வேகம் இல்லா இணையத்திற்கு உரம் சேர்க்கும் பேஸ்புக்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

25 ஜூலை
2016
00:00

இந்தியாவில் சராசரி இணைய வேகம், பன்னாட்டளவில் ஒப்பிடுகையில் மிகவும் குறைவாகவே உள்ளது என பல அமைப்புகள் குற்றம் சாட்டியுள்ளன. ஆசிய நாடுகளான தென் கொரியா, ஜப்பான் மற்றும் ஹாங்காங் ஆகியவற்றில் இணைய வேகம் முதல் நிலையில் உள்ளது. இதில் தென் கொரியா முதலிடம் பெறுகிறது. ஆனால், இந்தியா இந்த வகையில், 114 ஆவது இடத்தில் உள்ளது. இதனை உணர்ந்தே கூகுள் நிறுவனம், இணைய இணைப்பு இல்லாத நிலையிலும் தன் தகவல்களைக் கண்டு பயன்படுத்தும் வழியைத் தந்து வருகிறது. சென்ற டிசம்பரில், “யு ட்யூப் ஆப் லைன்” என்ற வசதியை வழங்கியது.
பேஸ்புக் நிறுவனமும் தற்போது இந்த வழியில் இறங்கியுள்ளது. இணைய இணைப்பில்லாத நேரங்களில் பயன்படுத்தும் வகையிலான ஒரு சோதனைத் திட்டத்தினை ஜூலை 11ல் தொடங்கியது. இதனை “டெக் க்ரன்ச்” (TechCrunch) அறிவித்தது.
வீடியோ பைல்களைத் தரவிறக்கம் செய்வது என்பது, இந்தியா போன்ற வளரும் நாடுகளில், அதிக அளவில் டேட்டாவிற்கென செலவினை மேற்கொள்ள வைத்திடும் ஒரு செயல்பாடாக இருந்து வருகிறது. அல்லது மிக மிக மெதுவாகச் செயல்படும் வேலையாக உள்ளது. பேஸ்புக் இதனை மாற்ற முயற்சிக்கிறது. பேஸ்புக்கின் சில வாடிக்கையாளர்கள் மூலம் இந்த டூல் சோதனை செய்யப்பட்டு வருகிறது. வை பி இணைப்பில் இருக்கையில், வாடிக்கையாளர்கல் தங்கள் சாதனங்களை வீடியோ தளங்களுடன் ஒருங்கிணைத்துவிடலாம். பின்னர், இணைய இணைப்பு இல்லாத போது, பேஸ்புக் தரும் அப்ளிகேஷன் மூலம் இந்த விடியோ பைல்களைப் பார்க்க இயலும். இது விடியோ மூலம் தகவல்களைப் பதிந்து வெளிப்படுத்துபவர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக இருக்கும். வாடிக்கையாளர்களுக்குப் பயன் தரும் வசதியாக இருக்கும். இதனால், புதியதாகக் கிடைக்கும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகமாகும்.
இந்தியா போன்ற நாடுகளில், மொபைல் வழி டேட்டா மற்றும் இணைய இணைப்பு மிகவும் குறுகிய அளவிலேயே உள்ளது. மிகவும் மோசமான விடியோ அனுபவத்தினையே இவர்கள் பெற்று வருகின்றனர். இதை நிவர்த்தி செய்யும் வகையில், பேஸ்புக், இணைய இணைப்பில் இத்தகைய விடியோ பைல்களை ஒருங்கிணைத்துப் பின்னர் தன் அப்ளிகேஷன் மூலம் எந்த நேரத்திலும், இணைய இணைப்பு இல்லாத போதும் பார்க்கும் அனுபவத்தினைத் தர முயற்சிக்கிறது.
அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக, பேஸ்புக் வாடிக்கையாளர்கள் அதிகம் உள்ள நாடு இந்தியாவாகும். 14.2 கோடி பேர்கள் சென்ற மாதம் வரை இதன் பயனாளர்களாக உள்ளனர். இது தொடர்ந்து ஆண்டுக்கு 40% என்ற அளவில் அதிகரித்து வருகிறது. புதிதாக இணைய இணைப்பு பெறுவோர் எண்ணிக்கை 15% உயர்ந்து வருகிறது.
அதே போல, ஸ்மார்ட் போன் பயன்பாடும் மிக வேகமாகப் பரவி வருகிறது. சீனாவிற்கு அடுத்தபடியாக, இதுவரை அமெரிக்கா இரண்டாவது இடத்தைக் கொண்டிருந்தது. இந்த இடத்தில் தற்போது இந்தியா உள்ளது. இந்த காரணங்களே, கூகுள் மற்றும் பேஸ்புக் நிறுவனங்கள், இந்தியா மீது அதிகக் கவனம் கொள்ளக் காரணமாய் உள்ளது. இந்த இரு நிறுவனங்களும் எதிர்கொள்ளும் முதல் தடைக்கல், இங்கு கிடைக்கும் இணைய இணைப்பின் வேகம் தான். அதனைச் சமாளிக்கும் வகையாகத்தான், மேலே கூறப்பட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இதற்காகவே பேஸ்புக் நிறுவனம் Quickfire Networks என்ற விடியோ கம்ப்ரஸ்ஸன் நிறுவனத்தைத் தன் வசப்படுத்தியது.
வருங்காலத்தில், விடியோ வடிவிலேயே சந்தைப் படுத்தும் நிகழ்வுகள் மேற்கொள்ளப்பட இருக்கின்றன. தற்போது உள்ளதைப் போல, மற்ற விடியோ பைல்கள் மற்றும் டெக்ஸ்ட் நடுவே காட்டப்படும் விளம்பரங்கள் போல் இல்லாமல், சந்தைப்படுத்துதலை முதன்மையாகக் கொண்ட விடியோ பைல்கள் தனியாகவே வெளியிடப்படும்.
அத்தகைய சூழ்நிலையில், அவற்றை மொபைல் சாதனங்களில் பார்த்திட இணைய இணைப்பு வேகமாகவும், குறைந்த கட்டணத்திலும் தேவைப்படும். இல்லை எனில், பேஸ்புக் மற்றும் கூகுள் வழங்கும், இந்த வசதிகள் அந்த தேவையை நிறைவேற்றும்.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X