வாட்ஸ் அப் வாக்கு மீறலாமா?
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

05 செப்
2016
00:00

வாட்ஸ் அப் செயலி தன் பயனாளர்களின் தொலைபேசி எண்களை பேஸ்புக் நிறுவனம் பயன்படுத்தக் கொடுக்க முடிவு எடுத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 2014 ஆம் ஆண்டு, வாட்ஸ் அப் நிறுவனத்தை, பேஸ்புக் கையகப்படுத்தியபோதே, இந்த அச்சம் பலரின் மனதில் எழுந்தது. ஆனால், அப்போது, இரண்டு நிறுவனங்களும் தனித்தனியே தான் செயல்படும் என்றும், தங்கள் செயல்பாடுகளில் எந்தவித கூட்டும் இருக்காது என்றும் அறிவிக்கப்பட்டது. ஆனால், அதற்கு நேர் மாறாக, இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்த முக்கியமான மாற்றத்தினை மேற்கொள்வதற்காகவே, கடந்த நான்கு ஆண்டுகளாக, புதுப்பிக்கப்படாத தன்னுடைய நிபந்தனைகள் மற்றும் தனிநபர் குறித்த கொள்கைக் குறிப்பில் மாற்றங்களை வாட்ஸ் அப் கொண்டு வந்துள்ளது.
முதல் நிலையில், வாட்ஸ் அப் தன் பயனாளர்களின் தொலைபேசி எண்களை, பேஸ்புக் சிஸ்டங்களுடன் இணைக்க உள்ளது. இதனால், பேஸ்புக் தளத்தில், நமக்கு நண்பர்களைப் பரிந்துரை செய்திடுகையில், இன்னும் அதன் வட்டம் விரிவாகக் காட்டப்படும். மற்றும் நாம் தொடர்பில் உள்ள வர்த்தக நிறுவனங்களின் விற்பனைப் பொருட்கள் குறித்த விளம்பரங்கள் அதிகமாகக் காட்டப்படும்.
பேஸ்புக் ஏன் தன்னுடைய தொலைபேசி எண்ணைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்று எண்ணுபவர்களை, இந்த செயல் கோபப்பட வைக்கலாம். ஆனால், நம்முடைய தொலைபேசி எண்களை தளத்தில் காட்டப்போவதில்லை என்றும், விளம்பரதாரர்களுக்கு அவற்றை விற்பனை செய்திடப் போவதில்லை என்றும், வாட்ஸ் அப் தொடர்ந்து கூறி வருகிறது. இருந்தாலும், வாட்ஸ் அப் நம் தொலைபேசி எண்களை, வர்த்தக நிறுவனங்களுக்கு அளித்து, அந்த நிறுவனங்கள் நம்மைத் தனிப்பட்ட முறையில் அழைக்க இருப்பது உறுதி என அனைவரும் கருதுகின்றனர்.
வாட்ஸ் அப் நிறுவனம் இது பற்றிக் குறிப்பிடுகையில், இந்த மாற்றத்தினால், மக்களுக்கு முக்கிய அறிவிப்புகள் விரைவாக அவர்களின் தொலைபேசியின் மூலம் சென்றடையும். அவர்களின் வங்கிக் கணக்கில் ஏற்படும் திருட்டுத்தனமான பரிவர்த்தனை, பயணம் செல்ல இருக்கின்ற விமானப் பயணத்தில் ஏற்படும் தாமதம், வாங்கிய பொருள்களுக்கான ரசீது போன்ற தகவல்களை இதன் மூலம் பெறும் வாய்ப்புகள் உருவாகும். அத்துடன், பயனாளர்கள் தாங்கள் விரும்பும் பொருட்கள் குறித்தும் தகவல்களைத் தொடர்ந்து பெறுவார்கள்.
இது ஸ்பேம் செய்திகள் குவிவதற்கான வாய்ப்புகளைத் தரும். வாட்ஸ் அப் கூட இது குறித்து கருத்து தெரிவிக்கையில் தங்கள் பயனாளர்கள், ஸ்பேம் தகவல்களைப் பெறும் அனுபவத்தைப் பெறக் கூடாது என்று கூறியுள்ளது. அதனாலேயே, பேஸ்புக் செயலியுடன் தகவல்களைப் பங்கு கொள்வதிலிருந்து ஒவ்வொருவரும் தங்களை விலக்கிக் கொள்ளும் விருப்பத்திற்கு இடம் தரப்பட்டுள்ளதாகவும் அறிவித்துள்ளது. வாட்ஸ் அப் செயலியில், செட்டிங்ஸ்> அக்கவுண்ட் எனச் சென்று, பேஸ்புக் செயலியுடன் தகவல்களைப் பகிர்ந்து கொள்வதிலிருந்து விலக்கு பெறும் விருப்பத்தினைத் தெரிவிக்கலாம் என்றும் தெரிவித்துள்ளது.
இந்த மாற்றத்தினால் ஏற்படும் விளைவுகளை வாட்ஸ் அப் வரும் இரண்டு மாதங்களுக்குக் கண்காணித்திடத் திட்டமிட்டுள்ளது. எனவே, அதுவரை பயனாளர்களின் தகவல் பரிமாற்றங்கள் பாதுகாப்பாகவே இருக்கும் என எதிர்பார்க்கலாம்.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X