ரூ.5,499க்கு இன்டெக்ஸ் ஸ்மார்ட் போன்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

08 ஆக
2016
00:00

இன்டெக்ஸ் நிறுவனம் புதிய மொபைல் ஆப்பரேட்டிங் சிஸ்டமான Sailfish OS 2.0 இணைந்த ஸ்மார்ட் போன் ஒன்றை Intex Aqua Fish என்ற பெயரில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. ஏப்ரல் மாதம் எதிர்பார்க்கப்பட்ட இந்த ஸ்மார்ட் போன், தற்போது சந்தைக்கு வந்துள்ளது. இதன் அதிக பட்ச விலை ரூ. 5,499 என்பது குறிப்பிடத்தக்கது. இதன் சிறப்பம்சங்கள்: ஹை டெபனிஷன் ஐ.பி.எஸ். டிஸ்பிளே கொண்ட, 1280 x 720 பிக்ஸெல் அடர்த்தியுள்ள 5 அங்குல அளவிலான திரை, 1.3 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் குவால்காம் Snapdragon 212 (MSM8909) ப்ராசர். இதனுடன் Adreno 304 GPU இணைப்பு. 2 ஜி.பி. அளவிலான ராம் மெமரி, 16 ஜி.பி. அளவிலான ஸ்டோரேஜ் மெமரி தரப்பட்டுள்ளது. ஸ்டோரேஜ் மெமரியை மைக்ரோ எஸ்.டி. கார்ட் கொண்டு அதிகப்படுத்திக் கொள்ளலாம். இதில் இரண்டு சிம்களை இயக்கலாம். இதில் பின்புறமாக எல்.இ.டி. ப்ளாஷ் இணைந்த, 2 எம்.பி. திறன் கொண்ட கேமரா தரப்பட்டுள்ளது. இதன் பரிமாணம் 142.4x72x9.6 மிமீ. எடை 150 கிராம். நெட்வொர்க் இணைப்பிற்கு 4ஜி, 3ஜி, வை பி, புளுடூத் 4.0 மற்றும் ஜி.பி.எஸ். ஆகிய தொழில் நுட்பங்கள் இயங்குகின்றன. இதன் பேட்டரி 2,500 mAh திறன் கொண்டது. இளஞ்சிகப்பு வண்ணத்தில் வந்துள்ள் இந்த ஸ்மார்ட் போனின் விலை ரூ. 5,499. இ பே வர்த்தக இணைய தளத்தில் இது கிடைக்கிறது.
Sailfish என்பது புதியதொரு மொபைல் ஆப்பரேட்டிங் சிஸ்டமாகும். இதனை உருவாக்கிய ஜோலா அமைப்புடன் ஒப்பந்தம் மேற்கொண்டு இன்டெக்ஸ் நிறுவனம் தன் ஸ்மார்ட் போனில் இதனை முதன் முதலாக இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் நிறை குறைகள் இந்த போன் பயன்பாட்டிற்கு வந்த பின்னர் தெரியவரும்.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X