வாட்ஸ் அப் வென்றது
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

03 அக்
2016
00:00

சென்ற வார கம்ப்யூட்டர் மலரில், வாட்ஸ் அப் நிறுவனத்தின் தனி நபர் தகவல் கொள்கைக்கு எதிரான வழக்கு குறித்தும், வாட்ஸ் அப் தன்னிலை விளக்கம் அளித்தது குறித்தும், “இஷ்டம் இல்லேன்னா விலகிப் போகலாம்” என்ற தலைப்பில் கட்டுரை தரப்பட்டது. அந்த வழக்கில் தற்போது டில்லி உயர்நீதி மன்றம் தீர்ப்பினை வழங்கியுள்ளது. அதில், வாட்ஸ் அப் நிறுவனம் தன் வாடிக்கையாளர்கள் தரும் தனி நபர் தரும் தகவல்களை (தொலைபேசி எண், முகவரி, வசிக்குமிடம், பயன்படுத்தும் போன் மாடல் போன்றவை) பேஸ்புக் தளத்துடன் பகிர்ந்து கொள்வதனைத் தடுக்கவில்லை. இதில் ஒரே ஒரு ஆறுதலான விஷயம் என்னவென்றால், செப்டம்பர் 25க்கு முன் வாடிக்கையாளர்களிடம் இருந்து பெற்ற தகவல்கள் அனைத்தையும் தன் தளத்திலிருந்து வாட்ஸ் அப் நீக்கிவிட வேண்டும் என்பதுதான். ஆனால், வாட்ஸ் அப் செப்டம்பர் 25க்குப் பின் பெறும் தகவல்களைத் தைரியமாக, சட்டத்தின் பாதுகாப்புடன் பேஸ்புக் தளத்திற்கு வழங்கலாம் என்றாகிவிட்டது. இந்த தீர்ப்பில், ட்ராய், இது போன்ற மெசேஜிங் அப்ளிகேஷன்கள் குறித்து வரையறை செய்திட விதிகள் உருவாக்க வேண்டும் என உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்ற செப்டம்பர் 25 அன்று, வாட்ஸ் அப் பயன்படுத்தும் அனைவரின் வாட்ஸ் அப் பயன்பாடு நிறுத்தப்பட்டு, புதிய விதிமுறைகளை ஏற்றுக் கொள்கிறீர்களா? என்று கேட்டு, அதற்கு சம்மதம் தெரிவிப்பவர்களுக்கு மட்டுமே, வாட்ஸ் அப் பயன்பாடு அனுமதிக்கப்பட்டது. இதற்கு அனுமதி தருபவர்கள், வாட்ஸ் அப் அவர்கள் குறித்த தகவல்களை, பேஸ்புக் தளத்துடன் பகிர்ந்து கொள்ள அனுதித்தவர்களாவார்கள். இவற்றின் அடிப்படையில், விளம்பரங்கள், உங்கள் பேஸ்புக் தளங்களில் காட்டப்படும். விளம்பரங்களுக்கான நிறுவனங்களிடமிருந்து, பேஸ்புக் பெறும் வருமானம் உயரும்.
ஏன், உயர்நீதி மன்றத்தால், வாட்ஸ் அப் கோட்பாட்டிற்கு தடை விதிக்க முடியவில்லை. முன்பே கூறியபடி, வாட்ஸ் அப் தாங்கள் யாரையும் தங்கள் சேவையைக் கட்டாயப்படுத்திப் பயன்படுத்த முயற்சிக்கவில்லை என்றும், விரும்பாதவர்கள் விலகிக் கொள்ளலாம் என்றும் கூறியது, தீர்ப்பினை அதற்குச் சாதகமாக அமையும்படி செய்துவிட்டது.
இந்த தீர்ப்பு வாட்ஸ் அப் நிறுவனத்திற்குக் கிடைத்த வெற்றி என்றுதான் கூற வேண்டும். இந்தியாவில் வேறு எந்த மெசேஜிங் அப்ளிகேஷனும் இந்த அளவிற்கு வாடிக்கையாளர்களைப் பெற்றிருக்கவில்லை. தனி ஒரு நிறுவனத்தின் தன்னாட்சியாக இது அமைந்துவிட்டது.
மேலும், அரசு சார்பாக நீதி மன்றத்தில், தற்போது உள்ள விதிமுறைகள் அடிப்படையில், தடை விதிக்க முடியாது என்று கூறப்பட்டதுவும், வாட்ஸ் அப் நிறுவனத்திற்குச் சாதகமாக அமைந்துவிட்டது. ஆனால், இந்த தீர்ப்பு கொடுக்கும் சுதந்திரத்தை வைத்துக் கொண்டு வாட்ஸ் அப் மற்றும் பேஸ்புக் நிறுவனங்கள் என்ன செய்யப் போகின்றன? எப்படி பயனாளர்களின் தகவல்களைப் பயன்படுத்தித் தங்கள் வருமானத்தைப் பெருக்கிக் கொள்ளப் போகின்றன என்பது இனிமேல் தான் தெரியவரும்.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X