நூறு கோடி சாதனங்களில் விண்டோஸ் 10 இலக்கு நிறைவேறுமா?
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

01 ஆக
2016
00:00

வரும் 2018 ஆம் ஆண்டுக்குள், தன் விண்டோஸ் 10 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை நூறு கோடி சாதனங்களில் இயக்கப்படும் என மைக்ரோசாப்ட் நிறுவனம் தன் இலக்கினை சென்ற 2015 ஆம் ஆண்டில், ஏப்ரல் மாதத்தில் அறிவித்திருந்தது. அதற்கேற்ப டெஸ்க்டாப் மற்றும் மொபைல் சாதனங்களில், விண்டோஸ் 10 இயக்கத்தினை பதிந்திட, வாடிக்கையாளர்களுக்குப் பல்வேறு அறிவிப்புகளை வழங்கி வந்தது. ஆனால், தற்போது இந்த இலக்கு நிறைவேறும் காலத்தினை நீட்டித்துள்ளது. 2018 ஆம் ஆண்டிற்குள் இந்த இலக்கினை அடைய முடியாது என மைக்ரோசாப்ட் நிறுவன விற்பனைப் பிரிவின் தலைமை அதிகாரி யூசுப் மேதி (Yusef Medhi) தெரிவித்துள்ளனர்.
ஆப்பரேட்டிங் சிஸ்டம் சரித்திரத்தில், விண்டோஸ் 10 சிஸ்டத்திற்குத் தான், அதி வேக வாடிக்கையாளர் எண்ணிக்கை உயர்வு இருந்ததாகவும் யூசுப் மேதி அறிவித்துள்ளார். வாடிக்கையாளர்கள் இது குறித்து திருப்தி அடைந்துள்ளதும் குறிப்பிட்டுச் சொல்லும்படியாக உள்ளது. தற்போது 35 கோடி சாதனங்களில் விண்டோஸ் 10 இயங்கி வருகிறது. தன்னுடைய மொபைல் போன்கள் வடிவமைப்பில் தான் மேற்கொண்டு வரும் சில மாற்றங்களினால், இந்த இலக்கு ஈட்டப்படுவது தள்ளிப் போகிறது என்றும் மைக்ரோசாப்ட் அறிவித்துள்ளது. ஆண்டுக்கு தன் விண்டோஸ் போன்களை 5 கோடி என்ற எண்ணிக்கையில் விற்பனை செய்திருந்தால், 100 கோடி சாதனங்களில் விண்டோஸ் 10 என்ற இலக்கினை 2018ல் அடையலாம். ஆனால், மொபைல் போன் வடிவமைப்பு மற்றும் விற்பனையில் எதிர்பார்த்தது நடக்கவில்லை என்பதால், இலக்கினை அடைவதும் தள்ளிப் போகிறது.
எந்த ஆண்டில், இந்த இலக்கு நிறைவேறும் என்ற புதிய நாள் எதுவும் அறிவிக்கப்படவில்லை.
2014 ஆம் ஆண்டில், நோக்கியா மொபைல் போன் நிறுவனத்தை வாங்கி, மொபைல் போன் தயாரிப்பில் தன்னை ஊன்றிக் கொண்டு இந்த இலக்கினை அடைய முடியும் என மைக்ரோசாப்ட் திட்டமிட்டது. ஆனால், நோக்கியா நிறுவனத்தைக் கைப்பற்றியது வீண் என்ற முடிவிற்கு வந்த மைக்ரோசாப்ட் அதனை விட்டொழித்தது.
மற்ற ஆய்வாளர்கள், இந்த இலக்கு குறித்து தெரிவிக்கையில், மைக்ரோசாப்ட் 2020 ஆம் ஆண்டிற்கு முன்னர், விண்டோஸ் 10 சிஸ்டத்தினை நூறு கோடி சாதனங்களில் பார்க்க முடியாது என்று கருத்து தெரிவித்துள்ளனர். ஏனென்றால், மைக்ரோசாப்ட் அறிவித்த இலவச விண்டோஸ் 10 திட்டத்தின் காலக்கெடு முடிவடைந்து விட்டதால், இனி, விண்டோஸ் 10க்கு மாறுபவர்கள் கட்டணம் செலுத்த வேண்டியதிருக்கும். அதனால், இந்த புதிய சிஸ்டத்திற்கு மாறுவோர் சற்று காலம் எடுத்துக் கொண்டு மெதுவாகவே மாறுவார்கள் என்று அனைவரும் எதிர்பார்க்கின்றனர்.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X