ஆப்பிள் ஐபோன் 7 ப்ளஸ் சிறப்பம்சங்கள்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

12 செப்
2016
00:00

தொடு உணர்வு செயல் திறன் திரை 5.5 அங்குல அளவில், 1080x1920 பிக்ஸெல் அடர்த்தியுடன் (ஓர் அங்குல இடத்தில் 401 பிக்ஸெல்கள்) உள்ளது. Ion-strengthened glass, oleophobic coating ஆகியவை திரைக்கு உறுதி சேர்க்கின்றன. போனின் பரிமாணம் 158.20 x 77.90 x 7.30 மிமீ. எடை 188 கிராம். ப்ராசசர் குவாட் கோர் ஆப்பிள் ஏ 10. ஸ்டோரேஜ் மெமரி 32 ஜி.பி. இதனை அதிகப்படுத்த இயலாது. ஒரே ஒரு ஜி.எஸ்.எம். நானோ சிம் மட்டுமே இதில் இயங்கும். நெட்வொர்க் இணைப்பிற்கு Wi-Fi, GPS, Bluetooth, NFC, 4G ஆகிய தொழில் நுட்பங்கள் இயங்குகின்றன. இந்தியாவில் இயங்கும் 4ஜி அலைவரிசை செயல்பாட்டினை ஏற்றுக் கொள்ளும். Compass/ Magnetometer, proximity, accelerometer, Ambient light sensor, Gyroscope Fingerprint, gyro, barometer, ஆகிய சென்சார்கள் செயல்படுகின்றன. எச்.டி.எம்.எல். 5 சபாரி பிரவுசர் தரப்பட்டுள்ளது. எம்.பி. 3 மற்றும் எம்.பி. 4 பிளேயர்கள், ஆடியோ, விடியோ மற்றும் டாகுமெண்ட் எடிட்டர் வசதிகளும் கிடைக்கின்றன. முதல் முறையாக, 3.5 மிமீ ஆடியோ ஜாக் நீக்கப்பட்டுள்ளது. ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் இரண்டு, மேலாக ஒன்றும், கீழாக ஒன்றுமாகத் தரப்பட்டுள்ளது.
இதன் ஆப்பரேட்டிங் சிஸ்டம் ஐ.ஓ.எஸ். 10. இதன் பின்புறப் போன், 12 எம்.பி. திறனுடன், இரண்டு லென்ஸ்களைக் கொண்டு இயங்குகிறது. ப்ளாஷ் இணைக்கப்பட்டுள்ளது. முன்புறக் கேமரா 7 மெகா பிக்ஸெல் திறன் கொண்டதாக உள்ளது. சில்வர், கோல்ட், ரோஸ் கோல்ட், கருப்பு மற்றும் புதிய நிறமான ஜெட் பிளாக் ஆகிய வண்ணங்களில் வெளி வந்திருக்கும் அடிப்படை மாடல் (32 ஜி.பி.) ஐபோன் 7 விலை 649 டாலர். ஐபோன் 7 ப்ளஸ் விலை 769 டாலர். இவை இரண்டும் 64 ஜி.பி. முதல் 256 ஜி.பி. வரையிலான கொள்ளளவில் கிடைக்கின்றன. அதற்கேற்ப விலை மாறுபடுகிறது. ஐபோன் 7 128 ஜி.பி. 749 டாலர். 256 ஜி.பி. 849 டாலர். ஐபோன் 7 ப்ளஸ் 32 ஜி.பி. 769 டாலர். 128 ஜி.பி. 869 டாலர், 256 ஜி.பி. 969 டாலர்.
இந்தியாவைப் பொறுத்த வரை, ஐபோன் 7 அடிப்படை மாடல் போன் ரூ. 60,000 அதிக பட்ச விலை என அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய ஜெட் பிளாக் வண்ண மாடல், 128 மற்றும் 256 ஜி.பி. ஸ்டோரேஜ் உடன் மட்டுமே கிடைக்கும். மற்றவற்றின் அதிகார பூர்வ விலை, இதனை எழுதி முடிக்கும் வரை தெரியவில்லை. அக்டோபர் 7 முதல் இந்தியாவில், இந்த போன்கள், ஆப்பிள் சாதனங்கள் விற்பனை மையங்களில் கிடைக்கும்.
ஐபோன் 7 மற்றும் ஐபோன் 7 ப்ளஸ் ஆகிய போன்களுடன், Lightning Connector Airpod மற்றும் Lightning Headphone Jack Adapter ஆகியவை இணைத்து தரப்படுகின்றன. தனியாக இவற்றை முறையே ரூ.2,500 மற்றும் ரூ.900 செலுத்தி வாங்கிக் கொள்ளலாம்.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X