விண்டோஸ் 10ல் This PC வியூ
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

03 அக்
2016
00:00

விண்டோஸ் 7 மற்றும் விண்டோஸ் 8 சிஸ்டங்களில், பைல் எக்ஸ்புளோரர் திறக்கப்படுகையில், மாறா நிலையில், 'Computer' மற்றும் 'This PC' வியூவில் திறக்கப்பட்டது. இவற்றின் வழியாகப் பயனாளர்கள், அவர்களின் ஹோம் போல்டர்கள், லோக்கல் ட்ரைவ் மற்றும் நெட்வொர்க் லொகேஷன் ஆகியவற்றை எளிதில் காண முடிந்தது. ஆனால், விண்டோஸ் 10 சிஸ்டத்தில், முற்றிலும் புதிய வகையில் 'Quick Access' என்னும் வியூவில், பைல் எக்ஸ்புளோரர் திறக்கப்படுகிறது. இது ஆப்பிள் மேக் சிஸ்டத்தில் உள்ள 'All My Files' என்பதற்கு இணையானது. இந்த வியூவில், பயனாளர்கள் அடிக்கடி பார்க்கும் போல்டர்களையும் பைல்களையும் காணலாம். இது பலருக்கு விருப்பத் தேர்வாய் உள்ளது. இருப்பினும், விண்டோஸ் 7 சிஸ்டத்திலிருந்து அப்டேட் செய்த சில வாசகர்கள், தங்களுக்கு 'This PC' வியூ தான் பயனுள்ளதாய் உள்ளது எனக் கருத்து தெரிவித்துள்ளனர். ஒரு சிலர், விண்டோஸ் 10 சிஸ்டத்தில் இந்த வியூவினைப் பெற வழி உள்ளதா எனக் கேட்டுள்ளனர். ஏனென்றால், கம்ப்யூட்டரைத் திறமையுடன் இயக்க எண்ணுபவர்கள், தங்களுடைய கம்ப்யூட்டரின் ட்ரைவ், அதன் பார்மட்டிங் நிலை, நெட்வொர்க் பங்கீடு மற்றும் ட்ரைவில் தற்போது நமக்குப் பயன்படுத்தக் கிடைக்கும் காலி இடம் போன்றவற்றைத் தரும் 'This PC' தான் சிறந்தது என எண்ணுகின்றனர். மேலும், இந்த வியூவில் கிடைக்கும், ரிப்பன் டூல் பார், சிஸ்டம் ப்ராப்பர்ட்டீஸ் பார்க்க வசதி ஆகியவை, 'Quick Access' வியூவைக் காட்டிலும் கூடுதல் வசதிகளைத் தருவதாக எண்ணுகின்றனர்.
அதிர்ஷ்டவசமாக, இவர்களின் எண்ணங்களை நிறைவேற்றும் வகையில், விண்டோஸ் 10 சிஸ்டத்தில், பயனாளர்கள், தங்கள் பைல் எக்ஸ்புளோரர் எப்படி இருக்க வேண்டும் என விரும்புகின்றனரோ, அதனை மாறா நிலையில் அமைக்க வழிகளைத் தருகிறது. கீழ்க்காணும் வழிகளை மேற்கொள்ளவும்.
விண்டோஸ் 10 சிஸ்டத்தில், புதிய பைல் எக்ஸ்புளோரர் விண்டோ ஒன்றைத் திறக்கவும். பின் ரிப்பன் டூல் பாரில், View டேப்பில் கிளிக் செய்திடவும். தொடர்ந்து, வியூ டேப்பில், Options என்பதைக் கண்டறிந்து கிளிக் செய்திடவும். இது மாறா நிலையில், ரிப்பனில் வலது ஓரம் கிடைக்கும்.
இப்போது கிடைக்கும் Folder Options விண்டோவில், General டேப் திறந்திருப்பதனை உறுதி செய்திடவும். இங்கு Open File Explorer To என்ற கீழ் விரி பெட்டி திறக்கவும். இதில் This PC என்பதைத் தேர்ந்தெடுக்கவும். ஓகே கிளிக் செய்து, விண்டோவினை மூடவும்.
இனி கம்ப்யூட்டரை ரீ ஸ்டார்ட் செய்திடவோ, லாக் அவுட் செய்திடவோ தேவையில்லை. புதியதாக பைல் எக்ஸ்புளோரர் விண்டோவினைத் திறக்கவும். உடன், உங்கள் கம்ப்யூட்டர் This PC வியூவில் திறக்கப்படுவதனைக் காணலாம். இதுவே இனி மாறா நிலையில் கிடைக்கும். ஏற்கனவே இருந்த Quick Access View இனி கிடைக்காது என்ற நிலை இல்லை. இதுவும் கிடைக்கும். ஆனால், மாறா நிலையில் நீங்கள் தேர்ந்தெடுத்த This PC வியூ மட்டுமே இருக்கும்.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X