பேஸ்புக் நிறுவனர் மார்க் 300 கோடி டாலர் உதவி
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

26 செப்
2016
00:00

“உலகில் உள்ள அனைத்து வியாதிகளையும், நம் குழந்தைகளின் காலத்திலாவது, முற்றிலுமாக ஒழிக்க வேண்டும். அதற்கென, அடுத்த பத்து ஆண்டுகளில், அனைத்து வகை வியாதிகளைத் தடுக்கும் ஆய்வுகளுக்கு 300 கோடி டாலர் உதவி அளிக்கிறேன்” என பேஸ்புக் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி மார்க் ஸக்கர்பெர்க் அறிவித்துள்ளார். இந்த முடிவினை அவரும் குழந்தைகள் நல மருத்துவரான அவருடைய மனைவி பிரிஸ்சில்லா சான் ஆகிய இருவரும் தெரிவித்துள்ளனர்.
இந்த நிதியளிப்பும் தொடர் முயற்சிகளும் Chan Zuckerberg என்ற அமைப்பின் கீழ் நிர்வகிக்கப்படும். இந்த அமைப்பினை உருவாக்கி, அதனைச் செயல்படுத்த சென்ற ஆண்டில், மார்க் நிதி வழங்குவதாக உறுதி அளித்தார். இங்கு மேற்கொள்ளப்படும் ஆய்வுகள், “சான் ஸக்கர்பெர்க் அறிவியல் (Chan Zuckerberg Science)” என அழைக்கப்படும். உலகளாவிய அளவில் இதன் செயல்பாடுகள் இருந்தாலும், சான்பிரான்சிஸ்கோ நகரில் இதன் செயல்பாடுகளின் கட்டமைப்பு இயங்கும். இங்கு இயங்கும் கலிபோர்னியா பல்கலை, கலிபோர்னியா பெர்க்லீ பல்கலை மற்றும் ஸ்டான்போர்ட் பல்கலை ஆகியவற்றுடன் இணைந்து ஓர் உயிரியியல் ஆய்வு மையம் உருவாக்கப்பட்டு, அதன் வழியே இந்த அறிவியல் ஆய்வு முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.
சென்ற டிசம்பர் மாதம், தங்களுடைய மகள் பிறந்ததைக் கொண்டாடுகையில், தங்களின் சொத்து வருமானத்தின் பெரும் பகுதியை (பேஸ்புக் நிறுவனத்தில் தங்களுக்குள்ள 99% பங்குகள்) மனித இனத்தின் திறன் வளர்ச்சிக்கென வழங்குவதாக அறிவித்து, வரும் சந்ததியினர் அனைவரும் சமமான இடத்தை இந்த உலகில் கொண்டு வாழ்வதை உறுதி செய்திட இது பயன்படுத்தப்படும் எனக் கூறினர். இந்த நூற்றாண்டின் இறுதிக்குள், அனைத்து நோய்களையும் தடுக்கும் வழி முறைகள் கண்டறியப்பட்டு, இன்றைய நம் குழந்தைகளின் எதிர்காலம் முற்றிலும் நலமான ஓர் உலகைக் கொண்டதாக இருக்க வேண்டும் என்றும் அறிவித்தனர்.
மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் இது போன்ற அறக்கட்டளை மூலம் பெரிய அளவில் உதவிகள் செய்து வருகிறார். அவர் மார்க் மற்றும் அவர் மனைவியின் இந்த முடிவினை வரவேற்று, அவர்களைப் பாராட்டியுள்ளார்.
வழக்கமான, அரசின் நிதி உதவியுடன் மேற்கொள்ளப்படும் கல்வி முறை ஆய்வுகளில் தீர்க்க இயாலாத பிரச்னைகளை இந்த ஆய்வு மையம் எடுத்துக் கொண்டு செயல்படும். முதல் நிலையாக, மனித உடலில் உள்ள பலவகை செல்களுக்கான வரைபடம் (Atlas) உருவாக்கப்படும். இன்னும் யாராலும், துல்லிதமாக, மனித உடலில் எத்தனை வகை செல்கள் உள்ளன என்று கண்டறிய இயலவில்லை. இதனை முதலில் கண்டறிந்து இந்த மையம் பதிவிடும். இதன் மூலம், இந்த செல்கள் எப்படி நோய்க் கிருமிகளைக் கடத்துகின்றன என்று எளிதில் அறிந்து கொள்ளலாம் என்று இந்த மையத்தின் தலைவர் அறிவித்துள்ளார்.
இந்த முயற்சிகளில் உடற்கூறுயியல் விஞ்ஞானிகளும், தகவல் தொடர்பு பொறியாளர்களும் இணைந்து செயல்பட்டு, மருத்துவத் துறையில் பல புதிய சாதனங்களை உருவாக்குவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மூளையின் செயல்பாட்டைக் கண்டறியும் பிரிவான 'செயற்கை நுண்ணறிவியல்' துறையில் முதலீடு செய்வதன் மூலம், மூளையின் செயல்பாடுகளை ஆய்வு செய்திடலாம். புற்றுநோய் கிருமிகள் குறித்து கண்டறியலாம். தொற்று நோய் கிருமிகளைக் கண்டறிய கம்ப்யூட்டர் சிப்களை உருவாக்கலாம் என்று மார்க் தெரிவித்துள்ளார்.
இந்த மூன்று பல்கலைக் கழகங்களில் பணியாற்றும் எந்த ஒரு விஞ்ஞானியும், ஐந்து ஆண்டுகளுக்குத் தங்கள் ஆய்விற்கு நிதி உதவி கேட்டு விண்ணப்பிக்கலாம். அதன் மூலம் ஆய்வினைத் தொடரலாம். பேஸ்புக் நிறுவனத் தலைவரின் இந்த முயற்சிக்கு நன்றி கூறி வரவேற்போம்.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X