புதிய தடத்தில் பேஸ்புக் இலவச இணைய இணைப்பு
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

05 செப்
2016
00:00

பேஸ்புக் நிறுவனம், இந்திய ரயில்வேயுடன் இணைந்து, ரயில்வே ஸ்டேஷனைச் சுற்றியுள்ள கிராம மக்களுக்கு இலவச வை பி வழங்கும் திட்டம் குறித்து பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக, ரயில்டெல் நிறுவனத் தலைவர் பஹகுணா தெரிவித்துள்ளார். ஏற்கனவே 'இன்டர்நெட் பேசிக்ஸ்' என்னும் திட்டத்தை அமல்படுத்திய பேஸ்புக், அரசு தடை விதித்ததை அடுத்து அதனை முடக்கிக் கொண்டது. அதே போல, 'எக்ஸ்பிரஸ் வை பி' என்ற திட்டத்தினை, இணைய சேவை தரும் நிறுவனங்களுடன் இணைந்து இயக்க பேஸ்புக் எடுத்துக் கொண்ட முயற்சிகள் இன்னும் பலனளிக்கவில்லை. தற்போது, கூகுள் நிறுவனத்தின் திட்டத்தினைப் பின்பற்றி, புதிய கோணத்தில், இலவச வை பி இணைப்பினை இரயில்வே மூலம் தரும் திட்டம் குறித்து ஆலோசனை நடத்தி வருகிறது.
கூகுள், இந்திய ரயில்வேயின் ரெயில்டெல் (RailTel) நிறுவனத்துடன் இணைந்து, ரயில்வே ஸ்டேஷன்களில், இலவச இணைப்பை வழங்கும் திட்டத்தினை மேற்கொண்டு வருகிறது. இதுவரை 23 ரயில் நிலையங்களில் வெற்றிகரமாக இலவச வை பி இணைப்பினை வழங்கி வருகிறது. 2017க்குள், மொத்தம் 400 ரயில் நிலையங்களில் இந்த திட்டம் அமல்படுத்தப்படும். இரயில் நிலையங்களுக்கு வரும் பயணிகள் இந்த திட்டத்தினால், அதிகம் பயன் பெறுகின்றனர். குறிப்பாக தினந்தோறும் ரயில் மார்க்கமாகத் தங்கள் வர்த்தகத்திற்கெனச் சென்று வரும் வர்த்தகர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதமாக உள்ளது. டிஜிட்டல் இந்தியாவாக உருவாகும் இந்தியாவில், கூகுள் மட்டுமே தனி ஒரு நிறுவனமாக ஆளுமை பெற்றிடக் கூடாது என்பதில் பேஸ்புக் குறியாக உள்ளது.
பேஸ்புக் தந்துள்ள திட்டத்தின்படி, சிறிய அளவில் இயங்கும் ரயில்வே ஸ்டேஷன்கள் வழியாக இலவச வை பி வழங்கப்படும். சிறிய ரயில்வே ஸ்டேஷன் ஒன்றில் வழங்கப்படும் இலவச வை பி, 10 கி.மீ. தொலைவில் அதனைச் சுற்றியுள்ள கிராம மக்களுக்கு வழங்கப்படும். இது காலப் போக்கில், 25 கி.மீ. தொலைவில் வாழும் மக்களுக்கு விரிவு படுத்தப்படும். இந்த வகையில் தான், கூகுள் தரும் இலவச வை பி திட்டத்திலிருந்து, பேஸ்புக் திட்டம் வேறுபடுகிறது. பேஸ்புக் கிராம மக்களை இலக்காகக் கொண்டு செயல்படத் திட்டமிடுகிறது. பேஸ்புக் நிறுவனத்தின் “எக்ஸ்பிரஸ் வை பி” திட்டமும் கிராம மக்களை இலக்காகக் கொண்டே வடிவமைக்கப்பட்டுள்ளது. இதற்கென, சூரிய ஒளி மின் சக்தியில் இயங்கும் 'ட்ரோன்' எனப்படும் ஆளில்லா பறக்கும் சாதனங்கள் மூலம், இணைய இணைப்பினை வழங்கும் திட்டத்தினை பேஸ்புக் செயல்படுத்த இருக்கிறது.
நூறு கோடி மக்களுக்கு மேல் மொபைல் போன் பயன்படுத்துபவர்களும், 47 கோடிக்கு மேல் இணையம் பயன்படுத்துபவர்களும் உள்ள இந்தியாவில் ஏற்பட்டுக் கொண்டிருக்கும், ஏற்பட இருக்கும் வர்த்தக வாய்ப்புகளில் பேஸ்புக் மற்றும் கூகுள் எப்படியாவது பெரும் பங்கினை மேற்கொள்ளத் திட்டமிடுகின்றன. 2020 ஆம் ஆண்டுக்குள், இந்தியாவில் 70 கோடிக்கும் அதிகமானவர்கள் இணையத்தைப் பயன்படுத்துவார்கள்.
அதற்கும் சற்று அதிகமான எண்ணிக்கையில் ஸ்மார்ட் போன் பயன்படுத்துபவர்களாக இருப்பார்கள் இவர்களில், பெரும்பாலானவர்கள், இணையத்தினைத் தங்கள் ஸ்மார்ட் போன் மூலம் அணுகுவார்கள். மொபைல் வழி டேட்டா பரிவர்த்தனையில், இவர்கள் 85% பங்கினை மேற்கொள்வார்கள்.
இவ்வளவு பெரிய அளவில் இணைய வழி வர்த்தகத்திற்கான வாய்ப்புகளைக் கொண்டிருக்கும் இந்தியா தரும் சந்தர்ப்பங்களை எந்த ஓர் இணைய நிறுவனமும் விட்டு வைக்காது. பேஸ்புக்கின் புதிய பயனாளர்களின் எண்ணிக்கை, ஆசிய பசிபிக் நாடுகளில், குறிப்பாக இந்தியாவில் ஏற்பட்டு வருகிறது. எனவே, தனக்கு நல்ல வருமானத்தை இந்தியா தரும் என பேஸ்புக் கருதுகிறது. சீனாவிற்குப் பலமுறை பேஸ்புக் நிறுவனர் மார்க் சென்றும், இன்னும் வர்த்தக ரீதியாக எந்தவித முன்னேற்றத்தினையும் காண இயலவில்லை. எனவே, இந்தியாவில் தன் முழு கவனத்தையும் கொள்ள மார்க் முடிவெடுத்திருப்பதையே, பேஸ்புக் நிறுவனத்தின் இலவச வை பி இணைப்பு திட்டங்கள் காட்டுகின்றன.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X