கனிந்தது ஆப்பிள் ஐபோன் 7
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

12 செப்
2016
00:00

வழக்கம் போல, தன்னுடைய புதிய ஐபோன்7, ஐபோன் 7 ப்ளஸ் ஆகியவற்றையும், துணை சாதனங்களையும், ஆப்பிள் நிறுவனம் செப்டம்பர் 7 புதன் கிழமை அன்று, கலிபோர்னியா மாநிலத்தில், சான் பிரான்சிஸ்கோ நகரில் உள்ள, “பில் கிரஹாம் சிவிக் ஆடிட்டோரியம்” என்னும் அரங்கில் அறிமுகம் செய்தது. அடுத்த ஆண்டு, ஐபோன் வெளியாகி, பத்தாம் ஆண்டு விழாவில், கூடுதலான வசதிகளுடன் கூடிய ஐபோன் மாடல் ஒன்றை நிச்சயம் ஆப்பிள் நிறுவனம் வெளியிடும். (முதல் ஐபோன் ஜூன் 29, 2007ல் வெளியானது.) எனவே, இந்த ஆண்டு ஐபோன் 7, அதற்கான பாலம் ஒன்றை அமைப்பது போல வெளிவந்துள்ளது.
இந்த விழாவில் தரப்பட்டுள்ள முக்கிய புதிய தகவல்களை இங்கு சுருக்கமாகப் பார்க்கலாம். ஐபோன் 7, 4.5 அங்குல அளவிலான திரையுடனும், ஐபோன் 7 ப்ளஸ் 5.5 அங்குல திரையுடனும், வழக்கமான வண்ணங்களில் வந்துள்ளன. புதியதாக ஜெட் பிளாக் எனப்படும் கருப்பு வண்ணத்திலும் இவை கிடைக்கும்.
புதியதாக A 10 Fusion சிப் அறிமுகமாகிறது. இதன் செயல்பாடு, பேட்டரியின் திறனை மேலும் ஒரு மணி நேரம் கூடுதலாகத் தக்க வைக்கும். போன்கள் இரண்டும், தூசு மற்றும் தண்ணீர் பாதிக்காத வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. முதன் முதலாக, 3.5 மிமீ ஆடியோ ஜாக் நீக்கப்பட்டுள்ளது. அதற்குப் பதிலாக, ஏர் பாட் (Air Pod / Ear Pod) எனப்படும் வயர்லெஸ் ஹெட் செட் அறிமுகமாகிறது. இருப்பினும் சார்ஜ் செய்யப்படும் லைட்னிங் போர்ட் மூலம், இடைமுக வயர் இணைப்பு கொடுத்து பழைய ஹெட்செட்களைப் பயன்படுத்தலாம். (தனிக் கட்டுரையில் காண்க.) இரண்டு ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், மேல், கீழ் பகுதிகளில் தரப்பட்டுள்ளன.
ஐபோனில் அடிக்கடி பயன்படுத்தப்படும் 'ஹோம்' பட்டன் நீக்கப்பட்டுள்ளது. நாமாக அழுத்தி இயக்கும் வகையில் இருந்த 'மெக்கானிகல்' பட்டன் எடுக்கப்பட்டு, மேக் கம்ப்யூட்டரில் உள்ள ட்ரேக் பேட் செயல்படுவது போல, தொடு உணர்வில் இது செயல்படும் வகையில் தரப்பட்டுள்ளது. இதனுடன் இணைக்கப்பட்டுள்ள Taptic Engine, போன் செயல்படத் தேவையான கட்டளைகளை அதற்கு வழங்கும்.
நின்டென்டோ (Nintendo) நிறுவனம், புதிய ஆப்பிள் போனுக்கென Super Mario Run விளையாட்டினை வடிவமைத்து வழங்கியுள்ளது. iOS இயக்கத்தில் மட்டுமே இது இயங்கும். இந்த விளையாட்டினை, ஐபோன் 7ல் கொண்டு வருவதற்காக, இந்த நிறுவனம், தான் மேற்கொண்டிருந்த இரு வேறு விளையாட்டு வடிவமைப்புகளை ஒத்தி வைத்துள்ளது.
புதிய ஐபோன் 7ல், பின்புறமாக இயங்க இரண்டு கேமராக்கள் தரப்பட்டுள்ளன. இரண்டும் வெவ்வேறு வகையில் காட்சிப் பொருட்களைக் குறி வைக்கின்றன. அகலக் கோணத்தில் ஒன்றும், டெலிபோட்டோ லென்ஸ் வழியாக இன்னொரு காட்சியும் கிடைக்கும். ஒன்று சாப்ட்வேர் மூலம் பெரிதாக்கிப் பார்த்திடும் வசதியைத் தரும். இன்னொன்று, காட்சியின் ஆழத்தைச் சிறப்பாகக் காட்டும். பின்புலத்தினைத் தெளிவாக்க இதனைப் பயன்படுத்தலாம். பயன்படுத்துபவர்கள், தங்களுக்கு எது வேண்டுமோ, அதனைப் பெறலாம். இந்த இரண்டு வசதி கொண்டது ஐபோன் 7 ப்ளஸ் போனிலும், அகலக் கோணத்திற்கான லென்ஸ், ஐபோன் 7லும் கிடைக்கின்றன. புதியதாக 12 எம்.பி. சென்சார் மற்றும் ப்ளாஷ் இதில் தரப்பட்டுள்ளது. எச்.டி.சி. போனில் இரண்டு கேமரா வசதி உள்ளது. சாம்சங் போனில் இது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஆப்பிள் வாட்ச் 2 இந்த விழாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பல வகைகளில் மேம்படுத்தப்பட்ட இதன் சிறப்பியல்புகளைத் தனிக் கட்டுரையில் காணலாம்.
ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டிம் குக் இந்த அறிமுக விழாவினை சிறிய விடியோ படம் ஒன்றுடன் தொடங்கிப் பின்னர் தன் உரையைத் தொடங்கினார். முதலில் ஆப்பிள் நிறுவனம் மற்றும் அதன் தயாரிப்புகள் சார்ந்த பல தகவல்களை வெளியிட்டார்.
ஐபோன் தற்போது ஒரு கலாச்சாரத்தின் அடையாளமாக மாறிவிட்டது. ஒரு மொபைல் போன் எந்த தரத்தில் இருக்க வேண்டும் என்பதற்கான வரையறையை ஆப்பிள் போன் தொடர்ந்து தந்து வருகிறது. ஐபோன்களின் விற்பனை அறிமுகமான காலம் முதல் இன்று வரை 100 கோடிக்கு மேல் விற்பனையாகியுள்ளது. உலகச் சரித்திரத்தில், அதிக அளவில் விற்பனையான ஒரு தயாரிப்பு பொருள் என்ற பெயரையும் புகழையும் ஆப்பிள் ஐபோன் பெற்றுள்ளது. ஆப்பிள் சாதனங்களில் தொடர்ந்து இயக்கத்தில் இருக்கும் புரோகிராம்கள், அதற்கான ஸ்டோரிலிருந்து 14 ஆயிரம் கோடி முறை தரவிறக்கம் செய்யப்பட்டுள்ளன. இந்த எண்ணிக்கை ஆண்டுக்கு 106% உயர்ந்து வருகிறது.
ஆப்பிள் ஸ்டோரில் உள்ள விளையாட்டுகளின் எண்ணிக்கை 5 லட்சத்தினைத் தாண்டியுள்ளது. 18 மாதங்களுக்கு முன் அறிமுகமான ஆப்பிள் ஸ்மார்ட் வாட்ச், தற்போது உலகில் அதிகம் விற்பனையாகும் கடிகாரங்களின் பட்டியலில், இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. முதல் இடத்தில் இருப்பது ரோலக்ஸ் கடிகாரம். ஆப்பிள் வாட்ச் தான், ஸ்மார்ட் வாட்ச்களின் பட்டியலில் முதல் இடத்தைப் பெற்றுள்ளது. ஆப்பிள் மியூசிக் ஸ்டோரைப் பொறுத்தவரை, அதில் கட்டணம் செலுத்தும் சந்தாதாரர்கள் எண்ணிக்கை ஒரு கோடியே 70 லட்சம் ஆகும் எனக் கூடியிருந்த மக்களின் கரகோஷத்திற்கிடையே டிம் குக் எடுத்துரைத்தார்.
ஆப்பிள் நிறுவனம், Steve Jobs, Steve Wozniak, and Ronald Wayne என்ற மூவரால், 1976ல், கார் நிறுத்துமிடம் ஒன்றில் தொடங்கப்பட்டது. பெர்சனல் கம்ப்யூட்டரைக் கொண்டு வந்த பெருமை கொண்டது. இன்று லேப்டாப், கைகளில் எடுத்துச் செல்லும் ஆடியோ மற்றும் மீடியா சாதனங்களைத் தயாரித்து வழங்குகிறது.
தன் தொழில் நுட்பம், விளம்பர யுக்தி மூலம் ஆப்பிள் தொடர்ந்து தன் தயாரிப்புகளை விற்று வருகிறது. விலையின் அடிப்படையில் பொருட்களை வாங்கும் பழக்கமுள்ள நம் நாட்டில், ஐபோன், மொபைல் போன் விற்பனையில் குறிப்பிட்டுச் சொல்லும் அளவிற்கு இடம் பெறவில்லை.
இருப்பினும், இந்த தொழில் நுட்பத்தினையும், வசதிகளையும் விரும்புபவர்களின் மத்தியில், ஆப்பிள் நிறுவனத் தயாரிப்புகளுக்கு இந்தியாவில் இடம் இருந்து கொண்டுதான் உள்ளது. குறிப்பாக, ஆப்பிள் சிஸ்டத்தில் இயங்கும் பிற நிறுவனங்களின் செயலிகள் தரும் வசதிகளுக்காகவும், மக்கள் ஐ போனை விரும்புகின்றனர். மேலும், வாடிக்கையாளர்களுக்கான உதவி, ஐபோன்களுக்கான சமுதாய அந்தஸ்து ஆகியவையும் மக்களை ஈர்க்கின்றன.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X