விண்டோஸ் 10: காட்டப்படாத வசதிகள்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

05 செப்
2016
00:00

விண்டோஸ் 7 சிஸ்டம் தொடங்கி, மைக்ரோசாப்ட் வழக்கம் போல் இல்லாமல், பல புதிய வசதிகளைத் தந்து வருகிறது. விண்டோஸ் இயக்கத்தினைப் பயன்படுத்தும் பெரும்பாலானவர்கள், இவற்றை முழுமையாக அறிந்து பயன்படுத்துவதில்லை. தற்போது வந்திருக்கும் விண்டோஸ் 10 மற்றும் அதன் அண்மைக் காலத்திய மேம்பாடு, எண்ணற்ற பல வசதிகளை இணைத்துள்ளது. நாம் அன்றாட இயக்கத்திற்கான அடிப்படை வசதிகளைப் பயன்படுத்துகிறோம். இது போன்ற கூடுதல் வசதிகளைப் பயன்படுத்துவதில்லை. ஏனென்றால், இந்த வசதிகள் மறைக்கப்பட்டே உள்ளன. மேலும், இந்த வசதிகள் குறித்து டாகுமெண்ட்களிலும் குறிப்பிடப்படவில்லை. விண்டோஸ் 10ல், நாம் விரும்பிப் பயன்படுத்தக் கூடிய, மறைக்கப்பட்ட வசதிகளில் முக்கியமான சிலவற்றை இங்கு காணலாம்.

ரகசிய ஸ்டார்ட் மெனு: நீங்கள் விண்டோஸ் 8 சிஸ்டத்திற்கு முன்பு தரப்பட்ட, டைல்ஸ்கள் இல்லாத ஸ்டார்ட் மெனுவினை விரும்புகிறீர்களா? விண்டோஸ் கீயில் ரைட் கிளிக் செய்தால், உடன் ஒரு மெனு பாப் ஆப் ஆகும். இதில் சிஸ்டத்தில் நாம் இயக்க விரும்பும் அனைத்திற்கும் பிரிவுகள் கிடைக்கும். இதில் தேவையானதில் கிளிக் செய்து, பழைய ஸ்டார்ட் மெனு போல, டைல்ஸ் எதுவுமின்றி செயலிகளைப் பெறலாம். எடுத்துக் காட்டாக, Programs and Features, Search, Run ஆகிய பிரிவுகளைக் கூறலாம். மொத்தம் 18 பிரிவுகள் மெனுவில் தரப்படுகின்றன. சுற்றி வளைத்துச் செல்லாமல், இந்த பிரிவில் உள்ள செயலிகளை விரைவாக இயக்கலாம்.

மறைமுக டெஸ்க்டாப் பட்டன்: நாம் கம்ப்யூட்டரை இயக்குகையில், பலமுறை டெஸ்க் டாப்பில் நாம் வைத்துள்ள பைல்களைப் பார்க்க விரும்புவோம். விண்டோஸ் 7 வந்த காலத்தில், டெஸ்க்டாப் திரையை உடனே பெற, டாஸ்க் பாரின் வலது மூலையில், ஒரு இடம் தரப்பட்டது. இதில் கிளிக் செய்தால், உடன் அப்போது செயல்பட்டுக் கொண்டிருக்கும் செயலிகளுக்கான திரைகள் அனைத்தும் சுருக்கப்பட்டு, டெஸ்க்டாப் காட்சியளிக்கும். மீண்டும் அதே, இடத்தில் கிளிக் செய்தால், செயல்பட்டுக் கொண்டிருந்த செயலிகளுக்கான விண்டோக்கள் கிடைக்கும்.
இந்த வசதி விண்டோஸ் 10லும் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், டெஸ்க்டாப்பிற்கான இடத்தில், கண்ணுக்குப் புலப்படாத பட்டன் ஒன்று தரப்பட்டுள்ளது. முக்கோண வடிவத்தில் சிறு சிறு புள்ளிகள் கொண்டதாக இது உள்ளது. இதில் கர்சரைக் கொண்டு சென்று கிளிக் செய்தால், டெஸ்க்டாப் கிடைக்கிறது. மீண்டும் அதே இடத்தில் கிளிக் செய்தால், செயல்பட்டுக் கொண்டிருந்த செயலிகள் கொண்ட விண்டோ கிடைக்கும். இதன் செயல்பாட்டைக் கூட மாற்றலாம். இதில் கிளிக் செய்திட வேண்டுமா? அல்லது, கர்சரைக் கொண்டு சென்றால், டெஸ்க்டாப் பெறுவதற்கான மெனு தோன்ற வேண்டுமா? என Settings சென்று மாற்றலாம்.

கீ போர்ட் மூலம் திரையைச் சுழற்ற: இந்த வசதியைப் பலர் பயன்படுத்த மாட்டார்கள். இருப்பினும், வேடிக்கை காட்ட இந்த ட்ரிக் பயன்படும். திரைக் காட்சியை நாம் விரும்பும் பக்கம் சுழல வைக்கலாம். Ctrl + Alt + D ஆகிய கீகளை மொத்தமாக அழுத்திக் கொண்டு, எந்த பக்கம் திரை சுழல வேண்டுமோ, அதற்கான அம்புக் குறி கீயினை அழுத்தினால், அந்தத் திசையில் சுழலும். கீழ் நோக்கிய அம்புக் குறியை அழுத்தினால், தலைகீழாக திரை மாறும். இடது வலது அம்புக் குறி கீகளை அழுத்தினால், 90 கோணத்தில் திரை சுழலும். ஒன்றுக்கு மேற்பட்ட டெஸ்க்டாப் டிஸ்பிளே வைத்திருந்தால், குறிப்பிட்ட ஒரு டிஸ்பிளேயில் மட்டுமே இதில் செயல்படும்.
மாறாக, டெஸ்க்டாப் பின்னணியில், ரைட் கிளிக் செய்து, Graphics Options > Rotation எனச் சென்று இயக்கலாம். இந்த வசதி விண்டோஸ் 7 சிஸ்டத்திலும் உண்டு.

