மொபைல் போனுக்கான புதிய குறும்படங்கள்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

29 ஆக
2016
00:00

டிஜிட்டல் பயன்பாட்டில், எழுத்துகள் அமைப்பினை வரையறை செய்து வழங்கிடும், 'யூனிகோட் கன்சார்டியம்' என்னும் அமைப்பு, அண்மையில், கூடுதலாக 72 'எமோஜிக்களை' வரையறை செய்து வழங்கியுள்ளது. நம் உணர்வுகளை எளிதில் மற்றவர்களுக்குப் புரிய வைத்திட, 'எமோட்டிகான்' என்று அழைக்கப்படும் சிறிய டிஜிட்டல் குறும்படங்கள் உதவுகின்றன. 'எமோஜி' என்றும் இவை அழைக்கப்படுகின்றன. ஆனால், இந்த இரண்டிற்கும் சில வேறுபாடுகள் உள்ளன.
'எமோஜி' எனப்படுபவை அடிப்படையில் படங்களாக அமைந்த குறியீடுகள் (Picture Characters) ஆகும். பெரும்பாலும், மொபைல் போனில் பயன்படுத்தப்படும் குறியீடுகளையே இவை குறிப்பிடுகின்றன. 'எமோஜி' என்ற சொல் ஜப்பானிய மொழியில் இருந்து வந்தது. 'இ' என்பது படம் என்பதைக் குறிக்கிறது. 'மோஜி' என்பது குறியீடு ஆகும். இவை பெரும்பாலும் படங்களே. முகங்கள், சீதோஷ்ண நிலைகள், சாப்பிடும் உணவு, அருந்தும் பானங்கள், மிருகங்கள் மற்றும் தாவர வகைகள் ஆகியனவாக இருக்கின்றன. மொபைல் போனில் பயன்படுத்தப்படும் எமோஜிக்கள் அனைத்தும் வண்ணங்களிலேயே அமைந்துள்ளன. சில அசைவுகளுடன் கூடிய படங்களாகவும் உள்ளன. மூன்று நான்கு அசைவுகளை உள்ளடக்கி, அவற்றைத் திரும்ப திரும்ப காட்டுபவையாக வடிவமைக்கப்பட்டுள்ளன.
'எமோட்டிகான்' என்பவை சற்றே மாறுபட்டவை. 'Emotion + Icon' என்ற வகையில் இவை அமைந்துள்ளன. பெரும்பாலும், நம் உணர்வுகளை பிரதிபலிப்பதாகவே இவை அமைந்துள்ளன. முக உணர்ச்சி அல்லது உடலை வளைத்த நிலையில் இவை வடிவமைக்கப்பட்டு கிடைக்கின்றன. தொடக்கத்தில், இவை ஆஸ்கி குறியீடுகளைக் கொண்டு அமைக்கப்பட்டன. எடுத்துக் காட்டாக, வேடிக்கை அல்லது சிரிப்பை குறிக்க :-) மூன்று கீ போர்ட் கேரக்டர்களைக் கொண்ட குறியீடு அமைக்கப்படுகிறது. இதே போல, பல அமைக்கப்பட்டு டெக்ஸ்ட்டுடன் இணைக்கப்பட்டு பயன்படுத்தப்படுகின்றன.
ட்விட்டரில் பயன்படுத்தப்படும் எமோஜிக்களை http://www.emojitracker.com/ என்ற தளத்தில் காணலாம்.
தற்போது யூனிகோட் அமைப்பு 72 புதிய எமோஜிக்களை வரையறை செய்து, பயன்படுத்த அனுமதி தந்துள்ளது. ஏற்கனவே, இந்த அமைப்பு 1,601 எமோஜிக்களுக்கு அனுமதி வழங்கியுள்ளது. அவை பயன்பாட்டில் உள்ளன. சமீபத்தில் நடந்து முடிந்த ரியோ ஒலிம்பிக்ஸ் விளையாட்டு போட்டிகளை ஒட்டி, சில எமோஜிக்கள் பயன்பாட்டிற்கு வந்தன. ஸ்போர்ட்ஸ் மற்றும் வெற்றி வீரர்களுக்கு வழங்கப்படும் கோப்பைகள், பதக்கங்கள் கொண்டதாக இவை அமைந்தன. செல்பி எடுக்கப்படுவதைக் குறிப்பிடும் வகையில், நீண்ட கரம் ஒன்று, மொபைல் போனைப் பிடித்துள்ளபடி ஓர் எமோஜி வந்துள்ளது.
இந்தப் புதிய எமோஜிக்களைப் பயன்படுத்த பயனாளர்கள் சில காலம் காத்திருக்க வேண்டும். ஆப்பிள் நிறுவனத்தின் ஐ.ஓ.எஸ். 10 மற்றும் ஆண்ட்ராய்ட் நெகட் ஆப்பரேட்டிங் சிஸ்டங்களுடன் இவை தரப்படலாம்.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X