விண்டோஸ் 10 சுருக்கு விசைகள்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

25 ஜூலை
2016
00:00

சென்ற வாரம், விண்டோஸ் 10 இயக்கத்தில் பயன்படுத்தக் கூடிய சில புதிய சுருக்கு விசைகள் குறித்த கட்டுரை ஒன்று வெளியிடப்பட்டது. பல வாசகர்கள், “இவ்வளவுதானா?” என்று கேட்டிருந்தனர். சிலர், விண்டோஸ் 10 சிஸ்டத்தில் புதியதாகத் தரப்பட்டுள்ள சுருக்கு விசைகள் குறித்து முதலில் விளக்கமாகத் தருமாறு கேட்டுக் கொண்டனர். விண்டோஸ் 10 இயக்கத்தில் பல சுருக்கு விசைகள் புதியதாகத் தரப்பட்டுள்ளன என்பது உண்மையே. அவற்றில் சிலவற்றை இங்கு காணலாம்.

விண்டோஸ் + டேப் கீ: (Windows + Tab): இந்த இரு விசைகளையும் அழுத்தினால், நமக்குக் கிடைப்பது, செயல்பாட்டில் இருக்கும் அனைத்து விண்டோக்களும். முந்தைய இயக்க முறைமைகளில், ஆல்ட்+டேப் அழுத்தினால், திறந்திருக்கும் விண்டோக்கள் ஒவ்வொன்றாகக் காட்டப்படும். தற்போது அனைத்து விண்டோக்களும் சிறிய கட்டங்களாகக் காட்டப்படும். நமக்கு தேவைப்படும் விண்டோவில் கிளிக் செய்து பெற்றுக் கொள்ளலாம்.

விண்டோஸ் + கண்ட்ரோல் + டி (Windows+Ctrl+D): உங்களிடம் ஒன்றுக்கு மேற்பட்ட மானிட்டர்கள் இல்லையா? இருந்தால், அவற்றை விண்டோஸ் 10 இயக்கத்தில் இணைத்துப் பயன்படுத்தலாம். அந்தக் குறையை விர்ச்சுவல் டெஸ்க்டாப் உருவாக்குவதன் மூலம் நாம் நிறைவு செய்திடலாம். இந்த மூன்று விசைகளையும் அழுத்தினால், ஒன்றுக்கு மேற்பட்ட டெஸ்க்டாப் திரைகளை உருவாக்கலாம். ஒவ்வொன்றிலும், ஒரே நேரத்தில் மாறுபட்ட கம்ப்யூட்டர் செயல்பாடுகளை மேற்கொள்ளலாம். எடுத்துக் காட்டாக, ஒரு விண்டோவில் கம்ப்யூட்டர் கேம் ஒன்றை விளையாடலாம். இன்னொன்றில், நம் அலுவலகக் கணக்கு வழக்குகளைப் பார்க்கலாம். Windows + Tab அழுத்தி, ஒவ்வொரு டெஸ்க்டாப் விர்ச்சுவல் விண்டோவிற்கு மாறிக் கொள்ளலாம். அல்லது, Windows + Ctrl + left/right என நாம் விரும்பும் விண்டோ இருக்கும் இடத்திற்கேற்ப, வலது அல்லது இடது அம்புக்குறிக்கான கீகளை அழுத்திச் செயல்படலாம். விர்ச்சுவல் டெஸ்க்டாப் விண்டோ ஒன்றை மூட வேண்டும் என்றால், Windows + Ctrl + F4 கீகளைப் பயன்படுத்தலாம்.

விளையாட்டினைப் பதிந்திட (Windows + G): நாம் கம்ப்யூட்டரில் கேம் விளையாடுகையில், நாம் விளையாடுவதைப் பதிந்திட விரும்புவோம். பொதுவாக இதற்கு ஹார்ட்வேர் மற்றும் சாப்ட்வேர் அதிகத் திறனுடன் தேவைப்படும். குறுகிய காலச் செயல்பாட்டினைப் பதிவு செய்திட விண்டோஸ் 10 இயக்கத்தில் வசதி தரப்பட்டுள்ளது. இதற்கு Windows + G கீகளை அழுத்த வேண்டும். இதன் மூலம் மெனு ஒன்று திறக்கப்படும். அல்லது Windows + Alt + G கீகளை அழுத்தி, கேம் இயக்கத்தில் இறுதி 30 விநாடி செயல்பாட்டினைப் பதியலாம். இந்த கால அவகாசத்தினை மாற்றிக் கொள்ளவும் வாய்ப்பு தரப்படுகிறது.

