இணையக் கட்டணத்தை 75% குறைக்க வேண்டும்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

19 செப்
2016
00:00

இந்தியாவில், தொலை தொடர்பு நிறுவனங்களால் விதிக்கப்படும், இணைய இணைப்புக்கான கட்டணத் திட்டங்கள் (data tariff plans) மிகவும் மலிவானவை என்று நீங்கள் நினைத்தால், அது முழுக்க முழுக்க தவறான எண்ணமாகும். டிஜிட்டல் மீடியா குறித்து, பன்னாட்டளவில் ஆய்வு நடத்திய உலகம்
தழுவிய அமைப்பு ஒன்று இதற்கு நேர் மாறான கருத்தினைத் தன் அண்மைக் காலத்திய அறிக்கையில் தெரிவித்துள்ளது. வளர்ந்துவிட்ட நாடுகளின் இணைய கட்டண அமைப்பின் அடிப்படையில் பார்த்தாலும், இந்தியாவில் வசூலிக்கப்படும் கட்டண விகிதம் மிக மிக அதிகம் என்று அந்த ஆய்வு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அத்துடன், உடனடியாக கட்டணத்தில் 75% குறைக்கப்பட்டாலே, இந்தியா டிஜிட்டல் இந்தியாவாக, அனைத்து மக்களும் இணையத்தில் இணைந்தவர்களாக மாறும் வாய்ப்புகள் ஏற்படும் என்று எச்சரித்துள்ளது.
இந்தியாவில், இணையக் கட்டணத்தினை ஆய்வு செய்கையில், ஒரு ஜி.பி. டேட்டாவில் வருமானமாக, நிறுவனங்கள் ரூ.228 பெறும் சூழ்நிலையில், அது வளர்ந்த மற்றும் வளர்ந்து வரும் மற்ற நாடுகளைக் காட்டிலும் மிக அதிகமாகும். ஒரு நாட்டு குடிமகனின் சராசரி வருமானத்தின் அடிப்படையில், இணையத்திற்கான செலவினங்களுடன், மற்ற நாடுகளின் தனி நபர் வருமானம் மற்றும் சார்ந்த இணையக் கட்டணத்தை ஒப்பிட்டால், இந்தியர்கள்
மிக அதிகமாக செலுத்தி வருகின்றனர் என்பது தெரியவரும்.
மொத்த இந்திய தேசிய வருமானத்தின் அடிப்படையில், தனி நபர் ஒருவர், ஒரு ஜி.பி. டேட்டா அளவிலான இணையத் தேடலை மேற்கொள்ள, தன் வருமானத்தில் 2.6% பங்கினை, இணைய டேட்டா கட்டணமாகச் செலுத்த வேண்டியுள்ளது. இதுவே, வளர்ந்த பிற நாடுகளின் சராசரி தனி நபர் வருமானத்துடன் ஒப்பிடுகையில், இணையக் கட்டணம் 0.4 முதல் 0.5 வரையாக உள்ளது. இதை வேறு கோணத்தில் பார்த்தால், இந்தியாவில், சராசரி இணையப் பயன்பாட்டினை மேற்கொள்ளும் ஒருவர், தன் ஆண்டு வருமானத்தில், 2.6 சதவீததினை, மாதம் ஒன்றுக்கு ஒரு ஜி.பி. டேட்டா பெறச் செலவழிக்கிறார். இது, மேலே சொல்லப்பட்ட மற்ற நாடுகளின் கட்டணத்தைக் காட்டிலும் அதிகம் ஆகும்.
இந்த ஆய்வு பல புதிய அதிரடி முடிவுகளை மேற்கொள்ள எச்சரிக்கை விடுத்துள்ளது. உடனடியாக, இணையக் கட்டணத்தில் 75% குறைக்கப்பட வேண்டும். (அப்போது, ஒரு ஜி.பி. டேட்டாவிற்கான சராசரி வருமானம் ரூ.57 ஆக இருக்கும்.) இந்த விலை குறைப்பு ஏற்படும் நிலையிலேயே, 66.7 கோடி சிம்களைப் பயன்படுத்தும் பயனாளர்கள் எண்ணிக்கை உயரும். 2019-20 ஆம் ஆண்டில், ஒவ்வொரு சிம் கார்ட் வழியாகவும் மாதம் ஒன்றில் 4.2 ஜி.பி. முதல் 4.3 ஜி.பி. வரை டேட்டா புழக்கத்தில் கிடைக்கும்.
