கம்ப்யூட்டரை எந்நேரமும் ஹைபர்னேட் நிலைக்கு மாற்ற
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

01 ஆக
2016
00:00

மாறா நிலையில், விண்டோஸ் சிஸ்டம், உங்கள் கம்ப்யூட்டரில் எந்தப் பணியும் நீங்கள் மேற்கொள்ளாமல் இருந்தால், சில நிமிட கால அவகாசத்தில், கம்ப்யூட்டரைத் 'தூங்கும் (Sleep)' நிலைக்குக் கொண்டு செல்லும். அல்லது, நீங்கள் லேப்டாப் கம்ப்யூட்டரின் திரையை மூடி வைத்தாலும், தூங்கும் நிலையில் வைத்துவிடும். அதன் பின்னர், சில நிமிடங்கள் கழித்து, ஹைபர்னேட் என்னும் 'அசையா நிலைக்குக்' கொண்டு செல்லும். இதற்குப் பதிலாக, எப்போதும் செயல்படாத நேரங்களில், கம்ப்யூட்டரை ஹைபர்னேட் நிலைக்குக் கொண்டு செல்வதைச் சிலர் விரும்பலாம். இதனை எப்படி மேற்கொள்வது எனப் பார்க்கலாம். அதற்கான செட்டிங்ஸ் அமைப்பினை கண்டறிவதும் சற்று சிக்கலான பணி. இங்கே விரிவாகக் காணலாம்.
அதற்கு முன்னர், 'தூங்கும் நிலை' மற்றும் 'அசையா நிலை' குறித்து இங்கு பார்ப்போம். தூங்கும் நிலையில், உங்கள் கம்ப்யூட்டர் மிகக் குறைந்த மின் சக்தியைப் பயன்படுத்தும் நிலைக்குச் செல்கிறது. மீண்டும் செயல்பாட்டிற்கு மிக வேகமாக வர முடியும். ஏனென்றால், இந்த நிலையில் ராம் மெமரிக்கு மின் சக்தி எப்போதும் சென்று கொண்டிருக்கிறது. ஆனால், கம்ப்யூட்டர் அசையா நிலை எனப்படும் ஹைபர்னேட் நிலையில் இருக்கையில், ராம் மெமரியில் உள்ள பைல்கள் அனைத்தும் ஹார்ட் டிஸ்க்கில் எழுதி வைக்கப்படுகிறது. எழுதி வைத்தவுடன், மின் சக்தியினைப் பயன்படுத்துவதை நிறுத்துகிறது. அதனால், மீண்டும் செயல்பாட்டிற்கு வரச் சற்று கூடுதலாக நேரம் எடுத்துக் கொள்கிறது. ஏனென்றால், ஹார்ட் டிஸ்க்கில் தற்காலிகமாக எழுதி வைக்கப்பட்ட பைல்களை, மீண்டும் ராம் மெமரியில் எழுதச் சற்று நேரம் கூடுதலாக வேண்டியுள்ளது. ஆனால், இந்த நிலையில் பேட்டரி தன் சக்தியை இழந்தாலோ, இணைப்பில் உள்ள மின் சக்தி நிறுத்தப்பட்டாலோ, வேறு ஏதேனும் மின் சக்தி வழங்கலில் பிரச்னை ஏற்பட்டாலோ, அப்போது புழக்கத்தில் இருந்த பைல்களில் உள்ள டேட்டாவிற்குப் பாதிப்பு எதுவும் ஏற்படாது.

