அன்பான வாசகர்களுக்கு
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

18 ஜூலை
2016
00:00

கம்ப்யூட்டர் மலர் பிரிவிற்கு சில வாசகர்கள் எழுதியுள்ள கடிதங்களின் சாராம்சங்களைக் கீழே தருகிறேன்.
1. என் கம்ப்யூட்டரில் சர்ச் பார், மற்றும் ஹோம் டேப்பினை, என் ஹோம் பேஜில் எப்படி மீண்டும் பெறலாம்?
2. என்னுடைய “Favorites” பட்டியல் மிஸ் ஆகிவிட்டது. இதே போல வேறு ஒன்று எனக்குக் கிடைக்குமா?
3. என்னுடைய டேப்ளட் திடீரென நின்றுவிட்டது. இதனை எப்படி இயக்குவது?
4. என்னுடைய மெயில் அப்ளிகேஷனைத் திறக்க முடியவில்லை. எப்படி திறப்பது?
மேலே தரப்பட்டுள்ளவை எல்லாம், வாசகர்களின் கடிதங்களில் கேட்கப்பட்டுள்ள, ஆலோசனை நாடும் கேள்விகளிலிருந்து எடுக்கப்பட்டவை. இதில் சிலர், மீண்டும் தொடர் கடிதத்தில், இந்த தேதியிட்ட கடிதத்தில் கேட்கப்பட்டுள்ள கேள்விக்கான பதில் இன்னும் வரவில்லை என்று நினைவூட்டும் கடிதமும் அனுப்புகின்றனர்.
ஆனால், மேலே காட்டப்பட்டது போன்ற கடிதங்களில், மிக முக்கியமான தகவல்கள் எதுவும் இல்லை என்பதாலேயே அவற்றிற்கான பதில்களையும் வழங்க இயலவில்லை. கம்ப்யூட்டரில் ஏற்படும் சிக்கல்கள் மற்றும் பிரச்னைகள் குறித்து எழுதுகையில், தயவு கூர்ந்து,
1. தங்களின் கம்ப்யூட்டரில் இயங்கும் ஆப்பரேட்டிங் சிஸ்டம் என்ன என்பதனைக் கட்டாயமாகக் குறிக்க வேண்டும். விண்டோஸ், மேக், ஐ.ஓ.எஸ். பதிப்பு, ஆண்ட்ராய்ட் சிஸ்டம் பதிப்பு ஆகியவற்றைக் குறிக்க வேண்டும்.
2. பிரச்னை குறித்த உங்கள் சாதனம், டெஸ்க்டாப் கம்ப்யூட்டரா, லேப்டாப் கம்ப்யூட்டரா, டேப்ளட் பி.சி.யா, ஸ்மார்ட் போனா எனச் சரியாக விளக்கம் தர வேண்டும்.
3. உங்கள் கேள்வி, சந்தேகம் எந்த அப்ளிகேஷன் புரோகிராம், பிரவுசர், அதன் பதிப்பு எண் எனத் தெளிவாகத் தெரிவிக்க வேண்டும்?
4. நீங்கள் எந்தப் பணியை மேற்கொள்கையில், பிரச்னைக்குரிய நிகழ்வு ஏற்பட்டது என்பதனைத் தெரிவிக்க வேண்டும். பிழைச் செய்தி ஏதேனும் தரப்பட்டால், நீங்கள் அதனைப் பதிவு செய்து வைத்திருந்தால், அதனையும் இணைத்து அனுப்ப வேண்டும்.
5. பிழைச் செய்தி காட்டப்பட்டால், உடனே அதனை ஸ்கிரீன் ஷாட் ஆக எடுத்து வைப்பது, தீர்வினைக் காண உதவும். பிழைச் செய்தியில் உள்ள சொற்களை அப்படியே கூகுள் தேடல் கட்டத்தில் இட்டு தேடினால், உங்களுக்கான தீர்வினை, இந்தப் பிரச்னையை ஏற்கனவே எதிர் கொண்டவர்கள் காட்டும் வாய்ப்புகள் மிக அதிகம். நம் இதழுக்குக் கடிதம் எழுதும் தேவை ஏற்படாது.
6. ஸ்மார்ட் போன் பிரச்னை குறித்து எழுதுகையில், போன் தயாரித்த நிறுவனம், மாடல் எண், அதில் இயங்கும் ஆப்பரேட்டிங் சிஸ்டம் பதிப்பு எண் ஆகியவற்றைக் குறிப்பிடுவது, சரியான தீர்வினைத் தர உதவும்.
வாசகர்கள் மேலே தரப்பட்டுள்ள சில அடிப்படை தகவல்களைத் தங்கள் கடிதங்களில் தருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
- ஆசிரியர் குழு, கம்ப்யூட்டர் மலர்

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X