புது வகை ஷட் டவுண்: இந்த ட்ரிக் விண்டோஸ் 10ல் மட்டுமே இயங்குகிறது. இது கொஞ்சம் சிக்கலான ட்ரிக். எனவே, செயல்படுத்திப் பார்க்க விரும்புவர்கள், சற்று கவனமாகச் செயல்பட வேண்டும். இல்லை எனில், எதற்கும் இருக்கட்டும் என்று தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள். டெஸ்க்டாப்பில், ரைட் கிளிக் செய்து, கிடைக்கும் மெனுவில், New > Shortcut என்று கிளிக் செய்திடவும். இங்கு கிடைக்கும் பாப் அப் விண்டோவில், கீழே கொடுக்கப்பட்டிருக்கும் கட்டளை வரியை காப்பி செய்து ஒட்டவும். %windir%\System32\SlideToShutDown.exe இது உங்கள் டெஸ்க்டாப்பில், கிளிக் செய்து செயல்படுத்தக் கூடிய ஐகான் ஒன்றை உருவாக்கும். இதனை ஏதேனும் ஒரு பெயர் கொடுத்து சேவ் செய்து கொள்ளுங்கள். இந்த ஐகான் மூலம் நாம் சிஸ்டத்தினை ஷட் டவுண் செய்திடலாம். இந்த ஐகானில், டபுள் கிளிக் செய்தால், இழுத்துச் செல்லக் கூடிய ஷேட் ஒன்றை உருவாக்கும். பின்னர், மவுஸ் கொண்டு அதனை அப்படியே இழுத்து திரையின் கீழ் பகுதியில் விடவும். சிஸ்டம் ஷட் டவுண் செய்யப்படும். வேறு ஸ்லீப், ஹைபர்னேட் போன்ற ஆப்ஷன்கள் இதில் இருக்காது. ஷட் டவுண் செயல்பாடு மட்டுமே கிடைக்கும்.

டைல்ஸ் ரைட் கிளிக்: விண்டோஸ் 10ல் டைல்ஸ்களை எளிதாக இயக்கி வைக்கலாம். நம் விருப்பத்திற்கேற்ப மாற்றி அமைக்கலாம். மாற்றி அமைக்க விரும்பும் டைல் மீது, ரைட் கிளிக் செய்திடவும். இங்கு ஒரு பாப் அப் மெனு கிடைக்கும். இங்கு உங்களுக்குப் பல்வேறு ஆப்ஷன்கள் தரப்படும். குறிப்பிட்ட அந்த டைலை, ஸ்டார்ட் மெனுவில் இருந்தே எடுக்கலாம். தொடர்ந்து இயங்கும் டைலாக இருந்தால், அதன் இயக்கத்தினை நிறுத்தி வைக்கலாம். டைலின் அளவை மாற்றி அமைக்கலாம். அதே போல, டாஸ்க் பாரில் ரைட் கிளிக் செய்தால், பல செயலிகளின் இயக்கத்தை உடனே மேற்கொள்ளும் வகையில் பிரிவுகள் நமக்குக் காட்டப்படும்.

அசைத்து இயக்குதல்: விண்டோஸ் 7 சிஸ்டத்திலிருந்தே இந்த வசதி தரப்பட்டது என்றாலும், பலர் இதனை அறிந்து பயன்படுத்துவதில்லை. பல விண்டோக்கள் திறந்திருக்கும் நிலையில், நீங்கள் பயன்படுத்தும் விண்டோவின் மேல் பகுதியில், கர்சரைக் கொண்டு சென்று, அழுத்தியவாறு அசைத்தால், மற்ற அனைத்து விண்டோக்களும் மினிமைஸ் செய்யப்படும். மீண்டும் அசைத்தால், அனைத்து விண்டோக்களும் திறக்கப்பட்டு கிடைக்கும்.

விண்டோவை இழுத்துப் 'பின்' செய்தல்: இந்த வசதியும் விண்டோஸ் 7 முதல் தரப்பட்டாலும், விண்டோஸ் 10ல் இது சற்று கூடுதல் வசதிகளைக் கொண்டுள்ளது. எந்த ஒரு விண்டோவினையும், மவுஸால் அழுத்திப் பிடித்து, அதன் ஓர் ஓரத்திற்கு இழுத்தால், அது பாதியாகச் சுருங்கி நிற்கும். விண்டோஸ் 10ல், அந்த அரை விண்டோவினை பிடித்து இழுத்தால், 'கால்' அளவில் சுருங்கி நிற்கும். நிறைய விண்டோக்களைத் திறந்து செயல்பட்டுக் கொண்டிருந்தால், இந்த வசதியின் மூலம், அனைத்தையும் சுருக்கி, நம் கண் முன் வைத்துக் கொண்டு செயல்படலாம்.
மேலே சொல்லப்பட்டவை அனைத்தும் விண்டோஸ் 10 சிஸ்டத்தின் பல அமைப்பு வசதிகளில் சிலவாகும். பயனாளர்கள் தேடினால், இன்னும் பலவற்றைப் பெறலாம்.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X