ஹுவே பி 9
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

22 ஆக
2016
00:00

ஹுவே மொபைல் போன் நிறுவனம், ஏற்கனவே அறிவித்தபடி, இந்தியாவில் தன் புதிய ஸ்மார்ட் போன் ஒன்றை Huawei P9 என்ற பெயரில் விற்பனைக்கு அண்மையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் உள்ள பின்புறக் கேமரா 12 எம்.பி. திறன் கொண்டது என்பது இதன் தனிச் சிறப்பு. இதில் Leica SUMMARIT என்ற பிரபலமான லென்ஸ் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் 1.25 மைக்ரான் பிக்ஸெல்கள் திறன் கொண்டதால், இதன் போட்டோக்கள் அனைத்தும் மிகத் தெளிவாகவும், துல்லியமாகவும் இருக்கின்றன. குறைந்த வெளிச்சத்தில் போட்டோ எடுத்தாலும், இந்த தன்மை குறையாமல் போட்டோக்கள் இருப்பதுவும் இதன் சிறப்பாகும். கேமராக்களுடன், டூயல் டோன் எல்.இ.டி. ப்ளாஷ் இணைக்கப்பட்டுள்ளது. முன்புறக் கேமரா 8 எம்.பி.திறன் கொண்டது.
இதன் திரை 1920 x 1080 பிக்ஸெல் அடர்த்தியுடன், 5.2 அங்குல அளவில் அமைந்துள்ளது. முழுமையான ஹை டெபனிஷன் AMOLED 2.5D டிஸ்பிளே கொண்டதாக உள்ளது. ஆக்டா கோர் தன்மை கொண்ட Kirin 955 ப்ராசசர் இதில் தரப்பட்டுள்ளது. இதில் இணைக்கப்பட்டுள்ள ஜி.பி.யு. Mali T880-MP4 GPU ஆகும்.
இதன் ராம் மெமரி 3 ஜி.பி. 32 ஜி.பி. ஸ்டோரேஜ் மெமரி தரப்பட்டுள்ளது. இதனை மைக்ரோ எஸ்.டி. கார்ட் கொண்டு 128 ஜி.பி. வரை அதிகப்படுத்தலாம். ஆண்ட்ராய்ட் பதிப்பு 6 மார்ஷ் மலாய் ஆப்பரேட்டிங் சிஸ்டம் இயங்குகிறது. விரல் ரேகை மற்றும் இன்ப்ரா ரெட் சென்சார்கள் இயங்குகின்றன. இதன் பரிமாணம் 145×70.9×6.95 மிமீ. எடை 144 கிராம். இதில் 3.5 மிமீ ஆடியோ ஜாக் மற்றும் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் தரப்பட்டுள்ளன. நெட்வொர்க் இணைப்பிற்கு 4ஜி, வை பி, புளுடூத் 4.2, ஜி.பி.எஸ்., என்.எப்.சி., யு.எஸ்.பி டைப் சி ஆகிய தொழில் நுட்பங்கள் இயங்குகின்றன. இதன் பேட்டரி 3,000 mAh திறன் கொண்டதாகவும், பாஸ்ட் சார்ஜிங் தொழில் நுட்பம் கொண்டதாகவும் உள்ளது.
இந்த ஸ்மார்ட் போனின் அதிக பட்ச விலை ரூ. 39,999.
Mystic Silver, Titanium Grey and Prestige Gold ஆகிய வண்ணங்களில் இது கிடைக்கிறது. ப்ளிப் கார்ட் வர்த்தக இணைய தளத்தில் இதனைப் பெறலாம்.
இந்த போனுக்கு இரண்டு ஆண்டுகள் வாரண்டி தரப்படுகிறது. மூன்று மாதங்களுக்கு டிஸ்பிளே தவறு ஏற்பட்டால், மாற்றித் தரும் உறுதி தரப்பட்டுள்ளது.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X