வாட்ஸ் அப் இடத்தில் வேறு செயலிகள்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

12 செப்
2016
00:00

நண்பர்கள், உறவினர்களிடையே தகவல்களை உடனடியாக அனுப்ப, உலக அளவில் அதிகம் பயன்படுத்தப்படுவது வாட்ஸ் அப் (WhatsApp) செயலியாகும். இந்த செயலியின் மூலம், பலரின் தனிப்பட்ட தகவல்கள், தேவைப்படாதவர்களுக்குக் கசிந்து செல்வதாக ஒரு குற்றச் சாட்டு உலவுகிறது. இதனைச் சுட்டிக் காட்டிய சில வாசகர்கள், வாட்ஸ் அப் இடத்தில், அதே வசதிகளைத் தரக்கூடிய வேறு செயலிகள் உள்ளனவா? என்று கேட்டுள்ளனர். இதோ, இணையத்தில் கிடைக்கும் சில செயலிகள் குறித்து இங்கு பார்க்கலாம்.
வாட்ஸ் அப் செயலியைப் பொறுத்தவரை அதிக வசதிகள் கொண்டதாக இருக்கும் செயலிகளில் முதலிடம் பெற்றுள்ளது அதுதான். நூறு கோடிக்கும் மேலானவர்கள் இதனைப் பயன்படுத்தி வருகின்றனர். இவர்களில் 70% பேர் தினந்தோறும் இதனைப் பயன்படுத்தி வருகின்றனர் என்பது இதன் இன்றியமையாத தன்மையைக் காட்டுகிறது. தினந்தோறும் பத்து லட்சத்திற்கு மேலானவர்கள், புதியவர்களாகப் பதிந்து கொள்கின்றனர். 4200 கோடி தகவல்கள் அனுப்பப்படுகின்றன.
வாட்ஸ் அப் தரும் வசதிகளில், ஏதோ ஒரு வசதியினை வேறு ஒரு செயலி தருவதால், அதனைப் பயன்படுத்தும் பயனாளர்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளனர். அவற்றில் சிலவற்றை இங்கு காணலாம்.
1. HIKE: இந்த செயலியினைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை, இந்த ஆண்டின் தொடக்கத்தில், இந்தியாவில் 10 கோடியைத் தாண்டியதாக அறிவிக்கப்பட்டது. 2012ல் இந்த செயலி அறிமுகம் ஆனது. ஐந்து மாதங்களிலேயே, இதன் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 50 லட்சத்தைத் தாண்டியது. ஆண்ட்ராய்ட், ஆப்பிள் மற்றும் விண்டோஸ் போன்களுக்கான ஹைக் செயலி இலவசமாக அதன் ஸ்டோர்களில் கிடைக்கின்றன. இணைய இணைப்பு இல்லாத நேரத்திலும், இதன் மூலம் நண்பர்களுடன் அரட்டை அடிக்கலாம். 100 நண்பர்கள் வரை குழுவாக இணைந்து அரட்டை அடிக்கலாம். ஒட்டும் ஸ்டிக்கர்கள் மிக அழகாக, அதிக எண்ணிக்கையில் கிடைக்கின்றன. மேற்கொண்ட அரட்டை தகவல்களை மறைத்து வைக்கவும் முடியும். ஹைக் செயலியில் பதிந்து கொள்ளாதவர்களுக்கும் நம்மால் தகவல்களை இலவசமாக அனுப்ப முடியும்.
2. KakaoTalk: இந்த செயலி, இந்தியாவில் அதிகம் பயன்படுத்தப்படுவது இல்லை. மொபைல் போன்கள் அனைத்திலும், இதனைப் பயன்படுத்தலாம். வாட்ஸ் அப் செயலிக்குச் சரியான போட்டியை இது தந்து வருகிறது. உலக அளவில், 17 கோடி பேர், 15 மொழிகளில் இதனைப் பயன்படுத்தி வருகின்றனர். வாட்ஸ் அப் செயலியில் கிடைக்காத விடியோ வழி அழைப்பு இதில் கிடைக்கிறது. அசையும் எமோட்டிகான் படங்கள் இதில் நிறைய கிடைக்கின்றன. இதனுடன் இணைகையில், இந்த செயலி, KaTalk ID ஒன்றைத் தருகிறது. எனவே, பயனாளரின் போன் எண் இல்லாமல், இந்த ஐ.டி. மூலம் நாம் நண்பர்களுடன் இணையலாம். இதில் இணைந்துள்ள நண்பர்களிடையே, வாக்கெடுப்பு நடத்தி, எந்த திரைப்படம் போகலாம், எங்கு உணவு உண்ணலாம், எங்குள்ள கடையைத் தேர்ந்தெடுக்கலாம் என முடிவு செய்திடலாம். அதிக பட்சமாக, ஐந்து பேர் குழுவாக இணைந்து பேசி தகவல்களைப் பரிமாறிக் கொள்ளலாம். உடனடி தகவல் அனுப்பும் செயலிகளில், அசையும் படங்களை முதலில் தந்தது இந்த செயலிதான். சில விளையாட்டுகளையும் இதில் விளையாடலாம். நம் விருப்பப்படி இதனை அமைத்துக் கொள்ள சில ஆப்ஷன்களும் தரப்பட்டுள்ளன. அனைத்து ஆப்பரேட்டிங் சிஸ்டங்களிலும் இயங்கும் வகையில் இந்த மெசஞ்சர் செயலி கிடைக்கிறது.
