டில்லியில் ஏ.சி.டி. இன்டர்நெட்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

22 ஆக
2016
00:00

பைபர் ஆப்டிக் வயர் இணைப்பு மூலம் இணைய சேவை வழங்குவதில் புகழ் பெற்ற, பெங்களூருவைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் Atria Convergence Technologies Pvt. Ltd. நிறுவனம், சென்ற வாரம் புது டில்லியில் தன் சேவையைத் தொடங்கி உள்ளது. தொடக்கமாக, டில்லியில் Safdarjung, Green Park, Kalkaji, Malviya Nagar, GK Part II மற்றும் Okhla ஆகிய இடங்களில் இதன் சேவை கிடைக்கிறது. தொடர்ந்து மற்ற இடங்களுக்கும் விரிவு படுத்தப்பட
உள்ளது.
இதன் அடிப்படை திட்டத்தில், மாதம் ஒன்றுக்கு ரூ. 999 கட்டணத்தில், நொடிக்கு 30 மெகா பிட்ஸ் வேகத்தில் இணைய இணைப்பினை வழங்குகிறது. 50 ஜி.பி. வரை இந்த வேகத்தில் இணைப்பு கிடைக்கும். பின்னர், 512 கிலோ பிட்ஸ் வேகத்தில் இணைப்பு கிடைக்கும். இதன் உயர்நிலை திட்டத்தில் மாதம் ஒன்றுக்கு ரூ.1,999 கட்டணத்தில், 100 எம்.பி.பி.எஸ். வேகமும், கூடுதல் டேட்டா அளவாக 150 ஜி.பி.யும் வழங்கப்படுகிறது. இந்நிறுவனம், 125 மெகா பிட்ஸ் வேகத்திலும் இணைப்பினை வழங்குகிறது.
ஏ.சி.டி. நிறுவனம், புதுமையாக FTTB என்னும் தொழில் நுட்பத்தினைப் பயன்படுத்தி இணைய இணைப்பினை வழங்குகிறது. Fiber to the Building என்னும் இந்த தொழில் நுட்பத்தில், பைபர் கேபிள் ஒரு குறிப்பிட்ட இடம் வரை, பகிர்ந்து கொள்ளும் அடிப்படையில் கொண்டு செல்லப்பட்டு, பின்னர், அதிலிருந்து சிறிய அலுவலகங்கள், வீடுகள் ஆகியவற்றிற்கு இணைய இணைப்பு வழங்கப்படும். இதனை Fiber to the Basement என்றும் கூறுவார்கள். பைபர் ஆப்டிக் கட்டமைப்பில், கூடுதல் வேகத்தில் இணைய இணைப்பினை வழங்க முடியும்.
ஏ.சி.டி. நிறுவனம், வயர் வழி இணைய இணைப்பு சேவை தரும் நிறுவனங்களில், இந்தியாவில் நான்காவது இடத்தைக் கொண்டுள்ளது. கர்நாடகா, ஆந்திர பிரதேசம், தெலுங்கானா, தமிழ்நாடு மற்றும் டில்லி ஆகிய மாநிலங்களில், முக்கிய நகரங்களில் இந்நிறுவனம் இணைய சேவை வழங்கி வருகிறது. அதிக பட்ச வேகம், சரியான கட்டணம் மற்றும் வாடிக்கையாளர் சேவை ஆகியவற்றுக்கு மக்களிடையே பேராதரவு பெற்ற நிறுவனமாக இயங்குகிறது. 15 லட்சத்திற்கும் மேற்பட்ட வீடுகளுக்கு இணைய இணைப்பு தந்துள்ளதாக இந்நிறுவனத்தின் அறிக்கை கூறுகிறது.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X