கொரில்லா கிளாஸ் 5 வெளியானது
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

01 ஆக
2016
00:00

மொபைல் போன் திரைகளுக்குப் பாதுகாப்பு வழங்கும் வகையில், கார்னிங் (Corning) நிறுவனம் தயாரித்து வழங்கும் கண்ணாடி கவசமே 'கொரில்லா கிளாஸ்' என்பது. நிறுவனப் பெயருடன் 'கார்னிங் கொரில்லா கிளாஸ்' என அழைக்கப்படுகிறது. குறைந்த தடிமனில், கூடுதல் உறுதியுடன், எடை குறைந்ததாக இது வடிவமைக்கப்படுகிறது. இதனை, இதன் மூலப் பொருள்களின் அடிப்படையில் alkali- aluminosilicate கண்ணாடித் தகடு எனக் கூறுவார்கள். மொபைல் போன், கைகளில் எடுத்துச் செல்லும் மீடியா பிளேயர்கள், கம்ப்யூட்டர்கள் ஆகியவற்றில் இது பயன்படுத்தப்படுகிறது. இது அமெரிக்காவில் Harrodsburg, Kentucky, என்னும் இடத்தில் தயாரிக்கப்படுகிறது. இந்த ஆலையின் கிளைகள் கொரியா மற்றும் தைவான் நாடுகளிலும் உள்ளன. இதனைக் கவசமாகக் கொண்டுள்ள சாதனத்தை 1.6 மீட்டர் உயரத்திலிருந்து இதன் முகப்பு தரையில் படும்படி கீழே போட்டாலும், கீறல் விழாது. உடையாது.
2010 ஆம் ஆண்டில், உலகளாவிய நாடுகளில், 20% மொபைல் போன்களில் (20 கோடி) இது பயன்படுத்தப்பட்டது. 2012ல் இதன் இரண்டாவது பதிப்பு வெளியான பின்னர், நூறு கோடி சாதனங்களுக்கு மேல் இது பயன்படுத்தப்பட்டதாக கார்னிங் நிறுவனம் அறிவித்தது. 2013ல் வெளியான மூன்றாம் பதிப்பு, முந்தையதைக் காட்டிலும் மூன்று மடங்கு கூடுதல் வலுவுடன் இருந்தது. 2014 இறுதியில், இதன் தடிமன் மேலும் குறைக்கப்பட்ட நிலையில் நான்காம் பதிப்பு வெளியானது.
தற்போது இதன் ஐந்தாம் பதிப்பு வெளியாகியுள்ளது. நான்காம் பதிப்பில் வெளியான கொரில்லா கிளாஸ் கொண்ட சாதனத்தை ஒரு மீட்டர் அளவு உயரத்திலிருந்து போட்டால் மட்டுமே உடையாமல் இருக்கும். ஐந்தாம் பதிப்பாக இப்போது வந்துள்ள கொரில்லா கிளாஸ், 1.6 மீட்டர் உயரத்தையும் தாங்க வல்லது. அத்துடன், நம் பார்வைக்குக் கூடுதல் துல்லியத்தையும் தருகிறது. தற்போது உற்பத்தியில் இருக்கும் இந்த வகை கொரில்லா கிளாஸ் கொண்ட மொபைல் போன்கள் இந்த ஆண்டின் இறுதியில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனைத் தயாரித்து அளிக்கும் கார்னிங் நிறுவனம், 165 ஆண்டு பாரம்பரியம் உடையது. தன்னுடைய கண்டுபிடிப்புகளால், மனித வாழ்க்கையில் புதிய வசதிகளையும், பாதுகாப்பினையும் தொடர்ந்து தந்து வருகிறது. நம் அன்றாட வாழ்க்கைக்கு மெருகூட்டும் வகையில் வசதிகளைத் தரும் சாதனங்களை அளித்து வருகிறது.
