கம்ப்யூட்டருக்குப் புதியவரா! - மின் அஞ்சல்கள் - சற்று எண்ணிப் பார்க்க
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

19 செப்
2016
00:00

மின் அஞ்சல்கள் இல்லாத ஓர் இணையத்தை நம்மால் எண்ணிப் பார்க்க இயலுமா? அய்யய்யோ என்று நீங்கள் கூக்குரலிடுவது கேட்கிறது. ஏனென்றால், மின் அஞ்சல் நம் வாழ்வோடு இணைந்த ஒன்றாக மாறி, பல ஆண்டுகள் ஆகிவிட்டன. இதனை எல்லாரும் உணர்ந்துள்ளனர். ஆனால், மின் அஞ்சல்கள் குறித்த சில தகவல்களைப் பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. திகைக்க வைத்திடும் தகவல்கள் சிலவற்றை இங்கு காணலாம்.
1. ஒவ்வொரு நாளும், குத்து மதிப்பாக, 20,500 கோடி மின் அஞ்சல்கள் அனுப்பப்படுகின்றன. அதாவது, ஒவ்வொரு விநாடியிலும், 24 லட்சம் அஞ்சல்கள் அனுப்பப்பட்டு வருகின்றன. இதில் 90% ஸ்பெம் மெயில்கள் என எடுத்துக் கொண்டாலும், மிஞ்சி நிற்கும் அஞ்சல்களின் எண்ணிக்கை நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது.
2. மின் அஞ்சல் பயன்படுத்துபவர்களில், 91% பேர், தினந்தோறும் ஒரு முறையாவது தங்கள் அஞ்சல் கணக்கைக் காண்கின்றனர். இணையம் பயன்படுத்தாமல் உங்களால் இருக்க முடியுமா? முடியாது. இந்த வகையில், மின் அஞ்சல்கள் சரியான இடத்தைப் பிடித்துள்ளன.
3. மின் அஞ்சல் பயன்படுத்துபவர்களில், 75% பேர் தங்கள் ஸ்மார்ட் போன்களையே பயன்படுத்துகின்றனர். இந்த தகவல் தான், மக்கள் ஸ்மார்ட் போன்களுக்கு அடிமையாகியுள்ளனர் என்பதைக் காட்டியது.
4. ஜிமெயில் சந்தாதாரர்களின் எண்ணிக்கை ஏறத்தாழ நூறு கோடியை எட்டிவிட்டது. இந்த உலகின் ஜனத்தொகை 700 கோடியை எட்டியுள்ளது. இவர்களில், இன்னும் பெரும்பாலானவர்களுக்கு, இணைய இணைப்பு கிடைக்காமல் உள்ளது. எனவே, இணையம் பயன்படுத்தும் அனைவரும் ஜிமெயில் பயன்படுத்துகின்றனர் என்பது, பெரும் வியப்புக்குரிய செய்தியே.
5. நல்ல திறமையுடன் மின் அஞ்சல்களை, வர்த்தகப் பயன்பாட்டிற்குப் பயன்படுத்தினால், நாம் செலவழிக்கும் ஒவ்வொரு நூறு ரூபாய்க்கும், ரூ.4,500 லாபம் ஈட்டலாம். அதனால் தான், நாம் பல ஸ்பேம் மெயில்களை, நாள்தோறும் பெறுகிறோம்.
என்ன, இந்த தகவல்களைப் படித்து தலை சுற்றுகிறதா? இதில் நாமும் ஓர் அங்கம் என்பதனை நினைவில் கொள்ளுங்கள்.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X