இந்தியாவில் எல்.ஜி.யின் எக்ஸ் கேம்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

05 செப்
2016
00:00

சென்ற பிப்ரவரியில் அறிவிக்கப்பட்ட, எல்.ஜி. நிறுவனத்தின் எக்ஸ் கேம் (X Cam) ஸ்மார்ட் போன், சென்ற வாரம், இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இதில் உள்ள கேமரா சில சிறப்பம்சங்களைக் கொண்டதாக உள்ளது. பின்புறக் கேமரா 13 எம்.பி. திறன் கொண்டடு. 'வைட் ஆங்கிள் லென்ஸ்' இணைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கிடைக்கும் பாப் அவுட் படத்தில் இரண்டு போட்டோக்கள் கிடைக்கும். ஒன்று வழக்கமானதாகவும், இன்னொன்று வைட் ஆங்கிள் லென்ஸில் எடுக்கப்பட்டதாகவும் இருக்கும். இதன் மூலம், படமானது பிரேம் ஒன்றில் இருப்பது போன்ற காட்சி கிடைக்கும். Panorama View காட்சி தானாகவே அகலமான படம் ஒன்றை பதிவு செய்கிறது. மேலும், இதில் தரப்பட்டுள்ள Signature வசதி, போட்டோ எடுத்தபின்னர், அதில் தலைப்பு அல்லது பெயர் ஒன்றை இணைக்கும் செயல்பாட்டினை எளிதாக்குகிறது. இத்துடன் Geo-tagging, touch focus, face detection, ஆகிய வசதிகளும் தரப்பட்டுள்ளன. முன்புறமாகத் தரப்பட்டுள்ள கேமரா 8 மெகா பிக்ஸெல் திறன் கொண்டது.
இதன் மற்ற சிறப்பம்சங்கள் பின்வருமாறு: இதன் பரிமாணம் 147.5 x 73.6 x 6.9 மிமீ. எடை 120 கிராம். இதில் இரண்டு நானோ சிம்களைப் பொருத்தலாம். இதன் திரை, 1080 x 1920 பிக்ஸெல் அடர்த்தியுடன் 5.2 அங்குல அளவில் உள்ளது. 1.14 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கக் கூடிய ஆக்டா கோர் ப்ராசசர் இயங்குகிறது. இதன் ராம் மெமரி 2 ஜி.பி. ஸ்டோரேஜ் மெமரி 16 ஜி.பி. இதனை 256 ஜி.பி. வரை அதிகப்படுத்தலாம். இதன் ஆப்பரேட்டிங் சிஸ்டம், ஆண்ட்ராய்ட் 6.0 மார்ஷ் மலாய்.
எஸ்.எம்.எஸ்., எம்.எம்.எஸ்., இமெயில், புஷ் மெயில், இன்ஸ்டன்ட் மெசஞ்சர் ஆகிய வசதிகள் தரப்பட்டுள்ளன. போட்டோ வியூவர் மற்றும் டாகுமெண்ட் எடிட்டர் செயலிகள் இயங்குகின்றன. நெட்வொர்க் இணைப்பிற்கு, 4ஜி, ஜி.பி.எஸ். வை பி, வை பி டைரக்ட், புளுடூத் 4.2., மைக்ரோ யு.எஸ்.பி. ஆகிய தொழில் நுட்பங்கள் இயங்குகின்றன. Accelerometer, gyro, proximity, compass ஆகிய சென்சார்கள் இயங்குகின்றன.
இதில் வெளியே எடுக்க முடியாத லித்தியம் அயன் பேட்டரி 2500 mAh திறனுடன் தரப்பட்டுள்ளது. 260 மணி நேரம் தன் மின் சக்தியைத் தங்க வைக்கிறது. தொடர்ந்து 6 மணி நேரம் பேசலாம். சில்வர் வண்ணத்தில் இந்த ஸ்மார்ட் போன் கிடைக்கிறது. இதன் அதிகபட்ச விலை ரூ. 19,990.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X