புதிய ஆப்பிள் ஐபோன்கள்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

12 செப்
2016
00:00

ஆப்பிள் நிறுவனம் இந்த ஆண்டின் வெளியீடாக, ஆப்பிள் ஐபோன் 7 மற்றும் ஐபோன் 7 ப்ளஸ் மொபைல் போன்களை அறிமுகம் செய்துள்ளது. இவற்றின் சிறப்பியல்புகள் மற்றும் வசதிகளை இங்கு காணலாம்.

ஆப்பிள் ஐபோன் 7 சிறப்பம்சங்கள்
தொடு உணர்வு செயல் திறன் திரை 4.7 அங்குல அளவில், 750x1334 பிக்ஸெல் அடர்த்தியுடன் (ஓர் அங்குல இடத்தில் 326 பிக்ஸெல்கள்) உள்ளது. ரெடினா எச்.டி. டிஸ்பிளே கிடைக்கிறது. Ion-strengthened glass, oleophobic coating ஆகியவை திரைக்கு உறுதி சேர்க்கின்றன. போனின் பரிமாணம் 138.30 x 67.10 x 7.10 மிமீ. எடை 138 கிராம். இதன் ப்ராசசர் குவாட் கோர் ஆப்பிள் ஏ 10. ஸ்டோரேஜ் மெமரி 32 ஜி.பி. இதனை அதிகப்படுத்த இயலாது. ஒரே ஒரு ஜி.எஸ்.எம். நானோ சிம் மட்டுமே இதில் இயங்கும்.
நெட்வொர்க் இணைப்பிற்கு Wi-Fi, GPS, Bluetooth, NFC, 4G ஆகிய தொழில் நுட்பங்கள் இயங்குகின்றன. இந்தியாவில் இயங்கும் 4ஜி அலைவரிசை செயல்பாட்டினை இந்த மாடல் போன் ஏற்றுக் கொள்ளும். Gyroscope Fingerprint, accelerometer, gyro, proximity, compass, barometer, Ambient light sensor ஆகிய சென்சார்கள் செயல்படுகின்றன. எச்.டி.எம்.எல். 5 சபாரி பிரவுசர் தரப்பட்டுள்ளது. எம்.பி. 3 மற்றும் எம்.பி. 4 பிளேயர்கள், ஆடியோ, விடியோ மற்றும் டாகுமெண்ட் எடிட்டர் வசதிகளும் கிடைக்கின்றன. முதல் முறையாக, 3.5 மிமீ ஆடியோ ஜாக் நீக்கப்பட்டுள்ளது. ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் இரண்டு, மேலாக ஒன்றும், கீழாக ஒன்றுமாகத் தரப்பட்டுள்ளது.
லைட்னிங் போர்ட் வகையைப் பயன்படுத்தி, பேட்டரி சார்ஜ் செய்வதுடன், இணைப்பு முகமாகவும் இயக்கலாம். பழைய ஹெட் செட்டைப் பயன்படுத்த விரும்புபவர்கள், இடைமுக இணைப்பி ஒன்றின் மூலம் பயன்படுத்தலாம். ஐ மெசேஜ், எஸ்.எம்.எஸ்., எம்.எம்.எஸ்., இமெயில், புஷ் மெயில் போன்ற வசதிகளூம் உள்ளன. இதன் ஆப்பரேட்டிங் சிஸ்டம் ஐ.ஓ.எஸ். 10. Apple A10 Fusion சிப்செட் தரப்பட்டுள்ளது. இது 64 பிட் குவாட் கோர் ப்ராசசராகும். சிக்ஸ் கோர் கிராபிக்ஸ் கொண்ட குவாட் கோர் சி.பி.யு. செயல்படுகிறது. 32/128/256 ஜி.பி. ஸ்டோரேஜ் இடம் உள்ளது. இதனை கார்ட் கொண்டு அதிகப்படுத்த முடியாது.
இதன் முதன்மை கேமராவில் டூயல் லென்ஸ் தரப்பட்டுள்ளது. இதன் திறன் 12 எம்.பி. எல்.இ.டி. டூயல் டோன் ப்ளாஷ் இணைக்கப்பட்டுள்ளது. முன்புறக் கேமரா 7 எம்.பி. திறன் கொண்டது. ஜியோ டேக்கிங், ஒரே நேரத்தில் 4 கே விடியோ மற்றும் 8 எம்.பி. திறன் இமேஜ் பதிவினை மேற்கொள்ள முடியும். Touch focus, face/smile detection, HDR (photo/panorama) ஆகிய தொழில் நுட்பங்களும் உள்ளன. தூசு மற்றும் தண்ணீர் இதன் உள்ளே புக வாய்ப்பில்லை. ஒரு மீட்டர் ஆழத்தில், 30 நிமிடங்கள் வரை இந்த போனில் நீர் புகாது. இந்த புதிய போனில் Super Mario விளையாட்டு தரப்பட உள்ளது. இதன் லித்தியம் அயன் பேட்டரியை நீக்க முடியாது. இதனைப் பயன்படுத்தி 14 மணி நேரம் தொடர்ந்து பேச இயலும். 40 மணி நேரம் இசை கேட்க முடியும்.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X