இந்திய இணையம் சில மைல் கற்கள்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

22 ஆக
2016
00:00

1995க்கு முன் பொதுமக்களுக்கு இணைய இணைப்பு வசதி வழங்கப்படவில்லை. இராணுவம், ஆய்வு நிறுவனங்கள் ஆகியவை மட்டுமே பயன்படுத்தி வந்தன. 1995 சுதந்திர தினத்தன்று, ஆறு நகரங்களில், தொலைபேசி வழியாக இணைய இணைப்பு வழங்கப்பட்டது. அப்போது, ஒரு மணி நேரப் பயன்பாட்டிற்கு ரூ.35 கட்டணம். குறைந்தது 100 மணி நேரத்திற்கு செலுத்த வேண்டும். இப்போது இருப்பது போல பிரவுசர் பயன்பாடு இல்லை.
1996: செய்திப் பத்திரிக்கைகள் சில தங்களுக்கென இணைய தளங்களை அமைத்துக் கொண்டன.
1997: தன் ஹாட் மெயில் தளத்தினை மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு, அதன் உரிமையாளரும் இந்தியருமான சபீர் பாட்டியா, 40 கோடி டாலருக்கு, மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு விற்றார்.
1998: தனியார் நிறுவனங்கள் இணைய சேவை வழங்க உரிமை வழங்கப்பட்டு, அவை செயல்படத் தொடங்கின.
1999: அதிக எண்ணிக்கையில் டாட் காம் நிறுவனங்கள் தொடங்கப்பட்டன.
2000: பாராளுமன்றத்தில், தகவல் தொழில் நுட்ப சட்டம் 2000 நிறைவேற்றப்பட்டு அமலுக்கு வந்தது. யாஹூ மற்றும் எம்.எஸ்.என். போன்ற வெளிநாட்டு இணைய நிறுவனங்களின் இந்தியப் பிரிவுகள் தொடங்கப்பட்டன.
2001: இந்தியன் ரயில்வே தன் டிக்கட் விற்பனைக்கான இணைய தள சேவையைத் தொடங்கியது.
2002: இந்திய இணைய சேவை நிறுவனங்கள், கடலுக்கடியில் செல்லும் இணைப்பு கேபிள்களை அமைக்க அனுமதி வழங்கப்பட்டது.
2003: இந்தியாவின் முதல் விமானப் பயணச் சீட்டு தரும் இணைய தளம் தொடங்கப்பட்டது.
2004: தொலை தொடர்பு துறை இணைய சேவை குறித்த கொள்கைக் குறிப்பினை (Broadband Policy) வெளியிட்டது. பி.எஸ்.என்.எல். நிறுவனம் பிராட்பேண்ட் சேவையினைத் தொடங்கியது.
2005: ஆர்குட் சமூக வலைத்தள சேவை தொடங்கப்பட்டது.
2006: பேஸ்புக் தன் இந்திய சேவைப் பிரிவினைத் தொடங்கியது.
2008: இந்தியா தன் 10 சாட்டலைட்களை ஒரே நேரத்தில் விண்ணில் செலுத்தியது. ஆப்பிள் ஐபோன் இந்தியாவில் வெளியானது. கூகுள் செய்தி சேவை தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளத்தில் தொடங்கப்பட்டது.
2010: இரண்டு ஆண்டுகள் இழுத்தடித்த பின்னர், 3ஜி ஸ்பெக்ட்ரம் ஏலம் விடப்பட்டது. ட்ராய் அமைப்பு தன் தேசிய பிராட்பேண்ட் குறித்த கொள்கைக் குறிப்பினை வெளியிட்டது.
2011: தங்கள் மொபைல் எண்ணை மாற்றாமல், வேறு சேவை நிறுவனங்களுக்கு மாற்றிக் கொள்ளும் வசதியை அரசு அறிவித்தது.
2012: உலக அளவில், இணையம் பயன்படுத்து
வோர் எண்ணிக்கை 250 கோடியானது.
2013: மே மாத இறுதியில், இந்தியாவில் இணைய சேவை வழங்கும் நிறுவனங்களின் எண்ணிக்கை 161 ஆக இருந்தது. அப்போது முன்னணியில் இருந்தவை பி.எஸ்.என்.எல்., பார்தி ஏர்டெல், எம்.டி.என்.எல்., ஹாத்வே ஆகியவை ஆகும்.
2014: 19.8 கோடி இணையப் பயனாளர்களுடன், இந்தியா இந்த வகையில் மூன்றாவது இடத்தை, சீனா மற்றும் அமெரிக்க நாடுகளுக்கு அடுத்தபடியாக இடம் பெற்றது.
2015: ரிலையன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து, பேஸ்புக் தன் இன்டர்நெட்.ஓ.ஆர்.ஜி. திட்டத்தைத் தொடங்கியது. பின் நாளில் இதற்கு எதிர்ப்பு ஏற்பட்டதால், திட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.
2016: பிப்ரவரி 8ல், ட்ராய் மக்கள் விரும்பிய புரட்சிகரமான முடிவை எடுத்தது. இணைய சேவை வழங்குபவர்கள், இணைய தள இணைப்பிற்கிடையே பாகுபாட்டினை ஏற்படுத்தி, வேறுபாடான கட்டணங்களை விதிப்பதை தடை செய்தது. இதன் மூலம் Net Neutrality எனப்படும் 'அனைவருக்கும் சமமான இணைய சேவை' உறுதி செய்யப்பட்டது.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X