பெர்சனல் பிரேக்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

03 அக்
2016
00:00

கட்டற்ற மென்பொருட்கள் குறித்து தமிழக, ஏன், இந்திய மக்களிடையே சரியான விழிப்புணர்வு இல்லை. அதை நீக்கும் வகையில், மிகச் சரியாக அதன் கொள்கைகள், செயல்முறை குறித்து எழுதப்பட்டுள்ள கட்டுரை, நிச்சயம் இது குறித்த சரியான கண்ணோட்டத்தினை மக்களிடையே ஏற்படுத்தும். நம் இஷ்டப்படி, நம் சாப்ட்வேர் புரோகிராம்களை மாற்றி அமைக்கும் உரிமை நமக்கு வேண்டும்.
ஆர். ஜியாவுதீன், கும்பகோணம்.

பொதுவாகவே நம் சமுதாயம் பெண்களை இரண்டாந்தர குடிமக்களாகவே மதிக்கிறது. இலக்கியத்திலும் மற்றவற்றிலும் வேண்டுமானால், தெய்வம், தியாக உருவம் என்று பெண்களைப் போற்றலாம். ஆனால், நடைமுறை அப்படி இல்லை. இணையப் பயன்பாட்டிலும், மொபைல் பயன்பாட்டிலும் இந்த நடைமுறை பரவாமல் பார்த்துக் கொண்டால், பெண்களின் சக்தியுடன் நம் சமுதாயம் முன்னேறும். இதனை நாம் அனைவரும் உணர வேண்டும்.
ஆ. கார்த்திகேயன், பழநி.

பொதுவாக ஐபோன்களில் திரையைத் திறந்து அப்ளிகேஷன்களை இயக்க சற்று நேரம் ஆகும். ஐ.ஓ.எஸ். 10 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இது சற்று குறைக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சியைத் தருகிறது. போட்டோவுடன் குறிப்புகள் தரப்படுவது, அவற்றை வகை பிரித்துத் தருவது மற்றும் பிற புதிய வசதிகள் அனைத்தும், ஐபோனைப் பயன்படுத்தத் தூண்டும் வகையில் உள்ளன. இந்தியாவில் இந்த போன்கள் தயாரிக்கப்பட்டு, குறைவான விலையில் விற்பனை செய்யப்பட்டால், நிச்சயம் ஐபோனுக்கு நல்ல சந்தை இங்கு ஏற்படும்.
பேரா. ஆர். கலைராஜன், திருச்சி.

தன் வருமானத்தின் பெரும் பங்கினை மருத்துவ ஆய்விற்கு வழங்கியுள்ள பேஸ்புக் நிறுவனர் மார்க் அவர்களுக்கு நம் சமுதாயம் கடமைப்பட்டுள்ளது. இப்படிப்பட்ட மன உணர்வினை ஒவ்வொருவரும் கொண்டால், நிச்சயம் மனித இனம் மகிழ்ச்சியாக வாழ்வைத் தொடரும்.
கே. உலகநாதன், நாகர்கோவில்.

ஆப்பிள் ஐபோனுக்கான புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டம் ஐ.ஓ.எஸ்.10 குறித்து, அதன் அனைத்து அம்சங்கள் குறித்தும் தெளிவாகவும் விளக்கமாகவும் தரப்பட்டுள்ள கட்டுரை, ஐபோனைப் பயன்படுத்தாதவர்களை அதன் பக்கம் ஈர்க்கும் அளவிற்குச் சிறப்பாக உள்ளது. ஒரு பாடக் கட்டுரை போல உள்ளது. எழுதியவருக்கு நன்றியும் வாழ்த்துகளும்.
பேரா டாக்டர் எம். கணேசன், கோயமுத்தூர்.

வாட்ஸ் அப் சொல்வதும் சரிதான். இஷ்டம் இல்லேன்னா அதனை ஏன் பயன்படுத்த வேண்டும். இறுதித் தீர்ப்பு நிச்சயம் வாட்ஸ் அப் நிறுவனத்திற்குச் சாதகமாகத்தான் இருக்கும்.
எஸ். கயல்விழி, மதுரை.

ஓப்பன் சோர்ஸ் புரோகிராம்கள் குறித்து தவறான கருத்தினையே இதுவரை கொண்டிருந்தேன். இலவசம் என்று மட்டுமே எண்ணி இருந்தேன். தெளிவாக அவை குறித்து கட்டுரை எழுதிய ஆசிரியருக்கு பாராட்டும் நன்றியும்.
என். ஜெயமூர்த்தி, பாபநாசம்.

பேஸ்புக் குழுக்கள் பயனுள்ள வகையில் நமக்கு உதவுகின்றன. பலர் இதனை இன்னும் அறியாமல் உள்ளனர். இது குறித்து இன்னும் தெளிவாக அனைத்து விபரங்கள் அடங்கிய கட்டுரை ஒன்றைத் தங்களிடம் இருந்து எதிர்பார்க்கிறேன்.
டி. புஷ்பா பரமேஸ்வரன், திருவண்ணாமலை.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X