கட்டற்ற மென்பொருள் கோட்பாடு
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

26 செப்
2016
00:00

கடந்த பத்து ஆண்டுகளாக, ஒவ்வொரு செப்டம்பர் மாதத்தின் மூன்றாம் சனிக்கிழமை, “மென்பொருள் சுதந்திர நாள்” (Software Freedom Day) எனக் கொண்டாடப்படுகிறது. காப்பீடு உரிமையுடன் கூடிய மென்பொருட்களைப் பயன்படுத்துவதில், பல நிபந்தனைகளைச் சந்தித்து, அதனால், எரிச்சல் அடைந்தவர்கள் பலர் இணைந்து, 1980 ஆம் ஆண்டு வாக்கில் ஆரம்பித்த இயக்கமே FOSS (Free and Open Source Software) இயக்கம் ஆகும். விண்டோஸ் இயக்கத்தின் ஆளுமையைக் குறைப்பதனை நோக்கமாக முதலில் கொண்டிருந்தாலும், இந்த இயக்கத்தின் அந்தக் குறிக்கோள், கடந்த பத்து ஆண்டுகளில் நீர்த்துப் போனது.
FOSS இயக்கம் தற்போது, பெரும்பாலானவர்களால், Linux எனவே அறியப்படுகிறது. இந்தியா போல வளர்ந்து வரும் நாடுகளில், தொழில் நுட்ப முன்னேற்றத்திற்கு முதல் இடம் கொடுக்கும் நாடுகளில், லினக்ஸ் ஒரு சிறந்த மாற்றாகக் கருதப்பட்டு பின்பற்றப்பட்டு வருகிறது. இன்றைய நவீன டிஜிட்டல் வாழ்க்கையினைத் தரும் பெரும்பாலான கணினி செயல்பாடுகளுக்குப் பின்னால், FOSS இயங்கி வருகிறது. FOSS பெரும்பாலான ஸ்மார்ட் போன்களை இயக்குகிறது. சூப்பர் கம்ப்யூட்டர்களைச் செயல்படுத்துகிறது. வங்கிகளின், ஏ.டி.எம். மையங்கள், சர்வர்கள் மற்றும் இணைய தளங்களை உலகளாவிய அளவில் இயக்கி வருகிறது. இந்தியாவைப் பொறுத்த மட்டில், பொதுமக்களுக்கு மிகவும் பரிச்சயமான, மிக நெருங்கிய இரண்டு துறைகள் லினக்ஸ் சர்வர்களைத்தான் பயன்படுத்தி வருகின்றன. அவை, ஐ.ஆர்.சி.டி.சி. இணைய தளத்தைப் பயன்படுத்தும் இந்திய ரயில்வே மற்றும் ஆதார் எண்களை மக்களுக்கு வழங்கும் துறை ஆகும். எந்த வகையில், எதற்காக, நாம் FOSS குறித்து, அறிந்து கொள்ள வேண்டும் என இங்கு பார்க்கலாம்.
“இலவச மென்பொருள்” (FREE SOFTWARE) என்பது குறித்துப் பலர் தவறான எண்ணம் கொண்டுள்ளனர். கட்டணம் எதுவும் செலுத்தாமல், நாம் பயன்படுத்தும் மென்பொருள் செயலிகள் அனைத்தும் “இலவச மென்பொருள்” என எண்ணுகின்றனர். அப்படி என்றால், ஆப்பிள் சாதனங்களில், பதியப்பட்டுத் தரப்படும், ஆப்பிள் இயக்க மென்பொருள் அனைத்தும் இலவச மென்பொருள் என்றாகிவிடும். ஆனால் அவை அல்ல. இது ஓர் அம்சம் மட்டுமே. ஆனால், முக்கியமான அம்சம், தான் பயன்படுத்தும் மென்பொருள் தொகுப்பினைப் படித்துப் பார்த்து, அதன் கட்டமைப்பினைப் புரிந்து கொண்டு, தனக்கு வேண்டிய வகையில் மாற்றி அமைக்க வழி தரும் மென்பொருளே, “இலவச மென்பொருள்” ஆகும். பயன்படுத்துபவர்களுக்கு இந்த கட்டற்ற சுதந்திரம் தருபவையே “இலவச மென்பொருள்” (FREE SOFTWARE) ஆகும்.
இந்த சுதந்திர மென்பொருள் கோட்பாட்டினை அனைத்து நிறுவனங்களும் தர வேண்டும் என, இந்த இயக்கத்தவர் கேட்கின்றனர். எப்படி, கார் ஒன்றை நாம் காசு கொடுத்து வாங்கிவிட்டால், அதில் நமக்குத் தேவையான வசதிகளுக்கு ஏற்ற வகையில், உபரி சாதனங்களைப் பொறுத்துகிறோமோ, இருக்கைகளை மாற்றி அமைக்கிறோமோ, அதே போல, மென்பொருள் ஒன்றை வாங்கிய ஒருவர், தனக்குத் தேவைப்படும் வசதிகளுக்கேற்ப, அந்த மென்பொருளை மாற்றி அமைப்பதற்குத் தேவையான குறியீடுகளை, அதனை விற்பனை செய்த நிறுவனம் வழங்கி உதவ வேண்டும் என இவர்கள் வாதிடுகின்றனர்.
ஆனால், இதற்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்கள், ஒரு மென்பொருள் தொகுப்பை நகலெடுத்துப் பலவாறாகப் பெருக்கி, கட்டணம் இல்லாமல் பலருக்குத் தர முடியும். இதை அனுமதித்தால், மென்பொருள் நிறுவனங்கள் அனைத்தும் நஷ்டம் அடையும். இதைத்தான் இவர்கள் “Piracy” திருட்டு நகல் என அழைக்கின்றனர். எனவே தான், அரசு மென்பொருள் ஒன்றை, அதனைத் தயாரித்து வழங்குபவரின் அல்லது நிறுவனத்தின், சொத்தாகக் கருதி, அதனை நகல் எடுத்துப் பங்கிட்டுக் கொள்வதனைக் குற்றமாகக் கருத வேண்டும் என வாதிடுகின்றனர். ஒரு காருக்கு இதனை ஒப்பிட்டுப் பார்க்கக் கூடாது. காரும், மென்பொருளும் அதன் வடிவமைப்பில் செலவிட்ட மூளைத்திறனில் ஒன்றல்ல என்று கூறுகின்றனர்.

