ஆப்பிள் அறிவிப்புகள்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

19 செப்
2016
00:00

ஆப்பிள் நிறுவனம், ஐபோன் 7 மற்றும் ஐபோன் 7 ப்ளஸ் அறிமுகப்படுத்திய கையோடு, இந்தியாவிற்கான சில அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. முந்தைய ஆண்டுகளில், புதிய ஐபோன்கள் அறிமுகமாகும்போது, அவை அமெரிக்கா மற்றும் பிரிட்டன் நாடுகளில் வெளியாகும் நாட்கள் மற்றும் விலை அறிவிக்கப்படும். இந்தியா போன்ற நாடுகளில் எப்போது கிடைக்கும் மற்றும் அவற்றின் விலை குறித்த விபரங்கள், பின் நாளில் தான் அறிவிக்கப்படும். இதனால், இவை குறித்து பல்வேறு ஊகங்கள் மக்களிடையே வளரும்.
இதற்கு மாறாக, புதிய போன்களை அறிமுகப்படுத்திய கையோடு, இந்தியாவில் அவை எப்போது கிடைக்கும் எனவும் மற்றும் சார்ந்த தகவல்களையும் ஆப்பிள் அறிவித்துள்ளது. வரும் அக்டோபர் 7 அன்று, சரியாக அமெரிக்காவில் அறிமுகமாகி ஒரு மாதம் கழித்து, இந்தியாவில் ஐபோன் 7 கிடைக்க இருக்கிறது. அடிப்படி அம்சங்கள் உள்ள ஐபோன் 7ன் விலை ரூ. 60,000. முன்பு ஐபோன் 6 எஸ் வெளியான போது, அதன் 16 ஜி.பி. ஐபோன் 6 எஸ் விலை ரூ. 62,000 என அறிவித்தது நினைவிருக்கலாம். தற்போது, 32 ஜி.பி. அளவு தேக்ககம் ஐபோன் 7ல் கிடைக்கிறது.
இருப்பினும், அமெரிக்க விலையுடன் ஒப்பிடுகையில் இது மிக அதிகம் தான். அங்கு விலை 649 டாலர். இதனை இந்திய ரூபாயில் கணக்கிட்டால், ரூ. 43,000 தான் ஏறத்தாழ வருகிறது. இங்கு இந்தியாவில் செலுத்த வேண்டிய வரி மற்றும் மூன்றாம் நபர் வழி விற்பனை ஆகியவற்றால், இந்த விலை ஏற்றம் இருக்கலாம். எனவே, ஆப்பிள் நிறுவனம், இந்தியாவிலேயே, தன் ஐபோன்களைத் தயாரித்து வழங்கினால் மட்டுமே, அதன் விலை குறைவாக இருக்க வாய்ப்புண்டு.
மற்ற சாதனங்களைப் பொறுத்தவரை, புதிதாக அறிமுகமாகி இருக்கும் ஏர் பாட், வரும் அக்டோபர் மாத இறுதியில் இந்தியாவில் விற்பனைக்கு வரும். இதன் விலை ரூ. 15,400. ஐபோன் 7 உடன், லைட்னிங் கனக்டர் மற்றும் பழைய 3.5 மிமீ ஹெட்போன் ஜாக் இணைப்பதற்கான இடை இணைப்பி ஆகியவற்றுடன் ஏர்பாட் இணைந்தே தரப்படுகிறது. இருப்பினும், இவை ரூ.2,500 மற்றும் ரூ.900 என்று விலையிடப்பட்டுள்ளன. போனுக்கான லெதர் மற்றும் சிலிகான் கவசங்கள் ரூ. 2,900 என விலையிடப்படுள்ளன ஐபோன் 7 ஸ்மார்ட் பேட்டரி கேஸ் விலை ரூ.8,900. லைட்டிங் டாக் ரூ. 3,700.
அக்டோபர் 7 அன்றே, ஆப்பிள் வாட்ச் வரிசை 2 இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கிறாது. இதன் விலை ரூ. 32,900ல் தொடங்கி, ரூ. 1,10,900 வரை செல்கிறது.
மற்ற ஐபோன் 7 மாடல்களின் இந்திய விலை குறித்து இன்னும் அறிவிப்பு வரவில்லை. இதற்கிடையே, இனி இந்தியாவிலும் சேர்த்து, எங்கும் ஐபோன் 5 எஸ், ஐபோன் 6 மற்றும் ஐபோன் 6 ப்ளஸ் மாடல்கள் விற்பனை செய்யப்பட மாட்டாது. ஆப்பிள் நிறுவனத்தின் இணைய தளங்களிலிருந்து இவை எடுக்கப்பட்டு விட்டன. ஐபோன் 5 எஸ் எடுக்கப்பட்டதில் ஆச்சரியம் எதுவுமில்லை. ஆனால், வழக்கம் போல, குறைவான விலையில், ஐபோன் 6 மற்றும் ஐபோன் 6 ப்ளஸ் மாடல் போன்கள் இன்னும் ஓராண்டுக்கு விற்பனையில் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. அதே போல, புதிய போன் மாடல்கள் வருகையில், அவற்றிற்கு முந்தைய மாடல்களின் விலை குறைக்கப்படும்; அப்போது வாங்கலாம் என்று காத்திருந்த வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பினை ஆப்பிள் தகர்த்துவிட்டது. இவற்றை வாங்க விரும்புபவர்கள், இன்னும் இவற்றை ஸ்டாக் வைத்திருக்கும், ஆப்பிள் அல்லாத மற்ற மொபைல் போன் விற்பனை மையங்களில் வாங்கலாம். ஆனால், விலை குறையும் என்று எதிர்பார்க்க முடியாது.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X