மொபைல் சேவை இல்லாமல் போன் பயன்படுத்த
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

10 அக்
2016
00:00

ஸ்மார்ட் போன்களின் விலை தொடர்ந்து குறைந்து கொண்டே வருவதாலும், மொபைல் போன் செயலிகளின் பயன்பாடு விரிந்தும், பலவகையாகவும் பெருகிக் கொண்டே செல்வதாலும், பலரும் ஒன்று அல்லது இரண்டு ஸ்மார்ட் போன்களை வாங்கிப் பயன்படுத்துகின்றனர். புதிய மாடல் ஸ்மார்ட் போன்கள், சந்தையில் அறிமுகமானவுடன், அவற்றை உடனே வாங்கிப் பயன்படுத்துவோர் பலர், அதற்கு முன் பயன்படுத்திய ஸ்மார்ட் போன்களை, சிம் கார்ட் இல்லாமல், மொபைல் சேவை அக்கவுண்ட் இல்லாமல் காட்சிப் பொருளாக வைத்துள்ளனர். இந்த போன்களை, மொபைல் சேவை நிறுவனங்களிடம் சேவை அக்கவுண்ட் பெறாமலும், சிம் போடாமலும், பல வகைகளில், வழிகளில் பயன்படுத்தலாம். அந்த வழிகளை இங்கு காணலாம்.
வாட்ஸ் அப்இப்போதெல்லாம் எஸ்.எம்.எஸ். தகவல்களை மொபைல் போன் சேவை நிறுவனங்கள் வழியே அனுப்புவது பெரும்பாலும் குறைந்துவிட்டது. WhatsApp போன்ற டெக்ஸ்டிங் செயலிகள் இருக்கையில், போன்களுக்கென கட்டணம் செலுத்தாமல், இந்த செயலிகளைப் பயன்படுத்தி, மெசேஜ் அனுப்புவது பெருகி வருகிறது.

வாட்ஸ் அப்




வெகு காலமாகவே புழக்கத்தில் இருந்தாலும், பேஸ்புக் நிறுவனம், வாட்ஸ் அப் நிறுவனத்தை 120 கோடி டாலர் கொடுத்து வாங்கிய போதுதான், அதனை ஆர்வமுடன் பயன்படுத்தப் பலர் முன்வந்தனர். குறைந்த காலத்திலேயே 90 கோடி பேர் புதிய பயனாளர்களாக உருவாகினர். கட்டணம் இல்லாமல் பேசுவதற்கும், டெக்ஸ்ட் அனுப்புவதற்கும் வாட்ஸ் அப் உதவியதால், இதன் வாடிக்கையாளர் எண்ணிக்கை இன்றும் உயர்ந்து வருகிறது.
வாட்ஸ் அப், வழக்கமான டெக்ஸ்ட் மெசஞ்சர் செயல்பாட்டுடன், கூடுதலாகப் பல வசதிகளையும் தருகிறது. குழுக்களை உருவாக்கி, அவர்களுக்குள் தகவல்களைப் பரிமாறிக் கொள்ளும் வசதி இதில் மிகச் சிறப்பானதாக உருவெடுத்துள்ளது. கட்டணம் பெற்று மொபைல் சேவை தரும் நிறுவனங்கள் கூட இது போன்ற வசதிகளைத் தரவில்லை.
பலரும் இன்று தாங்கள் இடம் பெற்றுள்ள குழுக்களில் நுழைந்து டெக்ஸ்ட், எமோஜிக்கள், படங்கள், விடியோ பைல்கள் என அனைத்தும் பயன்படுத்துகின்றனர். உலகளாவிய நிலையில், இந்த டெக்ஸ்ட் விண்டோக்கள் ஒரே மாதிரியான வடிவமைப்பை மேற்கொண்டுள்ளதால், இது எளிமையாகப் பயன்படுத்தப்படுகிறது.
உங்கள் மொபைல் ஸ்மார்ட் போனில், நீங்கள் எந்தவித ஆப்பரேட்டிங் சிஸ்டம் பயன்படுத்தினாலும், வாட்ஸ் அப் செயலி அதற்கேற்ற பதிப்பினைத் தருகிறது. அனைத்து அப்ளிகேஷன் ஸ்டோர்களிலும் வாட்ஸ் அப் செயலி, இலவசமாகத் தரவிறக்கம் செய்து கொள்ளக் கிடைக்கிறது. ஆப்பிள் போன்களுக்கு https://geo.itunes.apple.com/us/app/whatsapp-messenger/id310633997?mt=8&at=1010loXs&ct=229643 என்ற தளத்தையும், கூகுள் போன்களுக்கு https://play.google.com/store/apps/details?id=com.whatsapp&hl=en என்ற இணைய தளத்தையும் அணுகலாம்.