விண்டோஸ் + ஆல்ட் + பிரிண்ட் ஸ்கிரீன்: ஸ்கிரீன் ஷாட் ஒன்றை அமைத்துப் பெற வேண்டுமா? Windows + Alt + Print Screen கீகளை அழுத்துங்கள். அப்போதைய காட்சி மட்டும் உங்களுக்கு படமாகப் பதிந்து கிடைக்கும்.

விண்டோஸ் + எஸ் : (Windows + S) கார்டனா அல்லது தேடல்: விண்டோஸ் 10 இயக்கத்தில், கார்டனா எனப்படும் டிஜிட்டல் பெர்சனல் அசிஸ்டண்ட் டூல், சில நாடுகளில் மட்டுமே இயங்கும் வகையில் தரப்பட்டுள்ளது. நீங்கள் அந்த இடங்களில் இருந்தால், அல்லது அந்த இடங்களுக்குச் சென்றால், விண்டோஸ் + எஸ் கீகளை அழுத்தினால், கார்டனா செயல்படத் துவங்கும். இல்லை எனில், வேறு இடங்களில் இந்த கீகள், தேடல் கட்டத்தினை உங்களுக்கு வழங்கும்.

விண்டோஸ் + எண் (Windows + Number): நமக்கு அடிக்கடி தேவைப்படும் புரோகிராம்களை, நம் டாஸ்க் பாரில் 'குத்தி' (Pin) வைப்பது நம் வழக்கம். இவற்றில் நமக்குத் தேவையானதைத் திறக்கவும் சுருக்கு விசை உண்டு என்பது எத்தனை பேருக்குத் தெரியும். இது விண்டோஸ் 7 சிஸ்டத்திலேயே நமக்குத் தரப்பட்டது. விண்டோஸ் கீயுடன், நமக்குத் தேவைப்படும் புரோகிராம், டாஸ்க் பாரில் புரோகிராம் வரிசையில் எந்த இடத்தில் உள்ளது என்பதற்கேற்ப, அதற்கான எண் கீயைச் சேர்த்து அழுத்தினால், அந்த புரோகிராம் இயக்கப்படும். எடுத்துக் காட்டாக, வேர்ட் புரோகிராம் மூன்றாவதாக இடம் பெற்றிருந்தால், விண்டோஸ் கீ + 3, வேர்ட் புரோகிராமினை இயக்கும்.

விண்டோஸ் + ஏ (Windows + A) அறிவிப்புகளை அறிய: நம் கம்ப்யூட்டர் இயக்கத்திற்குத் தேவையான அறிவிப்புகள் சில நமக்குத் தரப்பட்டிருக்கும். அவற்றை அறிய, சிஸ்டம் ட்ரே சென்று, நோட்டிபிகேஷன் மெனுவினைப் பெற்றுப் பார்க்கலாம். அங்கு நிறைய ஐகான்கள் இருந்தால், இதனைக் கண்டு கிளிக் செய்வது சற்று சிரமமாக இருக்கலாம். இதற்குப் பதிலாக விண்டோஸ் + A கீகளை அழுத்தினால் போதும்.

விண்டோஸ் + ஐ (Windows + I) செட்டிங்ஸ் மெனு பெற:
செட்டிங்ஸ் மெனுவினைப் பெறும் வழிகள் பல இடங்களில் தரப்பட்டுள்ளன. நோட்டிபிகேஷன் மெனு மற்றும் ஆக் ஷன் சென்டர் ஆகிய இடங்களில் காணலாம். ஆனால், உடனே உங்கள் பார்வைக்கு இது வேண்டும் என எண்ணினால், Windows + I கீகளை அழுத்தவும். உடனே செட்டிங்ஸ் மெனு கிடைக்கும். திரையின் ஒளியின் தன்மை, வை பி, புளுடூத் போன்றவற்றில் மாறுதல்களை மேற்கொள்ள இது தேவையாயிருக்கும்.
விண்டோஸ் 10 இயக்கம் முற்றிலும் புதுமையான முறையில் வடிவமைக்கப்பட வேண்டும் என்ற இலக்குடன் தயாரானது. புதுமைகளில் ஓர் அம்சத்தின் சில வசதிகளை மட்டுமே மேலே தந்திருக்கிறோம். இன்னும் பல வசதிகளை அடுத்தடுத்த இதழ்களில் பார்க்கலாம்.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X