பெர்சனல் பிரேக்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

05 செப்
2016
00:00

விண்டோஸ் 10 சிஸ்டத்தில், Recently Used Files நீக்கம் குறித்து நீங்கள் அளித்துள்ள பதிலில் தரப்பட்டுள்ள தெளிவான விளக்கம், அதைக் காட்டிலும் அதனை விளக்கும் படம் மிக அருமை. நீங்கள் எவ்வளவு சிரத்தை எடுத்து, எங்களின் கேள்விகளுக்குப் பதில் அளிக்கிறீர்கள் என்பதை எண்ணுகையில் பெருமையாக உள்ளது. மிக மிக நன்றி.
எஸ். பிலோமினா, வேலூர்.

இந்தியாவின் சாப்ட்வேர் வல்லுநர்கள், குறிப்பாக தமிழக வல்லுநர்கள், இன்று உலகம் முழுவதும், தங்கள் திறமையைக் காட்டிக் கொண்டிருந்தாலும், இந்தியா, இணையப் பயன்பாட்டில் இன்னும் முழுமை அடையவில்லை. இதற்கு அடிப்படைக் காரணம், மக்களிடையே ஏற்பட்டுள்ள டிஜிட்டல் இடைவெளிதான். இதனை நீக்க நம் அரசும், சமுதாய ஆர்வலர்களும் பாடுபட வேண்டும்.
டாக்டர் ஜெ. ராஜ்குமார், தூத்துக்குடி.

“விளையாட்டு வினையாகும்” என்று நம்ம ஊர் பழமொழி உண்டு. போக்கமான் கோ என்ற விளையாட்டு இந்தப் பழமொழிக்கேற்ற விளையாட்டு என்று முடிவு செய்திடும் அளவிற்கு வடிவமைக்கப்பட்டுள்ளது. போனைத் தூக்கிக் கொண்டு, சாலைகளிலும், பூங்காக்களிலும் நடந்து சென்று விளையாடினால், ஏற்படும் விபத்துகளுக்கு யார் பொறுப்பேற்பது? ஏன் இந்த விபரீதம்? சில நாடுகளைப் போலவே இந்த விளையாட்டு இங்கும் தடை செய்யப்பட வேண்டும். சமூக ஆர்வலர்கள் இதற்கு முக்கியத்துவம் அளித்து தடை ஏற்படுத்த முயல வேண்டும்.
பேரா டாக்டர் இரா. செந்தில்நாதன், மதுரை.

புதிய எமோஜி படங்கள் வேடிக்கையாகவும், பயன்படுத்த உதவியாயும் உள்ளன. இனி, இவை மக்களின் மனங்களில், புதிய இடங்களைப் பெறும்.
ஆர். சீதாராமன், கும்பகோணம்.

விண்டோஸ் மூவி மேக்கர் செயலியை நீங்கள் குறிப்பிட்டபடி தரவிறக்கம் செய்து இயக்கினேன். மிகவும் நன்றாக இயங்குகிறது. குறிப்பாக அதன் இடைமுகம் மிக அருமை. தகவலுக்கு நன்றி.
ஆர். சியாமளா, சென்னை.

இணையப் பயனாளர்களில் தமிழ்நாடு முதல் இடத்தைப் பெற்றுள்ளதா? நம்பவே முடியவில்லையே. அப்படியானால், இன்னும் வேகமாக இணையப் பயிற்சியை கிராமப் புற மக்களுக்குக் கொண்டு சென்றால், இந்தியாவிற்கே நாம் தான் முன்னோடிகளாக இருப்போம். இதனை அரசு உணர்ந்து செயல்படுமா?
எஸ். கமாலுதீன், தேவாரம்.

எமோஜிக்களைப் பயன்படுத்தக் கூட, இணையத்தின் உயர் அமைப்பு ஒன்றின் அனுமதியைப் பெற வேண்டியதுள்ளது என்ற தகவலைப் படிக்கையில் வியப்பாகவும், அதே நேரத்தில், இணைய நிர்வாகக் கட்டமைப்பு மிகச் சிறப்பாக உள்ளது என்று மகிழ்ச்சியாகவும் இருந்தது. தகவலுக்கு நன்றி.
என். பகவத் சிங், திருமங்கலம்.

புதிய ஆண்ட்ராட்ய் சிஸ்டம் தர இருக்கும் புதிய வசதிகளைப் பட்டியல் இட்டது, பயனாளர்களிடையே ஆர்வத்தைத் தூண்டுவதாக அமைந்துள்ளது. எப்போது பொது மக்களுக்குக் கிடைக்கும் என எதிர்பார்த்துக் காத்திருக்கிறோம்.
என். சுகவனம், திருப்பராய்த்துறை.

இணையத்தோடு நமக்குச் சில ஆண்டுகளே பழக்கம் என்றாலும், கடந்த 25 ஆண்டுகளாக, மனித வாழ்க்கையோடு ஒன்றி, அதற்கென பல பரிமாணங்களை இணையம் தந்துள்ளது. இந்த நெடிய செயல்பாட்டின் முக்கிய மாற்றங்களை, எளிமையாக “இணைய வெள்ளிவிழா” கட்டுரையில் தந்தது மிகச் சிறப்பாக இருந்தது.
பேரா. இல. செல்லப்பன், காரைக்குடி.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X