பெர்சனல் பிரேக்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

22 ஆக
2016
00:00

போக்கமான் கோ விளையாட்டினால் நமக்குப் பிரச்னை ஏற்படுவதுடன், அதற்கான இணைய இணைப்பு டேட்டா மற்றும் பேட்டரி மின் சக்தி ஆகிய இரண்டும் வீணாவது தடுக்க இயலாது. இது நம் நாட்டிற்குத் தேவை இல்லாத ஒன்று. முனையிலேயே இந்த விளையாட்டை அரசு கிள்ளியெறிய வேண்டும்.
ஆர். தங்கராஜ், கோவை.

சாதனங்களுக்குள் மட்டுமே டிஜிட்டல் கேம்ஸ் விளையாட முடியும் என்பதை மாற்றி, வெளியே சென்றும் விளையாடலாம்; அதுவும் விர்ச்சுவல் ரியாலிட்டி தரும் சுவராஸ்யமான உருவங்களைத் தேடி அலையலாம் என்பது, டிஜிட்டல் விளையாட்டில் புதிய பரிமாணமாகும். முடிந்தவர்கள், பாதுகாப்பாக போக்கமான் கோ விளையாட்டினைத் தரவிறக்கம் செய்து விளையாடலாம்.
எஸ். தாமஸ், நாமக்கல்.

அண்மையில் வெளியான அறிவியல் கட்டுரைகளில், கொரில்லா கிளாஸ் குறித்த தங்களின் கட்டுரையே மிக மிகச் சிறப்பானது என்பேன். எளிய தமிழில் மிக அழகாக, மின்னூட்டணு மாற்றம் குறித்து விளக்கி இருப்பது, அனைவரும் இதனைப் புரிந்து கொள்ளும் வகையில் உள்ளது. எப்படி மின்னூட்டணுக்கள் தங்கள் இடத்தை மாற்றிக் கொள்கின்றன என்று படத்துடன் விளக்கி இருப்பது சிறப்பாக உள்ளது. ஒரு ஸ்மார்ட் போனின் திரையில் உள்ள அடுக்குகளைத் தமிழில் விளக்கத்துடன் படமாகக் காட்டியிருப்பதுவும் பாராட்டத்தக்கது. இந்தக் கட்டுரையை அப்படியே எடுத்து, பள்ளி மாணவர்களின் பாடப் புத்தகங்களில் வைக்கலாம். அல்லது இது போன்ற பல கட்டுரைகளைத் “தினமலர்” தொகுத்து நூலாக வழங்கலாம். எழுதியவருக்கு பாராட்டுதல்களும் நன்றியும்.
பேரா டாக்டர் எம். குருசாமி, விருதுநகர்.

இந்திய மொழிகளில் இமெயில் முகவரிகள் பயன்பாடு சாத்தியப்பட்டால், அது பல மொழிகள் பயன்படுத்தும் நம் மக்களுக்கு பெரிய ஊக்குவிப்பாக இருக்கும். நிச்சயம் இணையப் பயன்பாடும், மின் அஞ்சல் பயன்பாடும் அதிகரிக்க ஆரம்பிக்கும்.
என். காவேரி செல்வி, தஞ்சாவூர்.

குரோம் பிரவுசர் பயன்பாட்டுக் குறிப்புகளில், பி.டி.எப். கோப்பில் தரப்பட்டுள்ள பாஸ்வேர்டை நீக்கி அமைப்பது, முகவும் பயனுள்ள டிப்ஸ் ஆகும். அரசு அலுவலகங்கள் நமக்கு அனுப்பும் சில ஆவணங்களில் அவற்றுக்கான பாஸ்வேர்ட் மறந்து போகிறது. இது போன்ற வசதிகளைக் கொண்டு பாஸ்வேர்டை நீக்கிவிட்டால், மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது எளிதாகிறது. டிப்ஸுக்கு நன்றி.
கே. மூர்த்தி, திருப்பூர்.

குறைந்த கட்டணத்தில், வேகத்துடன் கூடிய இணைய இணைப்பினை பேஸ்புக், கிராமப் புறங்களில் வழங்க இருப்பது மிகவும் மகிழ்ச்சியான செய்தி. நாம் அனைவரும் இதனைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். சிறிய நகரங்களிலும் இந்த திட்டத்தினை அமல் படுத்த வேண்டும். அரசும் இதற்கு ஊக்கம் அளிக்க வேண்டும்.
டாக்டர் எம். பிரகாஷ், திருச்சி.

20 லட்சம் பேருக்கு கூகுள் பயிற்சி தர இருக்கிறது என்பது அனைவருக்கும் மகிழ்ச்சி தரும் தகவலாகும். இந்தியாவில், குறிப்பாகத் தமிழ்நாட்டில், பொறியியல் படித்தவர்களில் பலர் சரியான வேலை வாய்ப்பின்றி உள்ளனர். இவர்களின் ஏமாற்றத்தினையும், விரக்தியையும் இந்த முயற்சி நீக்கி, அவர்கள் வாழ்வில் நல்ல திருப்பத்தினைக் காட்டும். கூகுள் நிறுவனத்திற்கு அரசு இந்த திட்டம் நிறைவேறுவதற்கான அனைத்து உதவிகளையும் தந்திட வேண்டும்.
என். வித்யா லஷ்மி, பெங்களூர்.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X