சாம்சங் காலக்ஸி ஜெ 2
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

25 ஜூலை
2016
00:00

மத்திய நிலையில் விலையிட்டு, சாம்சங் நிறுவனம் இரு வாரங்களுக்கு முன் ஸ்மார்ட் போன் ஒன்றை Samsung Galaxy J 2 (BLACK) என்ற பெயரில் வெளியிட்டுள்ளது. இதில் ஆண்ட்ராய்ட் லாலிபாப் ஆப்பரேட்டிங் சிஸ்டம் இயங்குகிறது. இதன் திரை 4.7 அங்குல அளவில், Super AMOLED கெபாசிடிவ் டச் ஸ்கிரீன் ஆக உள்ளது. 540 x 960 பிக்ஸெல் அடர்த்தி கொன்டதாக திரை அமைக்கப்பட்டுள்ளது. 1,3 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் Cortex-A7 Exynos 3475 குவாட் கோர் ப்ராசசர் தரப்பட்டுள்ளது. Mali-T720 ஜி.பி.யு. இணைக்கப்பட்டுள்ளது. Exynos 3475 சிப்செட் தரப்பட்டுள்ளது. இதன் அதிக பட்ச விலை ரூ. 7,600.
இதில் எஸ்.எம்.எஸ்., எம்.எம்.எஸ்., இமெயில், புஷ் மெயில் மற்றும் இன்ஸ்டண்ட் மெசஞ்சர் ஆகிய வசதிகள் தரப்பட்டுள்ளன. எச்.டி.எம்.எல். பிரவுசர் இயங்குகிறது. எம்.பி.4, எம்.பி.3 பிளேயர்கள், போட்டோ மற்றும் விடியோ எடிட்டர் மற்றும் டாகுமெண்ட் வியூவர் ஆகியன இயங்குகின்றன. பதிவு செய்திடும் வசதியுடன் எப்.எம். ரேடியோ தரப்பட்டுள்ளது.
இந்த ஸ்மார்ட் போனில், இரண்டு மைக்ரோ சிம்களை இயக்கலாம். இதன் பரிமாணம் 136.5 x 69 x 8.4 மிமீ. எடை 128 கிராம். இதன் ராம் மெமரி 1 ஜி.பி. ஸ்டோரேஜ் மெமரி 8 ஜி.பி. இதனை மைக்ரோ எஸ்.டி. கார்ட் கொண்டு 128 ஜி.பி. வரை உயர்த்திக் கொள்ளலாம். நெட்வொர்க் இணைப்பிற்கு 3ஜி, 4ஜி, வை பி, ஹாட் ஸ்பாட், புளுடூத், யு.எஸ்.பி., ஆகிய தொழில் நுட்பங்கள் இயங்குகின்றன.
5 எம்.பி. திறன் கொண்ட கேமரா பின்புறமாகவும், 2 எம்.பி. திறன் கொண்ட கேமரா முன்புறமாகவும் இயங்குகின்றன. 30fps திறனுடன் விடியோ பதிவினையும் மேற்கொள்ளலாம். ஜியோ டேக்கிங், டச் போகஸ் மற்றும் முகமறியும் திறன் ஆகிய வசதிகள் இணைந்து கிடைக்கின்றன.
இதன் பேட்டரி 2000 mAh திறன் கொண்ட லித்தியம் அயன் பேட்டரியாகும். தொடர்ந்து 11 மணி நேரம் பேசிட மின் சக்தியை வழங்குகிறது. பாட்டு கேட்பதாக இருந்தால், தொடர்ந்து 41 மணி நேரம் கேட்கலாம்.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X