'ஹம்மிங் பேட்' மால்வேர் தாக்கிய ஒரு கோடி ஸ்மார்ட் போன்கள்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

25 ஜூலை
2016
00:00

சீனாவில் இயங்கும் டிஜிட்டல் உலகக் குற்றவாளிக் கூட்டமான யிங்மாப் (Yingmob) உடன் தொடர்பு உள்ள ஹம்மிங் பேட் என்னும் மால்வேர் ஏறத்தாழ ஒரு கோடி ஸ்மார்ட் போன்களைத் தாக்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவற்றைத் தாக்கியதன் விளைவாக, போலியான விளம்பரங்கள் மூலம், இந்தக் குழு பல லட்சக்கணக்கான டாலர் மதிப்பில் வருமானம் பெற்றுள்ளதாகவும் தெரிகிறது. செக் பாய்ண்ட் (Check Point) என்னும் ஆய்வு அமைப்பு இதனைக் கண்டறிந்து அறிவித்துள்ளது. ஒரு கோடி போன்கள் என்பது உறுதி செய்யப்பட்ட தகவல். இந்த மால்வேர் தொடர்ந்து இன்னும் பல ஸ்மார்ட் போன்களைத் தாக்கும் வாய்ப்புகள் உள்ளன.
“நாசத்தை நோக்கி ஹம்மிங் பேட்” என்ற அறிக்கையை, செக் பாய்ண்ட் மால்வேர் ஆய்வு மையம் சென்ற ஜூலை 1 அன்று வெளியிட்டது. முதன் முதலாக, ஹம்மிங் பேட் மால்வேர் புரோகிராமினை, பிப்ரவரி மாதத்தில் இந்த ஆய்வு அமைப்பு கண்டறிந்தது. அப்போதிருந்தே, போலியான விளம்பரங்களைப் பதிவு செய்து, அதன் மூலம் பலருக்கு நிதி இழப்பினை ஏற்படுத்தியது. தற்போது, ஒவ்வொரு மாதமும், 3 லட்சம் அமெரிக்க டாலர் என்ற அளவில், ஹம்மிங் பேட் மால்வேர் அதனை உருவாக்கியவர்களுக்கு தேடித் தருகிறது. இதனை உருவாக்கிய குழுவில் 25 ஊழியர்கள், நான்கு பிரிவாகப் பணியாற்றுகின்றனர் என்றும் தெரியவந்துள்ளது. இவர்கள், தங்களுக்குள்ளாக, தங்கள் மால்வேர் தேடித்தரும் விளம்பர வருமானம் குறித்த ஆய்வு தகவல்களையும் பரிமாறிக் கொள்கிறார்கள் என்பதும் கண்டறியப்பட்டுள்ளது. ஐ.ஓ.எஸ். சிஸ்டத்தைத் தாக்கிய Yispecter என்னும் மால்வேர் புரோகிராமிற்கும் இவர்களே காரணமாக இருக்கலாம் என்று இப்போது சந்தேகம் வந்துள்ளது.
இந்த மால்வேர் புரோகிராம் தாக்கியுள்ள ஸ்மார்ட் போன் கொண்டுள்ள நாடுகளில், சீனா 16 லட்சம் போன்களுடன் முதல் இடம் கொண்டுள்ளது. இந்தியா, 13.5 லட்சம் போன்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. பிலிப்பைன்ஸ் நாட்டில், 5 லட்சத்து 20 ஆயிரத்து 901 போன்களில் இந்த மால்வேர் இடம் பெற்றுள்ளது. அமெரிக்காவில், 2 லட்சத்து 86 ஆயிரத்து 800 போன்களில் இதன் தாக்கம் உள்ளது. இந்த மால்வேர் பெரும்பாலும் கிட்கேட் (50%) இயங்கு போன்களீல் தன் இயக்கத்தினைக் காட்டியுள்ளது. அடுத்த நிலையில், ஜெல்லிபீன், லாலிபாப் மற்றும் ஐஸ்கிரீம் சாண்ட்விச் ஆகியவை உள்ளன.
ஹம்மிங் பேட் தான் குடியேறிய ஸ்மார்ட் போன்களில், தினந்தோறும் 50 ஆயிரம் போலியான அப்ளிகேஷன் புரோகிராம்களை இன்ஸ்டால் செய்கிறது. இந்த அப்ளிகேஷன் மூலமாக, தினந்தோறும் 2 கோடி விளம்பரங்கள் காட்டப்படுகின்றன. இந்த மால்வேர் பாதித்த போன்களில் உள்ள எந்த வகை டேட்டாவும் திருடப்படும் சூழ்நிலையிலேயே உள்ளன என்று இவற்றை ஆய்வு செய்த மையம் எச்சரிக்கை செய்துள்ளது. எனவே, தங்கள் நிறுவன மற்றும் அலுவலகப் பணிகளுக்கு ஸ்மார்ட் போன்களைப் பயன்படுத்துபவர்கள் கவனத்துடன் இருக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது.
மேலும் தகவல்களுக்கு http://blog.checkpoint.com/wp-content/uploads/2016/07/HummingBad-Research-report_FINAL-62916.pdf என்ற இணையதளப் பக்கங்களைப் பார்க்கலாம்.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X