பேஸ்புக் நிறுவனத்தின் 'அகுயிலா'
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

01 ஆக
2016
00:00

கூகுள் தயாரித்து வெற்றி பெற்ற 'லூன்' (Loon) என்ற பறக்கும் இணைய பலூன்களுக்குப் போட்டியாக, பேஸ்புக் நிறுவனம் அகுயிலா (Aquila) என்னும் ஆளில்லா பறக்கும் சிறிய விமானம் ஒன்றை வடிவமைத்துள்ளது. சோதனை முறையில், அமெரிக்காவின் அரிசோனா மாநிலத்தில், இதனைப் பறக்கவிட்டு, இணைய இணைப்பினை வழங்க முடியும் என்ற முடிவிற்கு வந்துள்ளது. 96 நிமிடங்கள் அரிசோனா பாலைவனத்தில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டு வெற்றி காணப்பட்டது என பேஸ்புக் நிறுவனர், மார்க் தன் பதிவில் தெரிவித்துள்ளார்.
கூகுள் நிறுவனம், வயர் இணைப்பு தர முடியாத இடங்களில், தன் “லூன்” (Loon) திட்டத்தில் மூலம் இணைப்பினை வழங்க முயற்சிகள் எடுத்து அதனை வெற்றிகரமாக சோதனை செய்தும் பார்த்து, சில இடங்களில் அமல்படுத்தியுள்ளது. விண்ணில் பறக்கும் ஹீலியம் நிரப்பப்பட்ட பலூன்களில், இணைய இணைப்பிற்கான சாதனங்கள் பொருத்தப்பட்டு, அவை தரையில் இயங்கும் சர்வர்களுடன் தொடர்பு கொண்டு, அணுக முடியாத இடங்களில் வாழும் மக்களுக்கு இணைய இணைப்பினை வழங்குகிறது.
அதே போல, பேஸ்புக் நிறுவனம் வடிவமைத்துள்ள 'அகுயிலா' என்னும் ஆள் இல்லா இலகுரக விமானம், ஒரு குழுவாக, 60 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து, தங்களுக்குள் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டு, கீழே வாழும் மக்களுக்கு, வயர் இணைப்பில்லாத இணைய தொடர்பினை வழங்க முடியும். இவை மூன்று மாதங்கள் பறந்தபடி இணைய இணைப்பினை வழங்கும். இந்த விமானங்கள், சூரிய சக்தியைப் பயன்படுத்தி கிடைக்கும் மின்சக்தியைப் பயன்படுத்தி பறக்கும் தொழில் நுட்பம் கொண்டவை.
இந்த இரு நிறுவனங்களும், உலகின் எந்த மூலையில் வாழும் மக்களும் இணையத் தொடர்பின்றி இருக்கக் கூடாது என முடிவெடுத்து இயங்கி வருகின்றன.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X