தூங்கா நிலைக்குப் பின்னர் அசைவற்ற ஹைபர்னேட் நிலை: மாறா நிலையில், வேலை எதுவும் மேற்கொள்ளப்படாதபோது தூங்கும் நிலைக்குக் கம்ப்யூட்டர் செல்கிறது. பின் மேலும் சில நிமிடங்கள் கழித்து அசைவற்ற நிலைக்குச் செல்கிறது. இந்த கால அவகாசத்தினை எப்படி அமைக்கலாம் என்று பார்க்கலாம். அசையா நிலை என்னும் ஹைபர்னேட் நிலைக்கான அமைப்பு வழிகளைக் கண்டறிய கண்ட்ரோல் பேனல் சென்று, Hardware and Sound > Power Options > Change Plan Settings என்று செல்லவும். இந்த செட்டிங்ஸ் அமைப்புகள் அனைத்தும், நாம் கம்ப்யூட்டரில் ஏற்படுத்தியுள்ள “பவர் பிளான்” உடன் இணைந்ததாகவே இருக்கும். இருப்பினும், மாறா நிலையில், கம்ப்யூட்டர் “Balanced” power plan என்ற நிலையில் தான் அமைக்கப்பட்டிருக்கும். நாம் மாற்றினால், அதற்கேற்ற திட்டத்திற்கு மாறிக் கொள்ளும்.
இந்த இடத்தில், உங்கள் கம்ப்யூட்டர் எவ்வளவு நேரம் செயல்படாமல் இருந்தால், தூக்க நிலைக்குச் செல்ல வேண்டும் என்பதனை அமைக்கலாம். உங்களிடம் லேப்டாப் கம்ப்யூட்டர் இருந்தால், பேட்டரியிலிருந்து கிடைக்கும் மின் சக்தியில் செயல்படுகையிலான நிலைக்கு ஓர் அமைப்பும், மின்சக்தி இணைப்பில் செயல்படுவதற்கான ஓர் அமைப்பும் மேற்கொள்ளப்படும். கீழாக உள்ள “Change Advanced Power Settings” என்பதில் கிளிக் செய்திடுக.
“Sleep” பிரிவை விரிக்கவும். அதன் பின்னர், “Hibernate After” என்பதனை விரிக்கவும். இங்கு பேட்டரியில் இருக்கும்போதும், மின்சக்தியுடன் நேரடியாக இணைத்திருக்கும்போதும் எவ்வளவு நேரத்தில், செயல்படா நிலையில் தூங்கச் செல்ல வேண்டும் என்பதனை அமைக்கலாம். இங்கு “0” என செட் செய்தால், உங்கள் கம்ப்யூட்டர் ஹைபர்னேட் எனப்படும் அசையா நிலைக்குச் செல்லாது.
எடுத்துக் காட்டாக, உங்கள் கம்ப்யூட்டரை செயல்படாத போது, 10 நிமிடங்கள் கழித்து தூக்க நிலைக்குச் செல்ல வேண்டும் எனவும், அதன் பின்னர், 60 நிமிடங்கள் கழித்து அசையா நிலைக்குச் செல்ல வேன்டும் என அமைத்தால், முதலில் 10 நிமிடங்கள் கழித்து தூங்கும் நிலைக்கும். அதன் பின்னர், தூக்க நிலைக்குச் சென்ற பின்னர், 50 நிமிடங்கள் கழித்து அசையா நிலைக்கும் செல்லும்.

பேட்டரிக்குச் சிக்கல் ஏற்படுகையில் ஹைபர்னேட் நிலை: பேட்டரிக்கு ஏதேனும் சிக்கல் ஏற்பட்டு, மீள முடியாத நிலைக்கு வந்துவிட்டால், கம்ப்யூட்டர் தானாக அதனை உணர்ந்து, ஹைபர்னேட் என்னும் அசையா நிலைக்குச் செல்லும். இவ்வாறு ஹைபர்னேட் நிலைக்குச் செல்லவில்லை என்றால், பேட்டரி முற்றிலும் தன் சக்தியை இழக்கும் போது, ராம் மெமரிக்கு மின் சக்தி கிடைக்காது. இதனால், ராம் மெமரியில் நாம் அப்போது செயல்படுத்திக் கொண்டிருந்த பைல்களின் டேட்டா அனைத்தும் இழக்கும் நிலைக்குச் சென்றுவிடும். எனவே, பேட்டரிக்குச் சிக்கல் நிலை ஏற்படுகையில், ஹைபர்னேட் நிலைக்குச் செல்லுமாறு, கம்ப்யூட்டரை அமைக்க வேண்டும். இதனை அமைக்க Advanced Settings என்னும் பிரிவில் ஆப்ஷன் கிடைக்கும். இங்கு உள்ள 'Battery' பிரிவினை விரித்து இந்த செட்டிங்ஸ் ஏற்பாட்டினை மேற்கொள்ளலாம். இதில் 'Critical Batter' என்னும் பிரிவில், பேட்டரிக்குத் தீர்க்க முடியாத சிக்கல் ஏற்படுகையில், அது என்ன செய்திட வேண்டும் என்பதனைத் தீர்மானித்து அமைக்கலாம். ஹைபர்னேட் நிலைக்கு மாற்றிக் கொள்ள அமைக்கலாம். அல்லது சிஸ்டம் ஷட் டவுண் செய்திடும் வகையில் அமைக்கலாம். ஆனால், அவ்வாறு ஷட் டவுண் நிலைக்குச் செல்லுமாறு அமைத்தால், நம் டேட்டா அனைத்தும் அழியும் நிலை ஏற்படலாம். எனவே, ஹைபர்னேட் செய்வதுதான் சரியான தீர்வு. இங்கு கிடைக்கும் “Critical Battery Level”, என்பதில், எந்த அளவினை நீங்கள் 'Critical' ஆக எண்ணுகிறீர்கள் என்று அமைக்க வேண்டும். உங்கள் லேப்டாப் கம்ப்யூட்டரின் பேட்டரி விரைவிலேயே தன் சக்தியை இழப்பதாக இருந்தால், உயர்நிலை அளவில் இதனை அமைக்கலாம். ஆனால், மிக மெதுவாகவே பேட்டரி தன் நிலை இழப்பதாக இருந்தால், குறைந்த அளவில் அமைக்கலாம்.