கொரில்லா கிளாஸ் எப்படி தயாரிக்கப்படுகிறது என்பதைச் சுருக்கமாகச் சொல்கிறேன். இதனைத் தயாரிக்கையில், கண்ணாடித் தகடானது மின்னூட்டணு மாற்றல் முறைக்கு உட்படுத்தப்படுகிறது. மின்னூட்டணு என்பது ஒரு திடப் பொருளில் உள்ள அணுக்களாகும். கண்ணாடித் தகடு உருக்கப்பட்ட பொட்டாசியம் சால்ட் குழம்பில் 500 டிகிரி செல்சியஸ் (930 டிகிரி பாரன்ஹீட்) வெப்பத்தில் மூழ்கடிக்கப்படும். இந்த வெப்பக் குளியல் நடக்கும்போது, கண்ணாடித் தகட்டில் உள்ள சோடியம் மின்னூட்டணுக்கள், பொட்டாசியம் சால்ட் மின்னூட்டணுக்களால் இடம் மாற்றம் செய்யப்படும். ஏனென்றால், உருக்கப்பட்ட நிலையில் மின்னூட்ட அணுக்கள் எளிதாக நகரும் தன்மையைப் பெறுகின்றன.
பொட்டாசியம் சால்ட் மின்னணுக்கள், சோடியம் மின்னணுக்களைக் காட்டிலும் அளவில் பெரியவை. இந்தப் பெரிய அணுக்கள் அதிகமான இடத்தை எடுத்துக் கொள்வதால், கண்ணாடியின் கடினத் தன்மை கூடுகிறது. அதனுடைய மேற்பரப்பில் அழுத்தத் தன்மை அதிகரிக்கிறது. பொதுவாக, இந்த மின்னூட்டணு மாற்றம் கண்ணாடித் தகட்டின் மேற்பரப்பில் மட்டுமே ஏற்படும். கார்னிங் நிறுவனம், இந்த மாற்றம் ஏற்படுகையில், அலுமினியம் ஆக்ஸைடையும் இணைப்பதால், அணு மாற்றம் மேற்பரப்பினைச் சற்று அதிகமாகவே ஊடுறுவிச் சென்று கூடுதலான எண்ணிக்கையில் சோடியம் அணுக்களை இடம் மாற்றுகிறது. இதனால், கண்ணாடித் தகட்டில் ஆழமாகவும் அதன் வலிமைத் தன்மை உயர்கிறது. இதன் மூலம் கண்ணாடித் தகட்டின் மேற்பரப்பிற்கு வலிமை கூடுதலாகிறது. இது கீறல் விழுவதையும், எளிதில் உடையும் தன்மையையும் தடுக்கிறது. இதனால், அன்றாட வாழ்வில் நாம் நம்மை அறியாமல் இதனைக் கீழே போடும்போது, அது உடையாமல் இருக்கிறது.
மேலும், அடுத்த நிலையில், கார்னிங் நிறுவனத்திற்கே உரித்தான “fusion forming” என்னும் நிலைக்கு இந்த கண்ணாடித் தகடு உட்படுத்தப்படுகிறது. இந்த தயாரிப்பு முறையில், கண்ணாடித் தகடானது, பெரிய உலோகக் குழாய்களுக்கிடையே 1000 டிகிரி செல்சியஸ் வெப்பத்தில் செலுத்தப்படுகிறது. இதற்கென உருவாக்கப்பட்ட குழாய், கண்ணாடித் தகட்டினை தடிமன் குறைந்ததாக மாற்றுகிறது. இவ்வாறு தடிமன் குறைக்கப்படுவதனால்தான், மொபைல் போனின் டச் ஸ்கிரீனில் மேலாக இதனை அமைக்க முடிகிறது. தொடு உணர்வும் மொபைல் திரைக்கு மாற்றப்படுகிறது. திரையும் பாதுகாப்பாக அமைகிறது.
இதனைச் சோதனைக்காக, வேண்டும் என்றே, தரையில் தூக்கி எறிந்தால், மொபைல் போன் திரையினை மாற்றக் குறைந்தது
ரூ. 6,500 வரை செலவழிக்க வேண்டியதிருக்கும். ஜாக்கிரதை!

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X