இணையத்தில் பெண்கள் ஏன் அதிகம் இல்லை?
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

19 செப்
2016
00:00

இந்தியாவில் பேஸ்புக் பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கை, இந்த ஆண்டின் தொடக்கத்தில், 13 கோடியை எட்டியது. இந்த வகையில், உலக அளவில், பேஸ்புக் நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கையில், இந்தியா இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. ஆனால், இதில் பெண்களின் எண்ணிக்கை 24% மட்டுமே. இது, இந்தியாவில், பெண்கள் தொழில் நுட்பத்தினையும், தகவல்களையும் அணுகுவதில் உள்ள தடைகளைக் காட்டுகிறது என இந்தப் பிரிவில் ஆய்வு மேற்கொள்வோர் கூறியுள்ளனர். பேஸ்புக் மட்டுமின்றி, தகவல் தொழில் நுட்பத்தில் பொதுவாகவும், இணையம் பயன்படுத்துவதில் குறிப்பாகவும் பெண்களின் நிலை இது போல் தான் உள்ளது.
ஆண்டு தோறும் இந்தியாவில், சமூக வலைத்தளங்களின் பயன்பாடு 28% அதிகரித்து வந்தாலும், அதில் பெண்களின் பங்கில் எந்தவித முன்னேற்றமும் இல்லை. இந்த ஆண், பெண் வேறுபாடு இணையத்தில் தொடர்ந்து நிலையாக இருந்து வருகிறது என We Are Social என்னும் சிங்கப்பூர் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்திய இணையம் மற்றும் மொபைல் கூட்டமைப்பு (Internet and Mobile Association of India (IAMAI) மொபைல் வழி இணையம் பயன்படுத்துவோரில், 35% பேர் பெண்கள் என அறிவித்துள்ளது. இதையே, உலக அளவிலான ஜி.எஸ்.எம். அமைப்பும் கூறியுள்ளது.
'இந்தியாவில், பெண்கள், கல்வியில் மாற்றங்கள் ஏற்பட்ட போதும், தொழில் புரட்சி ஏற்பட்ட போதும் பின் தங்கியே இருந்தனர். அதுவே, இப்போது ஏற்பட்டுள்ள டிஜிட்டல் மாற்றத்திலும் தென்படுகிறது' என சமூக ஆய்வு மையத்தின் இயக்குநர் ரஞ்சனா குமாரி தெரிவித்துள்ளார். ஒரு குடும்பத்தில், மொபைல் போன் ஒன்றைக் கொடுப்பதாக இருந்தால், பெண்களைக் காட்டிலும், ஆண்களுக்கே முன்னுரிமை அளிக்கின்றனர். அது மட்டுமின்றி, மொபைல் போன்களைப் பெண்கள் பயன்படுத்துவதை யாரும் ஆதரிப்பதில்லை. அவர்களுக்கு இந்த வகையில் ஊக்கம் அளிப்பதில்லை; ஊக்கங் கொடுக்காமல், மனத்தளர்வினையே உண்டாக்குகின்றனர்.
சென்ற பிப்ரவரி மாதம், குஜராத் மாநிலத்தில் சூரஜ் என்னும் கிராமத்திலும், உத்தரப் பிரதேசத்தில் பாசெளலி என்னும் கிராமத்திலும், பெண்கள் மொபைல் போன்கள் பயன்படுத்தக் கூடாது எனத் தடை விதிக்கப்பட்ட தகவல்கள் கிடைத்துள்ளன. முஸாபிர்நகர் என்னும் ஊரில் கூடிய பஞ்சாயத்து கூட்டம், இது போன்ற தடையை 46 கிராமங்களில் அமல் படுத்தியது. இதற்கான காரணமாக அவர்கள் கூறுவதென்ன? மொபைல் போன்களை பெண்கள் பயன்படுத்துவது ஒழுக்கக் குறைபாடிற்கு வழி கொடுத்து, குற்றங்களை அதிகப்படுத்துகிறது என்று இந்த தடையை விதித்த கிராமப் பஞ்சாயத்து பெரியவர்கள் கூறி உள்ளனர். தகவல்களை அறியும் வழிகளைப் பெண்களுக்கு அளிப்பது அபாயமான ஒன்றாகும் என இவர்கள் கருதுகின்றனர்.
ஆனால், இந்த நிலை இனி தொடராது என்றே பலரும் எதிர்பார்க்கின்றனர். சென்ற மார்ச் மாதம், பாஸ்டன் கன்சல்டிங் குரூப் என்ற ஆய்வு அமைப்பும், இந்திய சில்லரை வர்த்தகத்தினருக்கான அமைப்பும், வரும் 2020 ஆம் ஆண்டில், நகரங்களில் 40% பெண்கள் இணையத்தைப் பயன்படுத்துபவர்களாக இருப்பார்கள் என்று அறிவித்துள்ளன.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X