்களில் அமர்ந்து இயங்கத் தொடங்கியது. ஓராண்டுக்குப் பின், அதாவது வரும் ஜூலை 29, 2016க்குப் பின்னர், விண்டோஸ் 10 தேவை என்றால், 119 டாலர் கட்டணம் செலுத்தி மட்டுமே பெற முடியும் என்ற எச்சரிக்கையையும், அறிவிப்பினையும் தொடர்ந்து மைக்ரோசாப்ட் வெளியிட்டது. 2018 ஆம் ஆண்டுக்குள், நூறு கோடி சாதனங்களில் தன் விண்டோஸ் 10 இயக்கத்தினைக் கொண்டு வர வேண்டும் என்ற இலக்குடன் செயலாற்றும் மைக்ரோசாப்ட், இது போன்ற எச்சரிக்கை அறிவிப்புகளை வெளியிட்டு, தன் இலக்கினை அடைய முயற்சிக்கிறது. தற்போது 35 கோடி கம்ப்யூட்டர்களில் விண்டோஸ் 10 இயங்கி வருகிறது. இந்த எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்தும் வருகிறது.
தற்போது தன் ஓராண்டு விழாவில், விண்டோஸ் 10 சிஸ்டம் மேம்படுத்தலுக்கான பைலை வெளியிடுகிறது.
விண்டோஸ் 10 சிஸ்டத்தின் பாதுகாப்பு இதன் மூலமாக பலப்படுத்தப்படும் என மைக்ரோசாப்ட் அறிவித்துள்ளது. தொடக்கத்தில் இருந்தே, மைக்ரோசாப்ட் விண்டோஸ் 10 சிஸ்டம் வெளியீடு, 'ஒரு சேவை' என அறிவித்து இயங்கி வருகிறது. ஒவ்வொரு மேம்படுத்தலிலும், புதிய வசதிகளுடன், ஏற்கனவே தரப்பட்டுள்ளவை மேம்படுத்தப்பட்டு கிடைக்கும். Groove Music, Photos, and Mail & Calendar ஆகியவை கூடுதல் வசதிகளைத் தரும்படி அமைக்கப்படவுள்ளன.
விண்டோஸ் 10 சிஸ்டத்தினை எளிதாகப் பதியும் வழிகள் தரப்படுகின்றன. இதன் மூலம் பள்ளிகளில் இவற்றைப் பயன்படுத்துவது மாணவர்களுக்கு எளிமையாக இருக்கும். விண்டோஸ் 10, பெர்சனல் கம்ப்யூட்டர், லேப்டாப் கம்ப்யூட்டர், ஸ்மார்ட் போன்கள், எக்ஸ் பாக்ஸ் ஒன் மற்றும் ஹோலோ லென்ஸ் இயங்கும் அனைத்திலும் இயங்கும் வகையில், முழுமையான மேம்படுத்தலைப் பெறும்.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X