ஆப்பிள் வாட்ச் 2 (Apple Watch 2)
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

12 செப்
2016
00:00

சென்ற 2015 மார்ச் மாதம், ஆப்பிள் தன் வாட்ச் ஒன்றினை, ஐபோனுடன் இணைந்து இயங்கும் வகையில் வெளியிட்டது. தற்போது ஆப்பிள் வாட்ச் 2 வெளியாகியுள்ளது. இதில் புதிய ப்ராசசர் S2 dual-core இணைக்கப்பட்டு இயங்குகிறது. முந்தைய வாட்ச் ப்ராசசரைக் காட்டிலும், 50% கூடுதல் வேகத்தில் செயல்படும் தன்மை கொண்டது.
இதன் காட்சித் தோற்றம், முன்பு இருந்ததைக் காட்டிலும், இரு மடங்கு ஒளி அதிகமாகக் கொண்டுள்ளதால், பகல் நேரத்திலும் எளிதாகத் தகவல்களைப் பார்க்க இயலும். புதிய செராமிக் வெளி கவசம் தரப்பட்டுள்ளதால், இது நான்கு மடங்கு கூடுதல் உறுதியுடன் உள்ளது. உடல்நலம் பேணல், உடல் நலப் பயிற்சிகள் போன்றவற்றிற்கு அதிக முக்கியத்துவம் இதில் தரப்பட்டுள்ளது. அந்த வகையில், நைக் நிறுவனத்துடன் இணைந்து தடகள வீரர்களுக்கான வாட்ச் ஒன்றும் கிடைக்கிறது.
இதனை நீரில் நீந்தும்போதும் பயன்படுத்தலாம். தண்ணீரில் 50 மீட்டர் ஆழம் வரை இது இயங்கும் தன்மை கொண்டது. இதில் GPS இணைக்கப்பட்டுள்ளது. இதனால், உங்கள் போன் சிம் செயல் இழந்து போனாலும், நீங்கள் இருக்கும் இடத்தைக் கண்டறிய இயலும். இதன் விலை 369 டாலர். அடுத்த மாதம் மக்களுக்குக் கிடைக்கும். இதில் இரண்டு ஸ்பீக்கர் போர்ட்கள் உள்ளன. இதன் வழியே, உள்ளே புகுந்த நீர் வெளியேற்றப்படுகிறது.
தற்போது மொபைல் போன்களில் விளையாடப்படும் 'போக்கமான் கோ' (Pokemon Go) விளையாட்டு இனி இந்த வாட்சில் தரப்பட உள்ளது. முதலில், 25 நாடுகளில், இந்த வாட்ச் செப்டம்பர் 16 முதல் கிடைக்க இருக்கிறது. பின்னர், மற்ற நாடுகளில் அறிமுகமாகும். பழைய ஆப்பிள் வாட்ச் வரிசை 1, புதிய சிப் எஸ்2 கொண்டு மேம்படுத்தப்பட்டு, 269 டாலருக்குக் கிடைக்க இருக்கிறது. அக்டோபர் மாத இறுதியில் இது கிடைக்கலாம். இதனை வெளியிட்டபோது, மேலும் சில தகவல்கள் கிடைத்தன.
ஐ.ஓ.எஸ். 10 (iOS 10) இயக்க முறைமை வரும் செப்டம்பர் 13ல், அதிகாரபூர்வமாக வெளிவரும். இதில் இந்த ஆப்பரேட்டிங் சிஸ்டம் பெரிய அளவில் மேம்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. எப்போதும் இயங்கும் செயலிகள் பல தனிப் பயன்பாட்டிற்குக் கிடைக்கும். கிளிப் போர்ட் இதில் தரப்படுகிறது. இதன் மூலம் போனில் உள்ள டெக்ஸ்ட் மற்றும் படங்களை காப்பி செய்து, மேக் கம்ப்யூட்டரில் இணைக்கலாம்.
மேக் கம்ப்யூட்டருக்கான ஆப்பரேட்டிங் சிஸ்டம் குறித்து இந்த கருத்தரங்கில் எதுவும் அறிவிக்கப்படவில்லை என்றாலும், Sierra என அழைக்கப்படும் அடுத்த மேம்பாடு வரும் செப்டம்பர் 20ல் தரப்படும். இத்துடன் இது காலம் வரை அழைக்கப்பட்ட பெயரான Mac OS முடிவுக்கு வரும். இந்த புதிய சிஸ்டத்துடன் Siri தேடல் இஞ்சின் மேக் கம்ப்யூட்டருக்குக் கொண்டு வரப்படுகிறது. இதன் மூலம் பைல்களையும் மின் அஞ்சல்களையும் வாய் மொழிக் கட்டளை மூலம் தேடிப் பெறலாம்.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X