இதுதான் பேஸ்புக்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

03 அக்
2016
00:00

நாம் இணையம் பயன்படுத்தும் வழிகளை பேஸ்புக் முற்றிலுமாக மாற்றிவிட்டது. வளர்ந்த நாடுகளில் கூட, ஸ்மார்ட் போன்கள் வழி பேஸ்புக் பயன்படுத்துபவர்கள், இணையத்தைப் பயன்படுத்துகிறோம் என்பதை மறந்துவிடுகின்றனர். போகிற போக்கில், இனி இணையம் என்பதையே பேஸ்புக் என அழைக்கும் காலம் உருவாகலாம். அந்த அளவிற்குப் பயனாளர்களைத் தன் வசம் பேஸ்புக் கட்டிப் போட்டு வருகிறது.
பத்தாண்டுகளுக்கு முன், பேஸ்புக் வளர்ச்சி குறித்து கருத்து தெரிவித்தவர்களின் கணிப்புகளைப் பல மடங்கு மீறி, இன்று பேஸ்புக் வளர்ந்துள்ளது. கடந்த நான்கு ஆண்டுகளில் அதன் வளர்ச்சி அபரிதமானது. நான்கு ஆண்டுகளுக்கு முன்பு பேஸ்புக் வெளியிட்ட பங்கு வெளியீடு தோல்வியில் முடிந்தாலும், தற்போது உலகின் பெரிய அளவிலான முன்னணி நிறுவனங்களில், பேஸ்புக் நிறுவனமும் ஒன்று என்பதை மறக்க முடியாது. அதன் தோற்றம் வளர்ச்சி குறித்த சில தகவல்களை இங்கு காணலாம்.
மாதந்தோறும், பேஸ்புக் இணைய தளத்தினை 171 கோடி பேர் தொடர்ந்து பயன்படுத்தி வருகின்றனர். உலக அளவில், இணையம் பயன்படுத்துவோர் எண்ணிக்கை, ஏறத்தாழ 300 கோடி. இணைய உலகைப் பெரும் அளவிற்கு பேஸ்புக் ஊடுறுவி உள்ளது. பேஸ்புக் எடுக்கும் ஒவ்வொரு மாற்றத்திற்கான, மேம்பாட்டிற்கான நடவடிக்கைகளும், இணையப் பயனாளர்களின் எண்ணிக்கையை உயர்த்தி வருகிறது. சூரிய ஒளி மின் சக்தியில் பறக்கும் ஆள் இல்லா விமானங்கள், லேசர்கள், விண்வெளி துணைக் கோள்கள், ராக்கெட் மற்றும் செயற்கை நுண்ணறிவியல் அடிப்படையில் வடிவமைக்கப்பட்ட செயலிகள் என நாம் சயின்ஸ் கதைகளில் சந்திக்கும் சாதனங்களை, நிஜமாகவே பேஸ்புக் தன் செயல்பாடுகளுக்குக் கையாண்டு வருகிறது.
பேஸ்புக் நிறுவனத்திற்கு, அதி வேகமாக வளர்ந்து வரும் சந்தை இந்தியாவில் தான் ஏற்பட்டுள்ளது. சென்ற ஆண்டு, இந்தியாவில் இணையம் பயன்படுத்துவோர் எண்ணிக்கை 40% உயர்ந்துள்ளது. தொடர்ந்து உயர்ந்தும் வருகிறது. இதில் பேஸ்புக் பயன்படுத்துவோர் எண்ணிக்கை 14.2 கோடி.
விளம்பரம் வழியாக, இந்தியாவை உள்ளடக்கிய ஆசிய பசிபிக் நாடுகளின் பயனாளர் ஒருவர் மூலம் பேஸ்புக் ஒரு காலாண்டில் 1.74 டாலர் மட்டுமே வருமானமாக ஈட்டுகிறது. அமெரிக்கா மற்றும் கனடா நாடுகளில், இந்த வருமானம் 13.74 டாலராக இருந்து வருகிறது.
உலக அளவில் மிகப் பெரிய விளம்பர நிறுவனங்களில், கூகுள் நிறுவனத்தின் ஆல்பாபட் பிரிவிற்கு அடுத்த இரண்டாவது இடத்தில் பேஸ்புக் உள்ளது.
பேஸ்புக் நிறுவனத்திற்கு உரிமையான சமூக வலைத் தளங்களில், 18 முதல் 34 வயதுள்ளவர்கள், மற்ற சமூக வலைத்தளங்கள் அனைத்திலும் செலவழிக்கும் நேரத்தைக் காட்டிலும் கூடுதலாகச் செலவிடுகின்றனர். நாளொன்றுக்கு, பேஸ்புக் பயனாளர்கள், 800 கோடி விடியோ படங்களைச் சென்ற ஆண்டின், இறுதிக் காலாண்டில் கண்டு களித்தனர்.
