உலக அளவில் இரண்டாவது இடம் பிடித்த இணைய இந்தியர்கள்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

18 ஜூலை
2016
00:00

சென்ற ஆண்டைக் காட்டிலும் 40% அதிகமாக, இந்தியர்கள் இணையத்துடன் இணைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. உலக அளவில், இணையப் பயனாளர்கள் எண்ணிக்கை உயர்வு (7%) குறைந்து கொண்டு வருகையில், சென்ற மாதத்தில், இணையத்தைப் பயன்படுத்துபவர் எண்ணிக்கை 27.7 கோடியாக உயர்ந்துள்ளது. அமெரிக்காவின் சிலிக்கன் பள்ளத்தாக்கு என அழைக்கப்படும் சான்பிரான்சிஸ்கோவில் இயங்கும் நிறுவனத்தைச் சேர்ந்த மேரி என்பவர் வெளியிட்டுள்ள Internet Trends Report என்னும் அறிக்கையில் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது. முதலிடம் கொண்டிருப்பது சீனா. இந்தியா தற்போது அமெரிக்காவினை மூன்றாவது இடத்திற்கு தள்ளியுள்ளது. உலக அளவில், இணையப் பயனாளர் எண்ணிக்கை உயர்வதில், இந்தியாவின் பங்கு 2% ஆக உள்ளது. இந்தியாவின் இந்த வளர்ச்சியைக் கணித்த, பன்னாட்டு நிறுவனங்கள், இந்தியாவை இலக்காகக் கொண்டு தங்கள் செயல்பாடுகளை அமைத்து வருகின்றன.
கூகுள் அடுத்த நூறு கோடி இணையப் பயனாளர்களின் எண்ணிக்கை இலக்கை எட்ட, இந்தியாவை மையமாகக் கொண்டுள்ளது. பேஸ்புக் தனது இன்டர்நெட் டாட் ஓ.ஆர்.ஜி. திட்டத்தை இந்தியாவில் அறிமுகம் செய்து, பின் அரசின் ஆணைக்கிணங்க விலக்கிக் கொண்டாலும், எப்படியும், வேறு வழியில் ஏதேனும் திட்டத்தை அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆப்பிள் நிறுவனம், பெங்களூருவில், அப்ளிகேஷன் தயாரிக்கும் மையத்தினையும், ஹைதராபாத் நகரில், ஆய்வு மையத்தினையும் அமைக்கிறது.
உலக அளவில், தற்போது 300 கோடி பேர் இணையத்தைப் பயன்படுத்துகின்றனர். உலக ஜனத்தொகையில் இது 42% ஆகும்.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X