பெர்சனல் பிரேக்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

26 செப்
2016
00:00

ஜிமெயில் தரப்பட்ட காலத்திலிருந்து, அதனைப் பயன்படுத்தி வருகிறேன். அதில் அமைக்கப்படும் முகவரிகளில் இவ்வளவு நெளிவு சுழிவுகளுடன் கூடுதல் வசதிகள் இருப்பது குறித்து எந்த நூலிலும் படித்ததில்லை. பயன்படுத்தியதும் இல்லை. தாங்கள் குறிப்பிட்ட அனைத்தையும் பயன்படுத்தத் தொடங்கியதுடன், நண்பர்களுக்கும் கூறி வருகிறேன். இது போன்ற தகவல்களைத் தருவதில் கம்ப்யூட்டர் மலர் தான் முன்னணியில் உள்ளது. உங்களுக்கும் ஆசிரியர் குழுவிற்கும் நன்றி.
என். ஜெபமாலா, திருச்சி.

பிரவுசரில் எக்ஸ்டன்ஷன் பயன்பாடுகளே கூடுதல் வசதிகளைத் தருகின்றன. மைக்ரோசாப்ட் இதனை உணர்ந்தே, தன் எட்ஜ் பிரவுசரில் எக்ஸ்டன்ஷன்களை அனுமதித்துள்ளது. இதன் மூலம் தன் பிரவுசர் பக்கம் பயனாளர்களை இழுத்து தக்க வைக்கும் முயற்சியில் வெற்றி பெற்றுள்ளது. மற்ற பிரவுசர்களில் இல்லாத பல வசதிகள், செயல்வேகம் எட்ஜ் பிரவுசரில் உள்ளது. பயனாளர்கள் இதனை உணர்ந்து பயன்படுத்தத் தொடங்கினால், நிச்சயம் குரோம் பிரவுசர் தன் பயனாளர்களை இழக்கும் என்பது உறுதி. உங்கள் எட்ஜ் பிரவுசர் குறித்த கட்டுரையில், குரோம் பிரவுசரை ஒப்பிட்டும் எழுதி இருக்கலாம்.
டாக்டர் எம். ஜெயப்பிரகாஷ், கோவை.

மின் அஞ்சல்கள் குறித்த தகவல்கள் வேடிக்கையாகவும் வியப்பூட்டுவதாகவும் உள்ளன. இது போன்ற தகவல்களை அடிக்கடி, இணையம் சார்ந்தும் தரவும்.
பா. பைரவி, திருப்பரங்குன்றம்.

மிக எளிதாகவும், சுருக்கமாகவும், பேஸ்புக்கில் நட்புகளை வெறுக்காமல் ஒதுக்கி வைக்கும் செயல்பாட்டினைத் தந்துள்ளது மிகவும் பயனுள்ளதாக உள்ளது. நன்றி.
ஆர். ஹேமலதா, செய்யாறு.

அருமையான ஆய்வுத் தகவல்களைச் சுட்டிக் காட்டி, இணையக் கட்டணத்தை 75% குறைக்க வேண்டும் என்று ஆணித்தரமாகக் காட்டப்பட்டுள்ள கட்டுரை வரவேற்கத்தக்கது. இதனை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து ட்ராய் மற்றும் தகவல் தொலை நுட்பத் துறை அதிகாரிகளுக்கு அனுப்பினால் பயன் விளைவிக்கும் என்று எண்ணுகிறேன். கட்டுரை எழுதிய துணை ஆசிரியருக்குப் பாராட்டுகள்.
ஆர். கோவிந்தராஜ், திருப்பூர்.

ஆப்பிள் நிறுவனம் தொடர்ந்து தன் சாதனங்களின் விலையை, மற்ற போன்களுடன் ஒப்பிடுகையில் மிகையாகவே வைத்துள்ளது. இதற்கு என்ன காரணங்கள் கூறினாலும் ஏற்றுக் கொள்ள முடியாது. நமக்கு தேவையான செயல்பாடுகள் நிறைவேறினால் போதும் என விலை அடிப்படையில் போன்களை வாங்குபவர்கள், நிச்சயம் ஆப்பிள் பக்கம் செல்ல மாட்டார்கள். எனவே, விலை குறித்த உங்கள் கட்டுரை வீண் என்றே நான் நினைக்கிறேன்.
இரா. முத்தரசன், சிதம்பரம்.

வி.எல்.சி. பிளேயரைப் பல ஆண்டுகள் பயன்படுத்தி வந்திருக்கிறேன். தங்கள் கேள்வி பதில் பகுதியில் அது குறித்த பதிலைப் பார்த்த பின்னரே, ஆடியோ மற்றும் விடியோ இயங்கும் வேகத்தை நாம் கட்டுப்படுத்தி இயக்கலாம் என்பதை அறிந்து கொண்டேன். தகவலுக்கு நன்றி.
செ. ஜீவன் கனகராஜ், திருப்பூர்.

இணைய முகவரிகளைச் சரியாகக் கொடுத்தும் தளங்கள் கிடைக்காத நிலையைத் தெளிவான பதிலாகத் தந்திருக்கிறீர்கள். நானும் பல நாள் இது போலத்தான் சிக்கலைச் சந்தித்துக் கொண்டிருந்தேன். இப்போதுதான், தவறுகள் பல இடங்களில் ஏற்படலாம் என்று புரிந்து கொண்டேன். நன்றி.
என். தேவசகாயம், திருப்பராய்த்துறை.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X