ஆதார் இணைந்த மொபைல் போன்கள்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

26 செப்
2016
00:00

ஆப்பிள் மற்றும் கூகுள் நிறுவனங்கள், இந்திய மொபைல் நிறுவனங்களுக்கு முதல் இடங்களைக் கொடுத்துவிட்டுப் பின்னால் செல்லும் நிலை இன்னும் சில மாதங்களில் வர நேரிடலாம். ஏனென்றால், ஆதார் அடையாளங்களை மொபைல் போன்களிலேயே உள்ளடக்கித்தரும் வகையில் வடிவமைக்க, மைக்ரோமேக்ஸ் மற்றும் லாவா போன்ற இந்திய மொபைல் நிறுவனங்கள் ஒத்துக் கொண்டன. ஆனால், ஆப்பிள் மற்றும் கூகுள் நிறுவனங்கள் இதற்கு மறுத்துவிட்டன. சென்ற ஜூலை மாதம், இது குறித்துப் பேச, ஆதார் அட்டைகளை வழங்கும் Unique Identification Authority of India (UIDAI) அமைப்பு கூகுள், மைக்ரோசாப்ட், ஆப்பிள், சாம்சங் ஆகிய நிறுவனங்களை அழைத்தது. பயோமெட்ரிக் அடையாளங்களை ஏற்றுக் கொண்டு காட்டும் தொழில் நுட்பத்தினை இணைக்க வெளிநாட்டு நிறுவனங்கள் மறுத்துவிட்டன. இதன் வழியாக ஹேக்கர்கள் மொபைல் போன்களில் புகுந்துவிடும் வாய்ப்பு உள்ளதென அந்நிறுவனங்கள் அறிவித்துள்ளன. மேலும் தங்கள் ஆப்பரேட்டிங் சிஸ்டம் திறக்கப்பட்டு இந்த தகவல்கள் பதியப்படுவதை அவர்கள் விரும்பவில்லை. ஆனால், இந்திய நிறுவனங்களான மைக்ரோமேக்ஸ், லாவா, இன்டெக்ஸ், ரிலையன்ஸ் ஆகியவை இதற்கு ஒத்துக் கொண்டன.
ஆதார் மொபைல் போன்களில், நம் ஆதார் தகவல்களைப் பதிவு செய்து கொண்டால், எங்கு வேண்டுமானாலும், நம் மொபைல் போன்களைக் காட்டி நம் தனி அடையாளத்தை நிலை நாட்டிவிடலாம். மொபைல் வழி இணைய சேவை பெற்று, வர்த்தகம் மேற்கொள்வோருக்கு, தங்கள் அடையாளத்தை, அந்த போனிலிருந்தே அனுப்பி விடலாம். எடுத்துக் காட்டாக, ரயில் டிக்கட் வாங்குவோர், வேறு எந்த அடையாள அட்டையையும் காட்ட வேண்டியதில்லை. டிக்கட் எடுக்கும்போதே, அதில் உள்ள ஆதார் தகவல்களை, டிக்கட் வழங்கும் சர்வரே படித்துக் கொள்ளும்.
அடையாளங்களைக் காட்ட வேண்டிய இடத்தில், இதற்கென வடிவமைக்கப்படும் 'ஐரிஸ் கேமரா' முன், மொபைல் போன் திரையைக் காட்டினால் போதும். அந்தக் கேமரா, அத்தகவல்களைப் படித்தறிந்து கொள்ளும். இதுவரை, சாம்சங் மட்டுமே, பயோ மெட்ரிக் தகவல்களை, ஐரிஸ் கேமரா படிக்கும் வகையில், இணைத்துக் கொள்ளும் தொழில் நுட்பத்துடன் கூடிய டேப்ளட் பி.சி. ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன் பெயர் Galaxy Tab Iris. இதன் அதிக பட்ச விலை ரூ. 13,499. இதனுள் அமைக்கப்பட்டுள்ள ஐரிஸ் ஸ்கேனர், ஆதார் அட்டை தகவல்கள் மற்றும் STQC, and UIDAI பயோமெட்ரிக் தகவல்களை ஏற்றுக் கொள்ளும். இதனால், நாம் பணத்தை கையில் எடுத்துச் செல்லாமல், வங்கியின் நெட்பேங்கிங் துணையுடன், மொபைல் போனை, அதற்கான ரீடர் முன்பு அசைத்துப் பணம் செலுத்தலாம். 193.4 x 116.4 x 9.7 மிமீ அளவில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த டேப்ளட் பி.சி.யின் எடை 327 கிராம்.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X