ஸ்கைப்




மொபைல் சேவை எதுவுமின்றி, ஸ்மார்ட் போன் ஒன்றில், விடியோ வழி தொடர்பு கொள்ளப் பலரும் பயன்படுத்துவது 'ஸ்கைப்' செயலியாகும். உங்கள் ஸ்மார்ட் போனில், ஸ்கைப் செயலியை இன்ஸ்டால் செய்து, போனை, வை பி இணைப்பில் கொண்டு சென்றால், உடனே அதன் மூலம் நாம் இன்னொரு முனையில் இதே போல ஸ்கைப் செயலியைப் பதிந்து வைத்து இயக்குபவரின் போனைத் தொடர்பு கொள்ளலாம். விடியோ அழைப்பு கொடுத்து அழைக்கலாம். அதே போல, உங்களைத் தொடர்பு கொண்டு அழைத்துப் பேச வேண்டும் என விரும்புபவர், உங்கள் பெயர் டைப் செய்து தேடி அழைக்கலாம். நீங்கள் பேச வேண்டும் என அழைக்கப்படுபவர், எந்த பெயரில் ஸ்கைப் முகவரி கொண்டுள்ளார் என்பதை அறிந்திருந்தால், நீங்கள் அவரைத் தேடி அறியலாம். அவர், தன் போனில் ஸ்கைப் இயக்கி தொடர்பில் உள்ளாரா இல்லையா என ஸ்கைப் செயலி சொல்லிவிடும். இதற்கு எந்த மொபைல் சேவையும் தேவை இல்லை.
ஸ்கைப் செயலி எந்த மொபைல் சாதனத்திலும் செயல்படும். உங்களுடைய போனில், தொடர்பு கொள்ளப்படுபவர் பட்டியலில் (Contact List) இருப்பவர், தன் போனில் ஸ்கைப் அக்கவுண்ட் வைத்திருந்தால், அவர்களுக்கு மெசேஜ் அனுப்ப முடியும். அவர் தன் ஸ்கைப் செயலியை இயக்கும்போது, மெசேஜை அவர் படிக்க முடியும்.
ஆப்பிள் போன்களுக்கான ஸ்கைப் செயலியை https://geo.itunes.apple.com/us/app/skype-for-iphone/id304878510?mt=8&at=1010loXs&ct=229643 என்ற முகவரியிலும், ஆண்ட்ராய்ட் போன்களுக்கான ஸ்கைப் பதிப்பினை, https://play.google.com/store/apps/details?id=com.skype.raider&hl=en என்ற முகவரியிலும் இலவசமாகப் பெறலாம்.
இதே போல, உங்கள் ஸ்மார்ட் போனில் நீங்கள் பேஸ்புக் மெசஞ்சர் செயலியை வை பி இணைப்பு வழியாகப் பயன்படுத்துகையில், அதன் சேட் விண்டோ மூலம், உங்கள் நண்பர்கள் வட்டத்தில் இருப்பவர்களை டெக்ஸ்ட் வழியாகவும், விடியோ அழைப்பு வழியாகவும் தொடர்பு கொள்ளலாம். அவர்களுக்கும் வை பி இணைப்பு இருந்தால், இரு பக்கமும் மொபைல் சேவை கட்டணம் எதுவும் ஏற்படாது. மொபைல் சேவை இல்லாத போன்கள் வழியாக இந்த சேவையைப் பயன்படுத்தவும் முடியும்.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X