பேஸ்புக்கில் நட்புகளை வடிகட்ட
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

19 செப்
2016
00:00

பேஸ்புக் போன்ற சமூக ஊடகங்கள் இன்று பலதரப்பட்ட மக்களை இணைத்து வருகின்றன. ஆனால், பல நேரங்களில், நாம் சிலருடன், சில அரசியல் கட்சியைச் சார்ந்தவர்களிடம், சில கொள்கைகள் கொண்டோருடன் நட்புறவு வைத்துக் கொள்ளத் தயங்குவோம். சிலரை நாம் நட்பாக ஏற்றுக் கொண்ட பின்னர், அவர்கள் நம்மை அவமானப் படும் வகையில் நடத்த முயற்சிக்கலாம். சிலர் நமக்கு எரிச்சல் தரும் வகையில் தகவல்களை அனுப்பலாம். அல்லது இவர்கள் தரும் ஏராளமான தகவல்களைச் சமாளிக்க நமக்கு நேரம் கிடைக்காது.
இத்தகைய சூழ்நிலைகளைத் தவிர்க்க, பேஸ்புக்கில் அரட்டை அடிக்கும் விருப்பத்தினையே முடக்கி வைக்கலாம். ஆனால், எல்லாரையும் நாம் ஒதுக்க முடியாது. ஒரு சிலருடன் தொடர்ந்து நட்புறவு வைத்துக் கொண்டு, தகவல்களை, உணர்வுகளைப் பகிர்ந்து கொள்ள விரும்புவோம். இப்படி ஒரு நிலை ஏற்படுகையில், அதனைச் சமாளிக்கும் வழிகள் என்ன? நாம் விரும்பிய வகையில் கட்டுப்பாடுகளை எப்படி அமைக்கலாம் என்ற வழிகளை இங்கு பார்க்கலாம்.
நம் பிரவுசரில், பேஸ்புக் இணைய தளத்தின், வலது கீழ் பகுதியில் சிறிய கியர் ஐகான் ஒன்று காட்டப்படும். இதன் வண்ணப் பின்னணியும், இதன் வண்ணமும் இது இருப்பதைப் பளிச் எனக் காட்டாது. அந்த கியர் ஐகானின் மீது கிளிக் செய்திடுங்கள்.
இங்கு கிடைக்கும் மெனுவில், Advanced Settings என்பதைத் தேர்ந்தெடுக்கவும். இப்போது கிடைக்கும் விண்டோவில், மேலே தரப்பட்டுள்ள சூழ்நிலைகளைக் கட்டுப்படுத்தும், சமாளிக்கும் வழிகள் தரப்பட்டிருப்பதனைக் காணலாம்.
1) Turn off chat for all friends என்பதைக் கிளிக் செய்தால், நமக்கு செய்தி / தகவல் வந்தால் நமக்கு அது அறிவிக்கப்பட மாட்டாது. அந்த செய்திகள் அனைத்தும் நம்முடைய இன் பாக்ஸுக்குச் செல்லும். அதை எப்போது வேண்டுமானாலும் திறந்து பார்த்துக் கொள்ளலாம்.
2) Turn off chat for all friends except என்பதனைத் தேர்ந்தெடுத்து, நாம் தொடர்பில் கொள்ள வேண்டிய நபர்களின் பட்டியலை மட்டும் தரலாம். 3) Turn off chat for only some friends என்பதைத் தேர்ந்தெடுத்து, நாம் விரும்பாத நண்பர்களின் பெயர்களை மட்டும் தரலாம். இதனால், அவர்களிடமிருந்து எந்த தகவலும் வராது.
இதில் நாம் ஒதுக்கும் நட்புக்களை முழுமையாகத் தடை (Block) செய்திட வேண்டியதில்லை. இவர்கள் உங்களுக்கு உடனடி தகவல்கள் அனுப்ப முடியாதபடி தடை எழுப்பப் பட்டிருக்கும். அவர்களுக்கு நீங்கள் இது போல விலக்கி வைத்திருப்பது அறிவிக்கப்பட மாட்டாது. நீங்கள் அரட்டையில் ஈடுபட அப்போது தயாராக இல்லை என்பது போலவே காட்டப்படும்.
மேலே சொல்லப்பட்ட விருப்பத் தேர்வுகள் அனைத்தும் பேஸ்புக் மெசஞ்சரில் தரப்படவில்லை. உங்களுடைய போன் அல்லது டேப்ளட் பி.சி.யில் இந்த வசதி கிடைக்காது.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X