3. LINE: 'லைன்' செயலியும் வாட்ஸ் அப் செயலிக்குப் போட்டியானதுதான். டைம்லைன், கூப்பன், விடியோ எடிட்டிங், 1 ஜி.பி. வரையிலான பைல் பகிர்வு போன்ற, வாட்ஸ் அப்பில் இல்லாத வசதிகள் இதில் கிடைக்கின்றன.
4. BBM: பிளாக் பெரியின் இன்ஸ்டண்ட் மெசஞ்சரிலும், வாட்ஸ் அப் செயலியில் இல்லாத சில வசதிகள் கிடைக்கின்றன. குழுவின் நிர்வாகிகளுக்கு, நிறைய அதிகாரம் தரப்பட்டுள்ளது. பயனாளர்கள் தங்கள் அரட்டை நிலையை மாற்றிக் கொள்ளலாம். விடியோ அரட்டை அனுமதிக்கப்படுகிறது. நாமாகவே, சில நாட்களுக்குப் பின்னர் நம் தகவல்களை அழிக்கும் வகையில் செட் செய்திடும் வசதி இதற்கே உரித்தானது. இந்த செயலி, ஆண்ட்ராய்ட் மற்றும் ஐ.ஓ.எஸ். சிஸ்டங்களில் இயங்கும் வகையிலும் கிடைக்கிறது.
5. Telegram: வாட்ஸ் அப் செயலியில் கிடைக்காத சில வசதிகள், இந்த செயலியில் கிடைக்கின்றன. க்ளவ்ட் அடிப்படையில் இது செயல்படுவதால், எந்த சாதனத்தின் மூலமும், இதனைத் தொடர்பு கொண்டு பயன்படுத்தலாம். இதனால், நம் சாதனங்களில், பகிரப்படும் விடியோ, பைல்களை சேவ் செய்திட வேண்டியதில்லை. நாம் தகவல்களை பதிந்து சில விநாடிகளிலேயே, அவற்றை அழிக்கும் வகையில் செட் செய்திடலாம். 1.5 ஜி.பி. வரை அளவிலான பைல்களைப் பகிர்ந்து கொள்ளலாம். வாட்ஸ் அப் செயலியைக் காட்டிலும் வேகமாக செயல்படுகிறது. Bot API என்ற கட்டமைப்பின் மூலம், இதில் செயல்படும் அப்ளிகேஷன்களை நாமே தயாரித்துக் கொள்ளலாம். 2013 ஆம் ஆண்டில் வெளியான இந்த செயலியை, ஆண்ட்ராய்ட், ஐபோன், டேப்ளட் மற்றும் கம்ப்யூட்டர்களில் பயன்படுத்தலாம். 200 உறுப்பினர்கள் வரை ஒரு குழுவாக இயங்கலாம். அதற்கு மேல் எண்ணிக்கை செல்கையில், 5,000 பேர் வரை தாக்குப் பிடிக்கும் Super Group களை அமைக்கலாம். இதனை அடுத்து, “சேனல்கள்” அமைக்கப்படுகின்றன. இதற்கு உறுப்பினர் எண்ணிக்கை வரையறை கிடையாது. மொத்தமாகப் பலருக்கு ஒரு தகவல் அனுப்ப இதனைப் பயன்படுத்தலாம்.
மேலே தரப்பட்டுள்ள இன்ஸ்டண்ட் மெசஞ்சர் செயலிகள், வாட்ஸ் அப் செயலிக்கு எந்தவிதத்திலும் குறைந்தவை அல்ல. எனவே, இவற்றை உங்கள் நண்பர்கள் பயன்படுத்தினால், நீங்களும் இதனையும் சேர்த்துப் பயன்படுத்துவது உங்கள் நட்பினை உறுதிப்படுத்தும்.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X