எச்.டி.சி. ஒன் இ9
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

19 செப்
2016
00:00

தன் தொழில் நுட்ப திறனுக்குப் பெயர் பெற்ற எச்.டி.சி. நிறுவனம், அண்மையில் உயர் ரக ஸ்மார்ட் போனை, Htc One E9 என்ற பெயரில், விற்பனைக்குக் கொண்டு வந்தது. இதன் அதிக பட்ச விலை ரூ. 32,000. இதன் சிறப்பம்சங்களை இங்கு காணலாம்.
இதன் திரை 5.5.அங்குல அளவில், கெபாசிடிவ் டச் ஸ்கிரீனாக, 1440 x 2560 பிக்ஸெல் அடர்த்தியுடன் அமைக்கப்பட்டுள்ளது. கார்னிங் கொரில்லா கிளாஸ் 4 பாதுகாப்பு தரப்பட்டுள்ளது. மல்ட்டி டச் வசதி தரப்பட்டுள்ளது. இதன் ராம் மெமரி 3 ஜி.பி. என்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும். இதன் ஸ்டோரேஜ் வசதி 32 ஜி.பி. இதனை 128 ஜி.பி. வரை உயர்த்தலாம். இதில் இரண்டு சிம்களைப் பயன்படுத்தலாம். இதன் பரிமாணம் 156.5 x 76.5 x 7.5 மிமீ. எடை 150 கிராம். எஸ்.எம்.எஸ்., எம்.எம்.எஸ்., புஷ் மெயில், இமெயில் மற்றும் இன்ஸ்டண்ட் மெசஞ்சர் வசதிகள் கிடைக்கின்றன.
எம்.பி. 3, எம்.பி. 4 பிளேயர்கள், விடியோ மற்றும் டாகுமெண்ட் எடிட்டர் செயலிகள் இயங்குகின்றன. ஆண்ட்ராய்ட் லாலி பாப் ஆப்பரேட்டிங் சிஸ்டம் கிடைக்கிறது.
பின்புறமாக உள்ள கேமரா 20 எம்.பி. திறனுடன், ஆட்டோ போகஸ் மற்றும் எல்.இ.டி. ப்ளாஷ் வசதியுடன் இயங்குகிறது. முன்புறக் கேமரா 4 எம்.பி. திறனுடன் செயல்படுகிறது. லவுட் ஸ்பீக்கர் மற்றும் 3.5 மிமீ ஆடியோ ஜாக் தரப்பட்டுள்ளன.
இதன் சிப்செட் மீடியா டெக் MT6795M சிப். PowerVR G6200 உடன் இணைந்து செயல்படுகிறது. 2ஜி, 3ஜி மற்றும் 4ஜி போனாக இதனை இயக்கலாம். நெட்வொர்க் இணைப்பிற்கு, ஜி.பி.ஆர்.எஸ்., எட்ஜ், வை பி, புளுடூத், என்.எப்.சி., யு.எஸ்.பி. ஆகிய தொழில் நுட்பங்கள் இயங்குகின்றன.
Accelerometer, gyro, proximity, compass சென்சார்கள் இயங்குகின்றன. இதன் லித்தியம் போடியம் பேட்டரி, 2,800 mAh திறன் கொண்டது. இதனை வெளியே எடுக்க இயலாது. இந்த பேட்டரி, ஒரு முறை சார்ஜ் செய்தால், 590 மணி நேரம் மின் சக்தியைத் தங்க வைக்கிறது. தொடர்ந்து 21 மணி நேரம் பேசுவதற்கான மின் சக்தியை அளிக்கிறது. இதன் அதிக பட்ச விலை ரூ. 32,000.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X