சென்னை சென்ட்ரலில் இலவச வை பி வசதி
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

01 ஆக
2016
00:00

டிஜிட்டல் இந்தியாவின் பல பரிமாணங்களில், பொதுமக்களுக்கு வை பி எனப்படும் வயர் இணைப்பு இல்லாத இணையத் தொடர்பினை இலவசமாகத் தருவதும் ஒன்றாகும். கூகுள் நிறுவனம், இந்திய ரயில்வேயின் ரெய்ல்டெல் நிறுவனத்துடன் இணைந்து, இந்தியாவின் ரயில் நிலையங்களில் இலவச இணைய இணைப்பு தந்து வருகிறது. அதே வேளையில், மத்திய அரசும் முக்கிய ரயில் நிலையங்களில், இதனைத் தரும் பணியை மேற்கொள்கிறது. அந்த வகையில், சென்ற வாரம் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இந்த வசதியினை ரயில்வே அமைச்சர் பல திட்டங்களின் தொடக்க விழாவுடன் சேர்த்து இதனையும் தொடங்கி வைத்தார்.
சென்ட்ரல் ரயில் நிலையத்திற்குச் செல்லும் மக்கள், ஒவ்வொருவரும், அதிக பட்சம் இந்த இணைப்பினை 30 நிமிடங்கள் இலவசமாகப் பயன்படுத்தலாம். தங்களுடைய ஸ்மார்ட் போனில், வை பி வசதி பெறும் வழியை இயக்கி வைக்க வேண்டும். உடன், போனில் அமைக்கப்பட்டுள்ள பிரவுசர் வழியாக railware.co.in என்ற இணைய தளம் செல்ல வேண்டும். அடுத்து, உங்களுடைய மொபைல் போனின் எண்ணைப் பதிவு செய்திடுமாறு நீங்கள் கேட்டுக் கொள்ளப்படுவீர்கள். பதிந்தவுடன், ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக் கூடிய பாஸ்வேர்ட் ஒன்று உங்களுக்கு எஸ்.எம்.எஸ். ஆக அனுப்பப்படும். அதனைச் சரியாக போனில் பதிவு செய்தால், உடன் நீங்கள் இணைய இணைப்பினப் பெறுவீர்கள். நீங்கள் அதன் பின்னர், 30 நிமிடங்களுக்கு இணையச் சேவையைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X