இணையப் பயனாளர்களில் தமிழ்நாடு முதலிடம்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

29 ஆக
2016
00:00

இந்திய நகரங்களில், அதிக எண்ணிக்கையில், இணையத்தைப் பயன்படுத்துவோர் பட்டியலில், தமிழ்நாடு முதல் இடத்தைப் பெற்றுள்ளது. சென்ற மார்ச் மாதத்தின் இறுதியில் எடுத்த கணக்கீட்டின்படி, மொத்தம் உள்ள 23.1 கோடி பேரில் 9% பேர் தமிழ்நாட்டில் உள்ளனர். 2.1 கோடி பேர் தமிழக நகரங்களில் இணையத்தைப் பயன்படுத்துகின்றனர். மஹாராஷ்ட்ரா, டில்லி மற்றும் கர்நாடகா மாநில நகரங்களில் இணையப் பயனாளர்களின் எண்ணிக்கை, முறையே 1.97 கோடி, 1.96 கோடி மற்றும் 1.7 கோடி ஆக இருந்தது.
மொத்த இந்தியாவில், 34.2 கோடி பயனாளர்களில், கிராமப் புறங்களில் இணைய சந்தாதாரர்களின் எண்ணிக்கை 11.2 கோடியாக இருந்தது. கிராமப் புறங்களைப் பொருத்த மட்டில், உத்தரப் பிரதேசத்தின் கிழக்கு பிரிவில், 1.12 கோடி பேர், நகர்ப்புற இணையப் பயனாளர்களுக்கு இணையாக உள்ளனர். இந்த வகையில், மஹாராஷ்ட்ரா மாநிலம் 97 லட்சம் பேரையும், ஆந்திர மாநிலம் 90 லட்சம் பேரையும் கொண்டிருந்தது.
விரைவில், 'பாரத் நெட்' என்ற திட்டத்தின் கீழ், இரண்டு லட்சத்து 50 ஆயிரம் கிராமப் பஞ்சாயத்துகளில், ஆப்டிகல் பைபர் மூலம் பிராட்பேண்ட் இணைப்பு தரப்பட உள்ளது. இந்த வசதி ஏற்படுத்திக் கொடுத்த பின்னர், கிராமப் புறங்களில், இணைய இணைப்பு மிக வேகமாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திட்டம், இந்தியா முழுவதும் மூன்று கட்டமாக அமல்படுத்தப்படும். 2017 ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள்ளாக,
ஒரு லட்சம் கிராம பஞ்சாயத்துகளிலும், டிசம்பர் 2018க்குள், மீதம் உள்ள 1.5 லட்சம் பஞ்சாயத்துகளிலும் இந்த திட்டம் மேற்கொள்ளப்படும்.
சென்ற ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலத்தில் எடுத்த கணிப்புப்படி, இந்தியாவில் தரப்படும் சராசரியான இணைய இணைப்பு, விநாடிக்கு 3.5 மெகா பிட்ஸ் ஆக இருந்தது. இது உலக அளவில், இந்தியாவிற்கு 114 ஆவது இடத்தையே பெற்றுத் தந்துள்ளது.
இந்தியாவில் இணைய சேவை வழங்கும் நிறுவனங்களில், பார்தி ஏர்டெல் நிறுவனம், 9 கோடியே 5 லட்சத்து 30 ஆயிரம் இணைய சந்தாதாரர்களைக் கொண்டு முதல் இடத்தைப் பெற்றுள்ளதாக, அண்மையில் பாராளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இதற்கு அடுத்த நிலையில், வோடபோன், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன், பி.எஸ்.என்.எல்., ஏர்செல், டாடா டொகோமோ மற்றும் டெலிநார் ஆகிய நிறுவனங்கள் உள்ளன.
ரிலையன்ஸ் ஜியோ, அண்மையில் அறிமுகம் செய்த 4ஜி சேவை, கிராமப் புறங்களில், அதிக சந்தாதாரர்களை ஈர்க்கும் என அனைவரும் எதிர்பார்க்கின்றனர்.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X