விண்டோஸ் கீ சுருக்கு விசைகள்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

08 ஆக
2016
00:00

விண்டோஸ் இயக்க முறைமையில், விண்டோஸ் கீ என்பது, விண்டோஸ் இலச்சினை கொண்ட கீயாகும். மைக்ரோசாப்ட், இதனை முழுமையாகத் தன் விண்டோஸ் 10 சிஸ்டத்தில் பயன்படுத்தியுள்ளது. அவற்றை இங்கு பார்க்கும் முன்னர், இந்த கீ எப்போது அறிமுகமானது என்று பார்க்கலாம்.
இந்த கீ முதன் முதலில், 1994 ஆம் ஆண்டு, Microsoft Natural keyboard என்னும் கீ போர்டில் அறிமுகமானது. இதனை Windows key, startkey, logo key, flag key, super key, command key or flag, home எனப் பல பெயர்களில் அழைக்கின்றனர். இரண்டு விண்டோஸ் கீகளும், ஒரு மெனு கீயும் இணைக்கப்பட்டு தரப்பட்டன. எனவே, அதுவரை 101/102 கீகள் கொண்டதாக இருந்த பெர்சனல் கம்ப்யூட்டர் கீ போர்ட் அமைப்பு, இதன் பின்னர் 104- / 105 ஆக மாறியது.
ஒரு விண்டோஸ் கீ இடது பக்கமாக அமைக்கப்பட்டிருந்த கண்ட்ரோல் (Ctrl) மற்றும் ஆல்ட் (Alt) கீகளுக்கு இடையே அமைக்கப்பட்டது. இன்னொரு விண்டோஸ் கீ, சில கீ போர்ட்களில் மட்டும் வலது புறமாக இடம் பெறும் ஆல்ட் கீ அருகே அமைக்கப்பட்டது. சில கீ போர்ட்களில், இது இடம் பெற்றிருக்காது. குறிப்பாக லேப்டாப் கம்ப்யூட்டர்களில் இருக்காது. விஸ்டா சிஸ்டத்திற்கென வடிவமைக்கப்பட்ட கீ போர்டில், அனைத்து கீகளுக்கும் கீழே நடுவில் அமைக்கப்பட்டது. இந்த விண்டோஸ் கீயினை இணைத்து, விண்டோஸ் 10 சிஸ்டத்தில், பல செயல்பாடுகளுக்கான சுருக்கு விசைகள் தரப்பட்டுள்ளன. அவற்றில் சிலவற்றை இங்கு காணலாம்.
Windows key + A: Action Center திறக்கப்படும்.
Windows key + S: கார்டனா செயல்பாடு உள்ள இடங்களில், டெக்ஸ்ட் அமைக்க இது பயன்படும். இதே செயல்பாட்டினை Windows key + Q கீகளும் மேற்கொள்ளும்.
Windows key + C: கார்டனா நாம் சொல்வதைக் கேட்டு செயல்படும் தன்மை கொண்ட கம்ப்யூட்டரில் இந்த கீகள் இணைப்பு செயல்படும்.
இது "Hey, Cortana" என்பதற்கு இணையானது.
Windows key + E: பைல் எக்ஸ்புளோரர் திறக்கப்படும்.
Windows key + F: Windows 10 Feedback Hub திறக்கப்படும்.
Windows key + Ctrl + F: நெட்வொர்க்கில் இணைக்கப்பட்டுள்ள பெர்சனல் கம்ப்யூட்டர்களை இந்த மூன்று கீகள் இணைப்பு தேடித் தரும்.
Windows key + G: Game bar திறக்கப்படும்.
Windows key + H: Share sidebar திறக்கப்படும்.
Windows key + I: Settings menu திறக்கப்படும்.
Windows key + K: புதிய புளுடூத் சாதனங்களை இணைப்பதற்காக Connect sidebar இயக்கப்படும்.
Windows key + L: உங்கள் கம்ப்யூட்டர் லாக் செய்யப்படும்.
Windows key + O: திரை அமைப்பு லாக் செய்யப்படும்.
Windows key + P: Presentation/projection sidebar திறக்கப்படும்.
Windows key + R: டாஸ் கட்டளைகளுக்கான Run window இயக்கப்படும்.
Windows key + U: Ease of Access மையம் செயல்பாட்டிற்கு வரும்.
Windows key + Spacebar: உள்ளீடு செய்வதற்கான மொழி மற்றும் கீ போர்ட் வடிவமைப்பினைத் தேர்ந்தெடுக்க.
Windows key + (+) or (----):மேக்னிபயர் பெருக்கமும், குறைப்பும் இந்த இரு கீகளைக் கொண்டு மேற்கொள்ளலாம்.
Windows key + Esc: மேக்னிபயர் இயக்கத்தினை முடித்து வைக்கும்.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X