என்ன நடக்கிறது இணையத்தில்?
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

05 செப்
2016
00:00

இணையத்தைச் சுற்றி இந்த உலகு சுற்றி வருகிறது. இந்த உலகத்தை இணையம் சுற்றச் செய்கிறது என, இணையத்தைக் கண்காணித்து வரும் கணிப்பாளர்கள் இருவகையாகக் கூறி வருகின்றனர். இரண்டுமே உண்மை. இணையத்தில் ஒரு நிமிடத்தில் என்ன நடக்கிறது என்று சில தகவல்கள் வந்துள்ளன.
ஒரு நிமிடத்தில், இணையம் வழி 20.4 கோடி மின் அஞ்சல்கள் செல்கின்றன. இவற்றில், 70% அஞ்சல்கள், 'ஸ்பேம் மெயில்கள்' என்று சொல்லப்படும், தேவையற்ற, குப்பை மெயில்கள் தாம். முதல் மின் அஞ்சல், 1971 ஆம் ஆண்டு, Ray Tomlinson என்பவரால் அனுப்பப்பட்டது. அவர் தனக்குத்தானே அதனை அனுப்பிக் கொண்டார். முதல் ஸ்பேம் மெயில், 1978ல், ARPNET என்பதன் மூலம் அனுப்பப்பட்டது. இதனை அனுப்பியவர் Gary Thuerk. ஒரு மின் அஞ்சலை அனுப்ப, 200 கோடி எலக்ட்ரான்கள் தேவைப்படுகின்றன.
இன்று ஒரு நிமிடத்தில், இணையத்தில், 5,27,760 படங்கள் பரிமாறிக் கொள்ளப்படுகின்றன. 6,39,800 கிகா பிட்ஸ் அளவிலான தகவல்கள் பன்னாட்டளவில் இணையம் வழியே செல்கின்றன. விக்கிபீடியாவில், 6 புதிய கட்டுரைகள் பதிவாகின்றன. ஸ்கைப் தளம் வழியாக, 1,04,300 அழைப்புகள் செல்கின்றன.
பேஸ்புக் தளத்தில், ஒரு நிமிடத்தில், 7,01,389 பேர் புதியதாக லாக் இன் செய்கின்றனர். வாட்ஸ் அப் வழியாக 2 கோடியே 8 லட்சம் தகவல்கள் பரிமாறிக் கொள்ளப்படுகின்றன. 27 லட்சத்து 80 ஆயிரம் பேர் யு ட்யூப்பில் விடியோ பார்க்கின்றனர். கூகுள் தேடல் இஞ்சினில் 24 லட்சம் தேடல்கள் மேற்கொள்ளப்படுகின்றன. ஒரு கேள்விக்குப் பதில் தெரிய, 0.2 விநாடிகளில், 1000 கம்ப்யூட்டர் சர்வர்கள் அலசப்படுகின்றன. ட்விட்டரில், 3,47,222 புதிய தகவல்கள் பதியப்படுகின்றன. அமேஸான் தளத்தில், 2,03,596 டாலர் மதிப்பில் வர்த்தகம் மேற்கொள்ளப்படுகிறது.
ஒரு லட்சத்திற்கும் மேலான டாட் காம் தளங்கள் ஒவ்வொரு நாளும் புதியதாகப் பதியப்படுகின்றன. முதன் முதலில் பதியப்பட்ட தளத்தின் பெயர் symbolics.com. யு ட்யூப் தளத்தில், முதன் முதலில் அப்லோட் செய்யப்பட்டது “Me at the zoo என்ற விடியோ படம். இது நடந்தது ஏப்ரல் 23, 2005.
இணையத்தில் உலா வருவதை, ஆங்கிலத்தில் “surfing” என முதலில் அழைத்தவர், நியூயார்க் நகரில் நூலகராகப் பணி புரிந்த Jean Armour Polly என்பவராவார்.
இணையத்தில் அதிக உலா வருபவை மனிதர்கள் அல்ல. கெடுதல் விளைவிக்கும் புரோகிராம்களும், தானாக இயங்கும் இணைய ரோபோக்களும் தான் அதிகம் உலா வருகின்றன. இணைய ரோபோக்கள் என்பவை Internet Bot எனவும் அழைக்கப்படுகின்றன. குறிப்பிட்ட காலத்தில், குறிப்பிட்ட செயல்பாட்டினை மீண்டும் மீண்டும் செயல்படுத்தும் சாப்ட்வேர் புரோகிராம்களே இவை. மனிதனால் கம்ப்யூட்டரில், இணையத்தில் செயல்படுத்த முடியாததை இவை எளிதாக செயல்படுத்துகின்றன. இவைதான் அதிகமாக இணையத்தில் உலா வருகின்றன. அடுத்ததாக, மால்வேர் புரோகிராம்களாகும். இவை, நாள் ஒன்றுக்கு சராசரியாக 30,000 இணைய தளங்களைக் கைப்பற்றுகின்றன.
இந்த ஆண்டின் முடிவிற்குள், உலக அளவில், இணையத்தினைப் பயன்படுத்துபவர்கள் 320 கோடி பேர் ஆக இருப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது உலக மக்கள் தொகையில், 44% ஆகும். சீனா, இந்தியா மற்றும் இந்தோனேஷியா நாடுகள் தான், இணையத்தைப் பயன்படுத்துவதில் முன்னணியில் உள்ளன (பார்க்க: https://www.idc.com/getdoc.jsp?containerId= prUS40855515)
இணையம் உலக மக்களை இணைக்கும் அதே வேளையில், பலரை மன நோயாளிகளாகவும் மாற்றி உள்ளது. இன்று கூட, இணைய இணைப்பு துண்டிக்கப்பட்டால், உடனே பதற்றம் அடையும் மக்கள் நிறைய உள்ளனர். தன் வசம் இணையம் எப்போதும் இருக்க வேண்டும் என அதனைத் தன் மனைவி அல்லது கணவன் இடத்தில் வைத்திருக்கும் நபர்கள் பலர். இந்த வகையில், சீனாவில் இணையம் பயன்படுத்துவோரில், 40% பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கான மனநல மையங்களையும் சீனா இயக்கி வருகிறது.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X