பதிந்து வைக்கப்பட்ட விடியோ படங்களைக் காண்பதைக் காட்டிலும், இணைய தளத்தில் விடியோ படங்களை 'லைவ்' ஆகப் பார்க்கும் பழக்கத்தினைத் தன் பயனாளர்களிடம் கொண்டு செல்ல பேஸ்புக் விரும்புகிறது. இதற்கென 5 கோடி டாலருக்கு மேல் மதிப்பூதியமாகத் தருகிறடு. இது போல காட்டப்படும் படங்களில், நடுவே விளம்பரப் படங்களைக் காட்ட சோதனைகளை மேற்கொண்டு வருகிறது.
30 லட்சம் நிறுவனங்கள், பேஸ்புக்கின் விளம்பரதாரர்களாகத் தற்போது உள்ளனர். சென்ற அக்டோபர் முதல் பிப்ரவரி வரை, மாதந்தோறும் ஒரு லட்சம் புதிய விளம்பர தாரர்கள், பேஸ்புக் நிறுவனத்தில் இணைந்தனர்.
விளம்பரதாரர்கள், பேஸ்புக் நிறுவனத்தைத் தேடி வருவதால், விளம்பரக் கட்டணங்கள் சென்ற ஆண்டில் 9% உயர்த்தப்பட்டது.
அப்ளிகேசன் புரோகிராம்களை இன்ஸ்டால் செய்திடுகையில் காட்டப்படும் விளம்பரங்களே, பேஸ்புக் நிறுவனத்திற்கு அதிக வருமானத்தைத் தருகின்றன. இந்த ஆண்டில், அப்ளிகேஷன்கள் பதிவது 115 கோடி என்ற எண்ணிக்கையாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது சென்ற ஆண்டைக் காட்டிலும் 33% அதிகம். ஒவ்வொரு அப்ளிகேஷன் இன்ஸ்டால் செய்திடும்போதும், பேஸ்புக் நிறுவனம் 3.40 டாலர் விளம்பர வருமானமாகப் பெறுகிறது. இந்த ஆண்டு, இந்த வகையில், பேஸ்புக் 400 கோடி டாலர் வருமானமாகப் பெறும். இது கூகுள் பிளே ஸ்டோர் பெறும் வருமானத்தைக் காட்டிலும் அதிகமாக இருக்கும்.
பேஸ்புக் மெசஞ்சர் செயலியை நூறு கோடிப் பேருக்கு மேல் பயன்படுத்துகின்றனர். வாட்ஸ் அப் செயலியைப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கையும் நூறு கோடிக்கு மேலாக உள்ளது.
மெசஞ்சர் செயலியில், 5 கோடி வர்த்தக நிறுவனங்களின் அக்கவுண்ட்கள் இயங்குகின்றன. இவை தங்கள் வாடிக்கையாளர்களுடன், ஒரு மாத காலத்தில், நூறு கோடி செய்திகளுக்கு மேல் பகிர்ந்து கொள்கின்றன. Tencent's WeChat நிறுவனத்திற்கு 80.6 கோடி பேர் பயனாளர்களாக உள்ளனர். ஆனால், அக்கவுண்ட் வைத்திருக்கும் வர்த்தக நிறுவனங்களின் எண்ணிக்கை ஒரு கோடி தான்.
LINE செயலிக்கு 15.7 கோடி பயனாளர்கள் உள்ளனர். 20 லட்சம் வர்த்தக நிறுவனங்களின் அக்கவுண்ட்கள் இதில் செயல்படுகின்றன.
வாட்ஸ் அப் நிறுவனத்தை 2180 கோடி டாலர் கொடுத்தும், Oculus நிறுவனத்தை 200 கோடி டாலர் (ரொக்கம் மற்றும் பங்கு பரிவர்த்தனை மூலமாக) கொடுத்தும் பேஸ்புக் வாங்கியது. இது போன்ற பெரிய நிறுவனங்களை இனி வாங்கும் திட்டம் தனக்கு இல்லை என பேஸ்புக் நிறுவனம் மார்க் அறிவித்துள்ளார். ஆனால், பேஸ்புக் நிறுவனத்திடம், 2020 ஆம் ஆண்டில், உபரி வருமானமாக 2,600 கோடி டாலர் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
உலகின் ஐந்தாவது பெரிய பணக்காரராக இருக்கும் பேஸ்புக் நிறுவனர் மார்க் அவர்களின் சொத்துமதிப்பு 5,540 கோடி டாலர். இவரின் வயது 32 என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.தன் சொத்தின் பெரும் பங்கினை, உலகிற்கு நல்ல செயல்களை மேற்கொள்ள உதவியாகத் தர இருப்பதாக மார்க் ஸக்கர்பெர்க் அறிவித்துள்ளார்.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X