உயர்நிலையில் தூங்கும் நிலை: மேலே தரப்பட்ட ஆப்ஷன்களில் Hybrid Sleep என்று ஒரு நிலையைப் பார்க்கலாம். பெர்சனல் டெஸ்க் டாப் கம்ப்யூட்டர்களில், இது மாறா நிலையில் இயக்கப்பட்டிருக்கும். லேப் டாப் கம்ப்யூட்டர்களில் இந்நிலை அமைக்கப்பட்டிருக்காது. இந்நிலை இயக்கப்பட்டிருந்தால், கம்ப்யூட்டர் ஒவ்வொரு முறை தூங்கச் செல்லும்போதும், ராம் மெமரியில் உள்ளவற்றை ஹார்ட் டிஸ்க்கில் எழுதிப் பின்னர் உறங்கும்.
டெஸ்க்டாப் கம்ப்யூட்டர்களில், லேப்டாப் கம்ப்யூட்டர்களில் உள்ளதைப் போல, இணைந்ததாக பேட்டரிகள் இல்லை என்பதால், இந்த உயர் தூக்க நிலை தரப்பட்டு அமைக்கப்பட்டுள்ளது. லேப்டாப் கம்ப்யூட்டரில் இந்த நிலை அமைக்கப்பட்டால், மிக அதிக திறனுடன் பேட்டரிகள் அமைக்கப்பட வேண்டியதிருக்கும். இட வசதி போதாது என்பதால், அப்படி ஓர் எண்ணம் லேப்டாப் கம்ப்யூட்டர் வடிவமைப்பில் ஏற்பட்டதில்லை. எனவே, பெர்சனல் டெஸ்க்டாப் கம்ப்யூட்டரில் கட்டாயமாக இந்த நிலை அமைக்கப்பட வேண்டும். லேப்டாப் கம்ப்யூட்டரில் இது அமைக்கப்படவே கூடாது.

பவர் பட்டன் அழுத்தும் போதும், திரை மூடியை மூடும்போதும்: பெர்சனல் கம்ப்யூட்டரில் பவர் பட்டனை அழுத்தும் போதும், லேப்டாப் கம்ப்யூட்டரின் மானிட்டர் திரை மூடியை மூடும்போதும், ஹைபர்னேட் நிலைக்குச் செல்லும் வகையில் அமைக்க வேண்டும். இதற்கு கண்ட்ரோல் பேனலில், Hardware and Sound > Power Options > Choose what the power button does எனச் சென்று அமைக்க வேண்டியதிருக்கும். “When I press the power button”, என்ற பிரிவில், பவர் பட்டன் அழுத்தப்படுகையில், கம்ப்யூட்டர் என்ன செய்திட வேண்டும் என்பதனை நிர்ணயம் செய்திடலாம். மாறா நிலையில், உங்கள் கம்ப்யூட்டர் ஷட் டவுண் செய்யப்படும்; அல்லது, அசையா நிலைக்குச் செல்லும் வகையில் அமைத்தால், ஹைபர்னேட் நிலைக்குச் செல்லும்.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X