ஜூனில் வெளியான ஸ்மார்ட் போன்கள்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

18 ஜூலை
2016
00:00

புதிய ஸ்மார்ட் போன் ஒன்றை வாங்கத் திட்டமிடுகிறீர்களா? சென்ற மாதம் விற்பனைக்கு வந்த ஸ்மார்ட் போன்கள் அனைத்தையும் ஒரு பார்வை பார்த்து விட்டு வாங்கலாமே! சென்ற ஜூன் மாதத்தில் வெளியான ஸ்மார்ட் போன்களில், இரண்டு, புதிய வகையில் வடிவமைக்கப்பட்ட போன்களாக இருந்தன. மற்ற சில மாடல்களில், புதிய வசதிகள் இணைக்கப்பட்டிருந்தன. அவற்றை இங்கு பார்க்கலாம்.
1. எல்.ஜி. நிறுவனம் தன் ஜி5 ஸ்மார்ட் போனை விற்பனைக்குக் கொண்டு வந்தது. இதன் அதிக பட்ச விற்பனை விலை ரூ. 52,990. இதன் மாடுலர் கவசம் அலுமினியத்தில் அமைக்கப்பட்டு புதியதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் பேட்டரி வழுக்கிக் கொண்டு சென்று அமைகிறது. Qualcomm Snapdragon 820 ப்ராசசருடன், 4 ஜி.பி. அளவிலான LPDDR4 RAM மெமரியும், 32 ஜி.பி. ஸ்டோரேஜ் மெமரியும் கொண்டுள்ளது. ஸ்டோரேஜ் மெமரியை 2 டெரா பைட் வரை உயர்த்திக் கொள்ளலாம் என்பது ஓர் அரிய தகவல். இதன் விலை ரூ. 52,990.
2. சோனி நிறுவனம் தன்னுடைய எக்ஸ்பீரியா எக்ஸ் ஏ டூயல் ஸ்மார்ட் போனை, ரூ.20,990 அதிகபட்ச விலையாகக் கொண்டு வெளியிட்டுள்ளது.
3. ஒன் ப்ளஸ் நிறுவனத்தின், OnePlus 3 ஸ்மார்ட் போன் ஜூன் மாதம் வெளியானது. இதில் இரண்டு சிம் பயன்பாடு, ஆப்டிக் அமோலெட் டிஸ்பிளே கொண்ட 5.5 அங்குல அளவிலான திரை, கொரில்லா கிளாஸ் 4 பாதுகாப்பு ஆகியவை இதிலுள்ள மற்ற சிறப்பம்சங்கள். இதன் விலை ரூ.27,999.
4. விரல் ரேகை தொடு உணர்வு தொழில் நுட்பத்துடன் கூடிய மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின், Yu Yunicron என்று பெயரிடப்பட்ட ஸ்மார்ட் போன், ரூ.12,999 அதிக பட்ச விலைக் குறியீடுடன் விற்பனைக்கு வந்துள்ளது. இதில் ஆண்ட்ராய்ட் லாலிபாப் ஆப்பரேட்டிங் சிஸ்டம் இயங்குகிறது.
5. மோட்டோரோலா நிறுவனத்தின், மோட்டோ ஜி வரிசையில், மோட்டோ ஜி4 ஸ்மார்ட் போன், ரூ. 12,499 அதிக பட்ச விலைக் குறியீட்டுடன் வந்துள்ளது. கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு கொண்ட 5.5 அங்குல அளவிலான திரை அனைவரையும் கவர்கிறது. இதன் இன்னொரு சிறப்பு 3000 mAh திறன் கொண்ட பேட்டரியாகும்.
6. ஹானர் (Honor) நிறுவனத்தின் முதல் ஸ்மார்ட் போனாக, ஹானர் 5 சி ஸ்மார்ட் போன், ஆண்ட்ராய்ட் 6 ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடன் வெளியாகியுள்ளது. இதன் விலை ரூ. 10,999. இரண்டு சிம்களை இயக்கும் இந்த போனில் ராம் மெமரி 2 ஜி.பி. இதன் திரை 5.2 அங்குல அளவில் உள்ளது. பேட்டரி, 3,000 mAh திறன் கொண்டதாக உள்ளது.
7. பானாசோனிக் நிறுவனத்தின் P75 ஸ்மார்ட் போன், அதிரடியாக, 5,000 mAh திறன் கொண்ட பேட்டரியுடன் வந்துள்ளது. இதன் அதிக பட்ச விலை ரூ.5,990. திரை 5 அங்குல அளவில் உள்ளது. ஆண்ட்ராய்ட் 5.1 லாலிபாப் சிஸ்டம் இயங்குகிறது.
இவற்றுடன் இன்னும் சில நிறுவனங்களின் சிறப்பான ஸ்மார்ட் போன்கள், ஜூன் மாதத்தில் அறிமுகமாயின. தனித்து நிற்கும் வசதி கொண்ட ஸ்மார்ட் போன்களே மேலே பட்டியலிடப் பட்டுள்ளன.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X