இந்தக் கட்டணக் குறைப்பினால், தொலை தொடர்பு நிறுவனங்கள், தங்கள் வருமானத்தை இழக்காது என இந்த ஆய்வுக் கட்டுரை தெரிவிக்கிறது. கட்டணக் குறைப்பு ஏற்படுத்தப்பட்டால், பலருக்கு இணையத்தைப் பயன்படுத்துவதற்கான செலவு கட்டுபடியாகும் நிலைக்குச் செல்லும். மாதந்தோறும் பயன்படுத்தப்படும் டேட்டாவின் சராசரி அளவு 10.2 ஜி.பி. ஆக உயரும். இதற்கான கட்டணம், ஒரு ஜி.பி. டேட்டாவிறு ரூ.57 ஆகக் குறையும். மேலும், 10% வருமானம், அழைப்புகள் வழியாகக் கிடைக்கும். இப்படிப்பட்ட சூழ்நிலையில், பயனாளர் ஒருவர் மூலம் நிறுவனங்களுக்குக் கிடைக்கும் வருமானம் சராசரியாக ரூ.645 ஆக உயரும்.
இந்த அறிக்கையில் இந்திய தொலை தொடர்பு நிறுவனத்தின் பெயர் எதுவும் குறிப்பிடப்படவில்லை. இந்தியாவில் 3ஜி பயன்பாடு மிக வேகமாக உயர்ந்தது. அதே வேளையில் 4ஜி பயன்பாட்டிற்கான தேவை, அனுமதிக்கக் கூடிய அளவினைக் காட்டிலும் கூடுதலாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
4ஜி அலைவரிசை செயல்பாடு, நுகர்வோருக்குத் தேவையானதைக் காட்டிலும் அதிகமாகவே வழங்கப்படக் கூடிய நிலையில் உள்ளது. இதனால், நுகர்வோரின் பயன்பாட்டு முறையில் முதல் முறையாக, இந்தியாவில் பெரிய அளவில் முன்னேற்றம் ஏற்படும். ஏனென்றால், பயனாளர்கள் மிகச் சிறந்த, அதி வேகம் கொண்ட அலைவரிசைப் பயன்பாட்டினைப் பெற முடியும்.
இன்னொரு சாதகமான அம்சமும் இந்தியாவில் தற்போது ஏற்பட்டு வருகிறது. அது தொலை தொடர்புக்குத் தேவையான சாதனங்களின் எண்ணிக்கைப் பெருக்கமும் விலை குறைப்புமே ஆகும். தற்போது கிடைக்கும் சாதனங்கள் அனைத்தும், 3ஜி மற்றும் 4ஜி அலைவரிசைப் பயன்பாட்டிற்கு இணையானதாகவே வடிவமைக்கப்பட்டு கிடைக்கின்றன. இவற்றின் விலை மிக வேகமாக, மிக மிகக் குறைவாக நிர்ணயம் செய்யப்படுகின்றன. எனவே, சாதனங்கள் கிடைப்பது எளிதானதாக மாறிவிடும். இவற்றைச் சிரமம் இன்றி வாங்கும் அளவிற்குப் பொருளாதார நிலையும், மக்களின் சராசரி வருமானமும் உயர்வாக இருக்கும்.
இணையத்தில் மக்களுக்குக் கிடைக்கக் கூடிய தகவல்கள் குறித்து இந்த அறிக்கை அவ்வளவாகக் கூறவில்லை. தகவல்கள், மிகக் குறைந்த நேரத்தில் இயக்கக் கூடிய விடியோ பைல்களாக இணையத்தில் இருப்பதால், அவை மொபைல் வழி டேட்டா பயன்பாட்டினை அதிகமாக்கியுள்ளன. ஆங்கிலம் அறியாத மக்களுக்குத் தான், இணையம் அறிவது என்பது ஒரு சவாலாகவே உள்ளது.
இந்தியாவில், அடுத்த 30 கோடி இணையப் பயனாளர்கள் ஆங்கிலம் அறியாத மக்களிடமிருந்தே வருவார்கள் என கூகுள் அறிவித்துள்ளது. தற்போது தகவல்கள் ஆங்கிலத்திலேயே பெரும்பாலும் தரப்படுகிறது. இது, இந்திய இணையப் பயனாளர்களுக்குச் சிறிதும் தொடர்பு இல்லாததாகவே அமையும். எனவே, அடுத்து வர இருக்கும் இணையப் பயனாளர்கள், இந்தியக் கிராமப் புறங்களிலிருந்தே பெரும்பாலும் வர இருப்பதால், இணையத் தகவல்கள், அவரவர் பேச்சு வழக்கு மொழியிலேயே இருக்க வேண்டும்.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X