சாம்சங் காலக்ஸி ஏ9 ப்ரோ
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

03 அக்
2016
00:00

இந்த மாத தொடக்கத்தில் சாம்சங் நிறுவனம், தன்னுடைய காலக்ஸி ஏ9 ப்ரோ ஸ்மார்ட் போனை விற்பனைக்குக் கொண்டு வந்தது. திரை ஆறு அங்குல அளவில், 1920×1080 பிக்ஸெல் அடர்த்தியுடன், Full HD Super AMOLED டிஸ்பிளே கொண்டுள்ளது. திரைக்கு கார்னிங் கொரில்லா கிளாஸ் 4 பாதுகாப்பு பூச்சாகத் தரப்பட்டுள்ளது. மல்ட்டி டச் வசதி கொண்டுள்ளது.
இதன் ப்ராசசர் ஆக்டா கோர் Snapdragon 652. Adreno 510 ஜி.பி.யு. இணைந்துள்ளது. இந்த ஸ்மார்ட் போனை இயக்குவது ஆண்ட்ராய்ட் 6 மார்ஷ்மலாய். ராம் மெமரி 4 ஜி.பி. ஸ்டோரேஜ் மெமரி 32 ஜி.பி. இதனை மைக்ரோ எஸ்.டி.கார்ட் கொண்டு 256 ஜி.பி. வரை அதிகப்படுத்தலாம்.
இந்த ஸ்மார்ட் போனின் பரிமாணம் 161.7 x 80.9 x 7.9 மிமீ. எடை 210 கிராம். இதன் வலது புறத்தில், பவர் ஸ்விட்ச் மற்றும் இரண்டு சிம் கார்டுகளுக்கான ட்ரே தரப்பட்டுள்ளது. இடது புறத்தில் இரண்டு ஸ்பீக்கர்கள் உள்ளன. போனைச் சுற்றித் தரப்பட்டுள்ள அலுமினிய மெட்டல் லைனிங், போனுக்கு சிறந்த தோற்றத்தை அளிக்கிறது. வழக்கம் போலத் தரப்படும் சென்சார்கள் இயங்குகின்றன. ஹோம் பட்டன் அருகே, விரல் ரேகை பெறும் இடம் உள்ளது.
கீழாக, ஆன்டென்னா பேண்ட், 3.5 மிமீ ஆடியோ ஜாக், மைக்ரோ யு.எஸ்.பி. போர்ட், லவுட் ஸ்பீக்கர் கிரில் மற்றும் மைக் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன. போன் மேலாக இன்னொரு மைக் உள்ளது. மைக்ரோ எஸ்.டி.கார்ட் ஸ்லாட் அமைந்துள்ளது. பின்புறமாக இயங்கும் கேமரா, ஆட்டோ போகஸ் மற்றும் எல்.இ.டி.ப்ளாஷ் இணைந்ததாக 16 எம்.பி. திறனுடன் அமைக்கப்பட்டுள்ளது. முன்புறக் கேமரா 8 எம்.பி. திறனுடன் உள்ளது. பதிவு செய்திடும் வசதியுடன், ஸ்டீரியோ இசையுடன் எப்.எம். ரேடியோ இயங்குகிறது. போட்டோ, விடியோ மற்றும் டாகுமெண்ட் எடிட்டர்கள், எம்.பி. 4 மற்றும் எம்.பி.3 பிளேயர்கள் தரப்பட்டுள்ளன.
நெட்வொர்க் இணைப்பிற்கு 4ஜி எல்.டி.இ., வை பி, புளுடூத் மற்றும் என்.எப்.சி. தொழில் நுட்பங்கள் இயங்குகின்றன. இதனுள்ளாக அமைக்கப்பட்டுள்ள பேட்டரியின் திறன் 5000 mAh. தொடர்ந்து 33 மணி நேரம் பேசும் சக்தியை அளிக்கிறது. இதனை அதி வேக முறையில் சார்ஜ் செய்து கொள்ளலாம்.
கருப்பு, வெள்ளை மற்றும் தங்க வண்ணங்களில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ஸ்மார்ட் போனின் அதிக பட்ச விலை ரூ. 32,490.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X