இந்தியாவில் “இலவச மென்பொருள்”
இந்தியா இதுவரை, FOSS குறித்துத் தெளிவான முடிவைத் தெரிவிக்கவில்லை. சென்ற ஆண்டு நரேந்திர மோடி அவர்களின் தலைமையிலான அரசு இது குறித்து ஒரு முடிவை அறிவித்தது. அதில், அரசு துறைகள், டிஜிட்டல் மயமாக்கத்தில், விண்டோஸ் போன்ற Closed Source Software (CSS) இயக்க முறைமைகளுக்கு இணையாக, இந்த “கட்டற்ற மென்பொருள்” பயன்பாடு குறித்தும் கட்டாயம் கணிக்கப்பட வேண்டும் எனக் கூறியது, மத்திய அரசு துறைகளுக்கு இந்த கோட்பாட்டினைக் கட்டாயமாக்கிய மத்திய அரசு, மாநில அரசுகளுக்கு இதனைக் கட்டாயமாக்கவில்லை. இந்தியாவை டிஜிட்டல் மயமாக்குவதில், இலவச மென்பொருள் செலவினைக் குறைக்கும் என்பதால், இந்த அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டது.
இலவச மென்பொருட்களை மட்டும் தான் அரசு துறைகளில் பயன்படுத்த வேண்டும் என அரசு கட்டாயப்படுத்தாததால் தான், கூகுள், மைக்ரோசாப்ட் மற்றும் ஆப்பிள் போன்ற சாப்ட்வேர் நிறுவனங்கள், இந்தியாவில் தங்கள் வர்த்தக வாய்ப்புகள் மிகப் பிரகாசமாக உள்ளது என கணக்கிட்டு இறங்கியுள்ளன. மேலே குறிப்பிட்ட நிறுவனங்களின் தலைமை நிர்வாகிகள், இந்தியாவிற்கு வந்து செல்வது இதனால் தான்.
ஒரு சிலர், இந்தியா டிஜிட்டலாக வளர்ச்சி அடைய வேண்டிய நாடு என்பதால், கட்டுப்பாடான மென்பொருள் மற்றும் கட்டற்ற மென்பொருள் இடையே நடுநிலையாக மட்டுமே இருக்க வேண்டும். கட்டற்ற மென்பொருள் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும் என நாம் கட்டாயப்படுத்தினால், டிஜிட்டல் உலகில் முன்னணியில் இயங்கும் மைக்ரோசாப்ட், ஆப்பிள் மற்றும் கூகுள் போன்ற நிறுவனங்கள் இந்தியாவைக் கைவிடும் வாய்ப்புகள் அதிகமாகும் என்று வாதிடுகின்றனர்.
ஆனால், இந்தியா வேகமாக டிஜிட்டலாக முன்னேற வேண்டும் என்றால், இலவசமாகக் கிடைக்கும் மென்பொருட்களும், கட்டற்ற மென்பொருட்களுமே, இந்த வகையில் வேகத்தினைத் தரும் என்று பலரும் கருதுகின்றனர். நாம் இன்று பயன்படுத்தும் பல மென்பொருள் தொகுப்புகள், பிரவுசர்கள், மின் அஞ்சல் செயலிகள், மொபைல் போன் செயலிகள், மீடியா பிளேயர்கள் எனப் பல இன்று இலவச மென்பொருட்களாகவே நமக்குக் கிடைத்து வருகின்றன. எனவே, அனைத்தும் இது போல நம் தேவைக்கு மாற்றிப் பயன்படுத்தக் கூடிய வகையில், கட்டற்ற மென்பொருட்களாக இருப்பின், நம் முன்னேற்றம் இன்னும் வேகமாகும் என்ற கோட்பாடு தற்போது உறுதிப்பட்டு வருகிறது.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X