நாடு முழுவதும் இணையம்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

26 செப்
2016
00:00

சவுதி அரேபியாவில், 95% வீடுகளில் இணைய இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. மிக அதிகமான எண்ணிக்கையில் வீடுகளுக்கு இணைப்பு வழங்கிய நாடாக இது இடம் பெற்றுள்ளது. சிங்கப்பூர் (98.8%). இரண்டாவது இடம் கத்தார் (96%). ஐஸ்லாந்து 98.2% வீடுகளுக்கும், டென்மார்க் 97% வீடுகளுக்கும் இணைப்பு வழங்கியுள்ளது. இதனை ஐக்கிய நாடுகள் இணைய ஆணையம் (United Nations Broadband Commission) அறிவித்துள்ளது. இதன் அறிக்கையில் மேலும் பல தகவல்கள் வெளியாகியுள்ளன.
சீனா, உலகிலேயே அதிக எண்ணிக்கையில், (72.1 கோடி பேர்) இணையம் பயன்படுத்து பவர்களைக் கொண்டுள்ளது. அடுத்ததாக, இந்தியா 33.3 கோடி பேரைக் கொண்டுள்ளது. இந்த இரு நாடுகளிலும், ஜனத்தொகையில் பாதிக்கு மேல் இணையம் பயன்படுத்தாதவர்களாகவே உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. உலக அளவில் 39-0 கோடி பேர் இணையத்தைப் பயன்படுத்தாமல் வாழ்ந்து கொண்டுள்ளனர். இணையம் பயன்படுத்துபவர்களில், 66%
பேர், சீனா, இந்தியா, இந்தோனேஷியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் நைஜீரியாவில் உள்ளனர்.
அமெரிக்கா உட்பட, உலகில் 20 நாடுகளில், உலக அளவில் இணையம் பயன்படுத்துவோரில், மூன்றில் ஒரு பங்கினர் உள்ளனர். பல நாடுகளில், இணையம் பயன்படுத்துவோருக்கும் பயன்படுத்தாவதருக்கும் இடையே உள்ள இடைவெளியைக் குறைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
அண்மையில், ஐக்கிய நாடுகள் சபை இணையம் சார்ந்த கூட்டம் கூட்டப்படும் முன், இணையம் குறித்த அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது. அதில், மொபைல் வழி இணைய இணைப்பிற்கான 4ஜி சேவை, இணையத்தை அதிக மக்களுக்குக் கொண்டு செல்வதில் பெரும்பங்கு கொள்ளும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான, மொனாகோ நாட்டில் தான் 100 வீடுகளில் 47 வீடுகளுக்கு வயர் வழி இணைய இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.
ஸ்விட்சர்லாந்தில் இது 45 சதவீதம். இவற்றுடன், லீச்டென்ஸ்டீன், டென்மார்க், நெதர்லாந்து, பிரான்ஸ் மற்றும் தென் கொரியா நாடுகள், 40% வீடுகளுக்கு மேல் நிலையான இணைப்பைக் கொடுத்த நாடுகளாக உள்ளன.
மொபைல் பிராட்பேண்ட் இணைப்பு வழங்கியதில், பின்லாந்து நாடு முதல் இடம் கொண்டுள்ளது. அங்கு 100 பேருக்கு 144 இணைப்புகள் வழங்கப் பட்டுள்ளன. சிங்கப்பூர் அடுத்த இடத்தில், 100 பேருக்கு 142 இணைப்புகளைக் கொண்டுள்ளது. அடுத்ததாக, குவைத் 100 பேருக்கு 139 மொபைல் வழி இணைய இணைப்பினைத் தந்துள்ளது. ஆசிய பசிபிக் நாடுகளில் தான், உலக அளவில், மிக அதிகமாக 48% மொபைல் இணைய இணைப்புகள் இயங்குகின்றன.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X