சாம்சங் கேலக்ஸி ஏ 510 எப்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

08 ஆக
2016
00:00

அனைவரும் தன் ஸ்மார்ட் போன்களை வாங்க வேண்டும் என்ற நோக்குடன், அனைத்து நிலை விலைகளிலும் சாம்சங் தன் ஸ்மார்ட் போன்களை வெளியிட்டு வருகிறது. கேலக்ஸி ஏ வரிசையில் அண்மையில் Samsung Galaxy A 510 F என்ற ஸ்மார்ட் போனை, அதிக பட்ச விலை ரூ. 21,900 எனக் குறியிட்டு விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது.
ஆண்ட்ராய்ட் லாலிபாப் ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடன் வெளியாகியுள்ளது இந்த போன். இதனை மார்ஷ்மலாய் சிஸ்டத்திற்கு மேம்படுத்திக் கொள்ளலாம். இதில் இரண்டு நானோ ஜி.எஸ்.எம். சிம்களை இயக்கலாம். இதன் பரிமாணம் 144.8 x 71 x 7.3 மிமீ. எடை 153 கிராம். இதன் திரை 5.2 அங்குல அளவில், கொரில்லா கிளாஸ் 4 பாதுகாப்புடன் அமைக்கப்பட்டுள்ளது. இதன் டிஸ்பிளே Super AMOLED வகையுடன் கெபாசிடிவ் டச் ஸ்கிரீன் ஆகத் தரப்பட்டுள்ளது. 1080 x 1920 பிக்ஸெல் அடர்த்தி கொண்டது. மல்ட்டி டச் வசதியும் உள்ளது. இசைப் பிரியர்களுக்கு 3.5 மிமீ ஆடியோ ஜாக் மற்றும் லவுட் ஸ்பீக்கர் கொண்டுள்ளது. இதன் ராம் மெமரி 2 ஜி.பி. ஸ்டோரேஜ் மெமரி 16 ஜி.பி. 128 ஜி.பி. வரை திறன் கொண்ட மைக்ரோ எஸ்.டி. கார்டைப் பயன்படுத்தலாம்.
நெட்வொர்க் இணைப்பிற்கு ஜி.பி.ஆர்.எஸ்., எட்ஜ், 3ஜி, 4ஜி, வை பி, புளுடூத், என்.எப்.சி., யு.எஸ்.பி. தொழில் நுட்பங்கள் இயங்குகின்றன. இதன் பின்புறக் கேமரா 13 எம்.பி. திறன் கொண்டது. விநாடிக்கு 30 பிரேம் இயக்கும் விடியோ திறன் கொண்டது. முன்புறக் கேமரா 5 எம்.பி. திறன் கொண்டதாக உள்ளது.
ஏழு வகை சென்சார்கள் இந்த ஸ்மார்ட் போனில் இயங்குகின்றன.
எஸ்.எம்.எஸ்., எம்.எம்.எஸ்., இமெயில், புஷ் மெயில், இன்ஸ்டண்ட் மெசஞ்சர் வசதிகள் தரப்பட்டுள்ளன. எச்.டி.எம்.எல். பிரவுசர் தரப்பட்டுள்ளது. போட்டோ மற்றும் விடியோ எடிட்டர் மற்றும் டாகுமெண்ட் எடிட்டர் ஆகியன தரப்பட்டுள்ளன. இதன் அதிக பட்ச விலை ரூ. 21,900.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X